ஆசியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான கெளதம் அதானி தலைமையிலான அதானி குழுமம், பங்கு சந்தையில் கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய ஏற்றத்தினை கண்டன.
இப்படி தொடர் ஏற்றத்திற்கு மத்தியில் தான் அதானி குழுமம் மோசமான பல குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதாக கூறி, அமெரிக்காவின் பிரபல ஆய்வு நிறுவனமான ஹிண்டர்ன்பர்க் குற்றம் சாட்டியது.
இந்த அறிக்கையானது வெளியான சமயத்திலேயே அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியினை சந்தித்தன.
கடும் வீழ்ச்சி
அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், அதன் வரவு செலவு அறிக்கையில் மோசடி, வரி ஏய்ப்பு, மோசடியாக பண பரிமாற்றம், போலியான பெயரில் நிறுவனங்கள், உறவினர்களை பயன்படுத்தி போலியான பரிவர்த்தனை அறிக்கை என பல குற்றச்சாட்டுகளை அடுக்காக முன்வைத்தது. இதற்கிடையில் தான் கடந்த ஜனவரி 25 அன்றே அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியினை கண்டன.
ஆதாரமற்ற தகவல்கள்
அதானி குழுமமோ இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இது தவறான தகவல். இது எங்களின் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தும் விதமாக வந்த அறிக்கை. எங்களின் வீழ்ச்சியில் ஹிண்டர்ன்பர்க் பலனடைய பார்க்கின்றது. முதலீட்டாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை குறைக்க பார்க்கிறது என பரபரப்பானதொரு கருத்தினையும் முன் வைத்தது.
ஹிண்டர்ன்பர்க்கிற்கு எச்சரிக்கை
அதானி நிறுவனங்களின் சரிவில் பலனை அடையவே ஹிண்டர்ன்பர்க், இப்படி செய்துள்ளது என்றும் அதானி தரப்பில் கூறப்பட்டது. மேலும் ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் எச்சரிக்கை விடுத்தது.
நிலைபாட்டில் மாற்றம் இல்லை
எனினும் இதற்கெல்லாம் நாங்கள் அசர மாட்டோம் எனும் விதமாக ஹிண்டன்பர்க் நிறுவனம், தங்களது நிலைப்பாட்டில் இருந்து மாற மறுத்துள்ள நிலையில், கடந்த 2 ஆண்டுகளாகவே தாங்கள் செய்த ஆழமான ஆய்வுக்கு பிறகே இந்த ஆய்வறிக்கையினை வெளியிட்டோம் என விளக்கம் கொடுத்துள்ளது.
சட்ட நடவடிக்கை எடுங்கள்
எனினும் அதானி குழுமமோ போதிய சரியான தகவல்களை வைத்து ஹிண்டர்ன்பர்க் ஆய்வு செய்யவில்லை. எங்களிடம் எந்த தொடர்பும் கொள்ளவில்லை. இது தவறானதொரு தகவல் என்றும் கூறியுள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் அதானி குழுமத்திடம் நாங்கள் உங்களிடம் பல கேள்விகளை எழுப்பினோம். ஆனால் நீங்கள் எதற்குமே பதில் கூறவில்லை. ஆக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் எடுக்கலாம் என தெரிவித்துள்ளது.
2வது நாளாக சரிவில் அதானி பங்குகள்
மொத்தத்தில் இரண்டாவது நாளான இன்றும் அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியினை கண்டுள்ளன. இதற்கிடையில் அதானி குழும பங்குகளின் சந்தை மதிப்பு 2.37 லட்சம் கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. குறிப்பாக அதானி டோட்டல் டோட்டல் கேஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 76,000 கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது. அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 63,700 கோடி ரூபாய் சந்தை மதிப்பினை இழந்துள்ளது.
இவ்வளவு சரிவா?
அதானி குழுமத்தின் இந்த இரு பங்குகளும் இன்று 15% கடுமையான சரிவினைக் கண்டுள்ளது. இதே 10 அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலையானது, கடந்த ஜனவரி 24ம் தேதியில் இருந்து, 12% சரிவினைக் கண்டு, 16.83 லட்சம் கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இது முன்னதாக 19.20 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
பங்குகள் பலத்த சரிவு
அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு விலையானது 13.41% சரிவினைக் கண்டு, 2175 ரூபாயாக வர்த்தகமாகியது. இதே அதானி டோட்டல் கேஸ் பங்கின் விலையானது 14.88% குறைந்து, 3118.60 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இதே அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமை பங்கு வெளியீடானது இன்று வெளியாகியது. இதற்கிடையில் இதன் பங்கு விலையானது 2.38% சரிவினைக் கண்டு, 3309.15 ரூபாய் என்ற லெவலில் காணப்பட்டது.
லோவர் சர்க்யூட் ஆன பங்குகள்
இதே அதானி வில்மர் பங்கின் விலையானது இன்று 5% சரிவினைக் கண்டு, லோவர் சர்க்யூட் ஆகி 517.30 ரூபாயாகவும் காணப்பட்டது. இதே அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 3.20% சரிவினைக் கண்டு 690.05 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இதே அதானி கீரின் நிறுவனத்தின் பங்கு விலையானது, 9.55% சரிவினைக் கண்டு, 1678.50 ரூபாயாகவும், அதானி குழுமத்தின் சிமெண்ட் பங்குகளான ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் பங்கு விலையானது 5 - 5.5% வரையில் சரிவினைக் கண்டும், இதே என் டி டி வி பங்கின் விலையானது லோவர் சர்க்யூட் ஆகி 5% குறைந்து, 256.35 ரூபாய் என்ற லெவலில் காணப்பட்டது.
இவ்வளவு இழப்பா?
அதானி கீரின் நிறுவனம் 35,562 கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மதிப்பினை கடந்த இரண்டு அமர்வுகளில் கண்டுள்ளது. இதே அதானி போர்ட்ஸ் & செஸ் நிறுவனம் மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது ஒவ்வொன்றும் 14,000 கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது. இதே அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் அதானி பவர் நிறுவனங்கள் 10,000 கோடி ரூபாய் மதிப்பினையும் இழந்துள்ளன. இதே அதானி வில்மர் நிறுவனம் மற்றும் ஏசிசி நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 7200 கோடி ரூபாய் சரிவினையும் கண்டுள்ளது.
செபியின் முடிவு?
அதானி குழுமம், ஹிண்டர்ன்பர்க் இடையேயான இந்த பிரச்சனையை, தற்போது செபியும் துருவ ஆரம்பித்துள்ளது. மேலும் அதானி குழுமத்தின் அறிக்கைகளை முழுமையாக ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. இது மேற்கொண்டு பிரச்சனைகளை பூதாகரமாக்கியுள்ளது எனலாம். மொத்தத்தில் அதானி குழுமத்திற்கு இது போறாத காலமே.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications