இந்திய வர்த்தக சந்தையில் ராக்கெட் வேகத்தில் வளர்ந்த அதானி குழுமம், அமெரிக்காவின் ஷாட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கை மூலம் தேக்கம் அடைந்துள்ளது. இந்த பிரச்சனையில் இருந்து வெளியில் வர கௌதம் அதானி தலைமையிலான நிர்வாகம் பல முயற்சிகளை செய்து வருகிறது.
அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எக்னாமிக் சோன் (APSEZ), செவ்வாய்க்கிழமை அதன் கடனில் நிலுவையில் சுமார் 130 மில்லியன் டாலர்களை முன்கூட்டியே செலுத்துவதாகக் கூறியுள்ளது. அதானி குழுமம் கிட்டத்தட்ட 413 மில்லியன் டாலர் மதிப்புள்ள கடனை முன்கூட்டியே செலுத்துவதற்கு ஏற்கனவே தயாரானது குறிப்பிடத்தக்கது.

அதானி குழும நிறுவனம் கடந்த மாதம், 2024ல் முதிர்ச்சியடையும் 3.375 சதவீத டாலர் மதிப்பிலான பத்திரங்களுக்கு முன்கூட்டியே பணம் செலுத்த உள்ளது. இதன் மூலம் அதானி குழுமம் 130 மில்லியன் டாலர் வரையிலான பத்திரங்கள் வாயிலாக பெறப்பட்ட கடனை திரும்ப செலுத்தி கடன் சுமையை குறைக்க உள்ளது.
கடந்த மாதம் அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எக்னாமிக் சோன் நிறுவனம், விரைவில் முதிர்வு அடைய கூடிய சில கடன் பத்திரங்களுக்கு முன்கூட்டியே பணத்தை திருப்பிச் செலுத்தும் திட்டத்தைக் கூறியது. இதை உறுதி செய்யும் வகையில் தற்போது 2024 ஆம் ஆண்டில் முதிர்வு அடைய உள்ள 3.375 சதவீத senior notes பத்திரத்தின் மொத்த கடன் தொகையில் சுமார் 130 மில்லியன் டாலர் வரையிலான தொகையை திரும்பி செலுத்த உள்ளது.
அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எக்னாமிக் சோன் அறிவிப்பில் மொத்த நிலுவை தொகையான 520 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன் பத்திரங்களில் அடுத்த 4 காலாண்டில் ஒவ்வொரு காலாண்டுக்கும் 130 மில்லியன் டாலர் அளவிலான தொகையை திரும்பி செலுத்த உள்ளதாக அறிவித்தது. இதில் முதல் தவணையை அடுத்த சில நாடுகளில் செலுத்த உள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து இன்றைய வர்த்தகத்தில் அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எக்னாமிக் சோன் நிறுவன பங்குகள் 1.31 சதவீதம் உயர்ந்து 693 ரூபாயாக உள்ளது. அதானி போர்ட்ஸ் 130 மில்லியன் டாலர் அளவிலான தொகையை பத்திர கடனுக்கு செலுத்துவதை உறுதி செய்துள்ள நிலையில் அதானி பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் இந்நிறுவனம் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறது.
மேலும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 114 பில்லியன் டாலர் வரையில் இழந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications