அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள், உரிமைப் பங்கினை விற்பனை செய்ய நாளை திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அதானி குழுமம் பல ஆண்டுகளாகவே மோசடியான வரவு செலவு அறிக்கை, வரி ஏய்ப்பு, சட்ட விரோதமான பணபரிவர்த்தனை என மோசடிகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் பிரபல ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் கூறியது.
இந்த குற்றச்சாட்டினை அடுத்து அதானி குழும நிறுவனங்கள் கடந்த புதன்கிழமையன்றே பலத்த சரிவினைக் கண்டன.
குமுறும் அதானி
இதற்கிடையில் அதானி குழும நிறுவனங்களில் இனியும் சற்றே ஏற்ற இறக்கம் இருக்கலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது.
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் எஃப் பி ஓ-விலும் இதன் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதானி குழுமம் தரப்பில் ஹிண்டர்ன்பர்க்கின் இந்த ஆய்வறிக்கையானது அதானி குழும பங்குகளின் சரிவில் பலனடையத் தான் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சட்ட பூர்வ நடவடிக்கை
அதானி குழுமம் ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்திற்கு எதிராக சட்டபூர்வ நடவடிக்கையையும் எடுப்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹிண்டர்ன்பர்க்கின் அறிக்கையானது அதானி குழுமத்தின் நன் மதிப்பினை கெடுக்கும் விதமாக வந்துள்ளது. ஆக இதற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்ற தொனியில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜதீன் ஜலுந்த்வாலாவின் கருத்து
அதானி குழுமத்தின் சட்ட பிரிவு தலைவர் ஜதீன் ஜலுந்த்வாலா வெளியிட்டுள்ள அறிக்கையில், அதானி குழும பங்குகள் ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த ஏற்ற இறக்கம் என்பது ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையால் ஏற்பட்டது. இது மிகுந்த கவலை அளிக்கிறது. இந்த சரிவில் ஹிண்டன்பர்க் பலடையலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
நிறுவனம் அதிர்ச்சி
ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையால் தாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தலைமை நிதி அதிகாரி ஜுகேந்தர் சிங் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் அறிக்கை முன்னதாக கூறியிருந்தது.
இது அதானி குழுமத்தின் எஃப்.பி.ஓ-வில் தாக்கத்தினை ஏற்படுத்தும் ஒரு முயற்சி. அதானி குழும பங்குகள் சரிவினைக் கண்டால் அதன் மூலம் பலனடைய திட்டமிட்டிருக்கலாம் என அதானி குழுமம் குற்றம் சாட்டியுள்ளது.
இது பொய்யானது?
ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் வரவு செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, மோசடியாக பண பரிமாற்றம், போலியான பெயரில் நிறுவனங்கள், அதன் மூலம் பண பரிவர்த்தனை என பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இதற்கான ஆதாரங்கள் எங்கே. இது குறித்து நிறுவனங்களிடம் எந்த அறிக்கையையும் சரிபார்க்கவில்லை. அப்படி இருக்கும்பட்சத்தில் எப்படி இது உண்மையாகும் என்ற கேள்வியினை எழுப்பியுள்ள நிலையில் இது உண்மையா? பொய்யா? என்ற கேள்வியினையும் எழுப்பியுள்ளது. ஆக இதுவும் முதலீட்டாளர்களால் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது. .
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications