இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக குழுமமாக இருக்கும் அதானி குழுமத்தின் பங்குகளின் விலையை முறைகேடாக உயர்த்தியதில் முக்கிய பங்கு வகித்த வினோத் அதானிக்கு சொந்தமான மொரிஷியஸ் நிறுவனத்தில் செபி தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவருக்கு பங்கு இருப்பு உள்ளதாக அமெரிக்க ஷார்ட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தெரிவித்தது மட்டும் அல்லாமல் அதானி குழுமம் - புச் குடும்பத்திற்கு மத்தியில் இருக்கும் தொடர்பு, செபி தலைவர் பதவியில் இருந்துகொண்டு மாதபி புச் செய்த தவறுகளை ஹிண்டன்பர்க் ரிசர்ச் ஆகஸ்ட் 10ஆம் தேதி அறிக்கையாக வெளியிட்டது.
இதை மாதபி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் முழுமையாக மறுத்து முதல் அறிக்கையை சில மணிநேரத்தில் வெளியிட்டது. இதை தொடர்ந்து ஆகஸ்ட் 11ஆம் தேதி மாலையில் ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளுக்கு முழு விளக்க அறிக்கையை மறுத்த நிலையில், மாதபி பூரி புச் சார்பாக வெளியிடப்பட்டது. தற்போது இதற்கும் ஹிண்டன்பர்க் பதிலடி கொடுத்துள்ளது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி இரவு 11.17 மணிக்கு டிவிட்டர் பதிவை இதுவரையில் 2.5 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.

ஹிண்டன்பர்க் நிறுவனம் டிவிட்டரில், மாதபி பூரி புச் விளக்க அறிக்கைக்கு மீண்டும் பதிலடி கொடுத்தும், பல கேள்விகளை முன்வைத்துள்ளது. இதில் ஹிண்டன்பர்க், மாதவி புச் தனது பதிலை வெளியிட்டுள்ளதில், அவர் பல முக்கியமான தகவல்களை ஒப்புக்கொண்டுள்ளார், இதோடு எங்களுக்குப் பல கேள்விகள் எழுந்துள்ளது.

அதன்படி, அவர் பெர்முடா மற்றும் மொரிஷஸில் உள்ள மர்மமான பண்டில் முதலீடு செய்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், இந்த நிதியை நிர்வகித்தவர் அவரது கணவரின் சிறு வயது நண்பரும், அதானி குழுமத்தின் உயர் அதிகாரியான அனில் அஹூஜா என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
SEBI, அதானி குழுமத்தின் பண மோசடி தொடர்பாக விசாரணை நடத்தியபோது, மாதவி புச் தனது சொந்த நிதியையும், இந்த மர்மமான பண்டில் முதலீடு செய்திருந்தார் என்பது தெரியவந்துள்ளது. இது பெரும் பிரச்சனையாகும்.
மாதவி புச் 2017-ஆம் ஆண்டு SEBI-யில் நியமிக்கப்பட்ட போது, அவர் தொடங்கிய இரண்டு கண்சல்டிங் நிறுவனங்களிலும் அவரின் தொடர்பைத் துண்டிக்கப்பட்டதாகவும், அவரது கணவர் 2019-ஆம் ஆண்டு முதல் அதை நடத்தியதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், 2024 மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி, Agora Advisory Limited (India) நிறுவனத்தில் 99 சதவிகித பங்குகளை மாதபி புச் பெயரில் தான் உள்ளது, அவருடைய கணவர் பெயரில் இல்லை. அந்த நிறுவனம் இன்னும் செயல்பட்டு வருவதாகவும், வருவாய் ஈட்டி வருவதாகவும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் தெரிவித்துள்ளது.

மேலும், மாதவி புச் 2022 மார்ச் 16-ஆம் தேதி வரை சிங்கப்பூரில் உள்ள Agora Partners Singapore என்ற தனது நிறுவனத்தில் 100 சதவிகித பங்குகளை வைத்திருந்தார். SEBI தலைவராக நியமிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகே அந்த பங்குகளைத் தனது கணவருக்கு மாற்றியுள்ளார்.
இந்த புதிய தகவல்கள் அதானி விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. SEBI தலைவர் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications