ஹிண்டர்ன்பர்க் சரியான ஆய்வு செய்யவே இல்ல.. எல்லாம் தவறு.. அதானி குழுமம் ஒரே போடு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையானது, அதானி குழுமத்தின் மீதான திட்டமிட்ட தாக்குதல் என தெரிவித்துள்ளது.

Recommended Video

Adani VS Hindenburg | US-ல் நடந்த Balloon விபத்திற்கும்...Adani Shares சரிவிற்கும் என்ன தொடர்பு?

அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பினை அதிகரிக்கவும், அதிகமாக உள்ளதாகவும் உயர்த்தி காட்ட அதானி குழுமம் பல்வேறு மோசடியான நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் சுட்டிக் காட்டியது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அதானி குழுமம் 413 பக்க அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அபாண்டம்.. ஹிண்டர்ன்பர்க் மீது சட்டபூர்வ நடவடிக்கை.. அதானியால் குழப்பத்தில் முதலீட்டாளர்கள்! அபாண்டம்.. ஹிண்டர்ன்பர்க் மீது சட்டபூர்வ நடவடிக்கை.. அதானியால் குழப்பத்தில் முதலீட்டாளர்கள்!

அதானி குழுமத்தின் மீது குற்றசாட்டு

அதானி குழுமத்தின் மீது குற்றசாட்டு

இந்த அறிக்கையில் இது அதானி குழுமத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டு அல்ல. மாறாக இது இந்தியாவின் மீது நிகழ்த்தப்பட்டது. இது இந்தியாவின் சுதந்திரம், ஒற்றுமை, ஜனநாயக தரம், வளர்ச்சிக்கான பாதை மற்றும் இலக்குகளின் மீது திட்டமிட்ட தாக்குதல் என குற்றம் சாட்டியுள்ளது.

ஆதாரமற்ற தகவல்கள்

ஆதாரமற்ற தகவல்கள்

ஆக அதானி குழுமத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் என்பது பொய்யானவை. இது பொய்யான தகவல்கள். ஆதாரமற்ற தகவல்கள்,. உள்நோக்கத்துடன் கூடிய குற்றச்சாட்டுகள் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் முன் வைத்துள்ளது. மேலும் அதானி குழுமம் பெரும் வளர்ச்சியினை கண்டுள்ள நிலையில், இப்படி ஒரு குற்றச்சாட்டினை ஹிண்டர்ன்பர்க் முன் வைத்துள்ளது. இது எங்கள் மீதான நம்பிக்கையை தகர்க்கும் ஒரு செயல் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

88 கேள்விகளுக்கு பதில்?

88 கேள்விகளுக்கு பதில்?

இது சுய நலத்திற்காக வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை. இது பத்திரங்கள் மற்றும் அன்னிய செலாவணி சட்டங்கள் மீதான சட்ட மீறலாகும். இது ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் எழுப்பிய 88 கேள்விகளில், 65 கேள்விகளுக்கு விளக்கம் அளித்து பதிலளித்துள்ளது. மீதமுள்ள 23 கேள்விகளில் 18 கேள்விகளில் பங்குதாரர்கள் மற்றும் அதானி குழுமம் சாராதவை ஆகும். மீதமுள்ள 5 கேள்விகள் அடிப்படையற்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

 தவறான தகவல்கள்

தவறான தகவல்கள்

இதற்கிடையில் இது குறித்து அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜுகேந்திர் சிங், ஹிண்டர்ன்பர்க் சரியான ஆய்வினை செய்யவில்லை. தவறான தகவல்களை கொடுத்துள்ளது. ஹிண்டர்ன்பர்க் ஏன் இப்படி தவறாக சித்தரித்தார்கள் என்பதையும் கேள்வி கேட்க வேண்டும் என கூறியுள்ளார். ஹிண்டர்ன்பர்க் கேட்ட கேள்விகளில் 68 கேள்விகளை ஏன் தவறாக சித்தரித்தார்கள் என கேளுங்கள் என்று சிங் கூறினார்.

அவ்வளவு திறன் இல்லை

அவ்வளவு திறன் இல்லை

ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் தவறான அறிக்கையினை போல தவறான எந்தவொன்றையும் அதானி் குழுமத்தில் கண்டுபிடிக்க முடியாது. மேலும் அதானி குழுமம் போன்ற பெரிய நிறுவனங்களை ஆய்வு செய்யும் திறனுக்கான கேள்வியினையும் எழுப்பியுள்ளது. 4 பார்ட்னர்கள் மற்றும் 11 ஊழியர்களை கொண்ட ஒரு நிறுவனத்தின் திறனை பற்றியும் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த நிறுவனம் இதுபோன்றதொரு ஒரு பெரிய பணியினை செய்யும் திறன் கொண்டதாக தெரியவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இன்று என்ன நிலவரம்?

இன்று என்ன நிலவரம்?

அதானி குழுமம் ஹிண்டர்ன்பர்க் இடையேயான இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் அதானி குழும பங்குகள் இன்றும் சில பலத்த சரிவினைக் கண்டுள்ளன.

அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட், அதானி போர்ட்ஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி பவர், அதானி வில்மர் என பல பங்குகள் இன்றும் சரிவில் காணப்படுகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Hindenburg didn't do proper research, all misinformation: Adani Group CFO

Hindenburg didn't do proper research, all misinformation: Adani Group CFO
Story first published: Monday, January 30, 2023, 13:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X