உலகளவில் பிரபலமாக விளங்கும் அமெரிக்க ஷாட் செல்லர் மற்றும் மார்கெட் ரிசர்ச் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் தலைவர் நாதன் ஆண்டர்சன், அதானி குழுமம் குறித்துப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஜனவரி 24 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கௌதம் அதானி பெயரை 54 முறை மட்டுமே பயன்படுத்திய நிலையில், அவருடைய சகோதரர் வினோத் அதானி பெயரை 151 முறை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வினோத் அதானி தான் அதானி குழுமத்தின் முக்கியக் கைப்பற்றல் திட்டத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளார் என நாதன் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
Nathan Anderson தனது டிவிட்டரில் ப்ளூம்பெர்க் செய்தியின் இணைப்புடன், அதானி குழுமத்திற்கான நிதி ஒப்பந்தங்களின் பேச்சுவார்த்தையிலும், அதானி குழுமத்தின் மிகப்பெரிய கைப்பற்றல் திட்டங்களில் கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி முக்கியப் பங்கு வகித்தார் என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் கௌதம் அதானி தொடர்ந்து வினோத் அதானி, தனது குழுமத்தில் எவ்விதமான பொறுப்பிலும் இல்லை என்றும் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார் நாதன் ஆண்டர்சன். இதோடு வினோத் அதானி தினமும் 2-3 மணிநேரம் அதானி அலுவலகத்தில் பணியாற்றுகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அதானி குழுமம் சுவிஸ் ஹோல்சிம் நிறுவனத்திடம் இருந்து அம்புஜா சிமெண்ட் மற்றும் ஏசிசி ஆகிய நிறுவனங்களை 10.5 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியது குறித்து அதானி குழுமம் மற்றும் வங்கிகள் ஒரு சிக்கலான அறிக்கையை வெளியிட்டு உள்ளதாக ப்ளூம்பெர்க் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
அதானி குழுமம்
அதானி குழுமம் வெளியிட்ட 85 பக்க அறிக்கையில் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், மொரிஷியஸ் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் பதிவு செய்யப்பட்ட 7 பட்டியலிடப்படாத நிறுவனங்களைக் குறிப்பிட்டு உள்ளது. இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு உள்ளது, இந்த நிறுவனங்கள் தான் சிமெண்ட் நிறுவனங்களின் பங்குகளை ஓப்பன் மார்கெட்-டில் வாங்குவது. ஆனால் இந்தப் பட்டியலிடப்படாத 7 நிறுவனங்கள் வாங்கும் பங்குகள் மூலம் மறைமுகமாகப் பலன் அடைவது கௌதம் அதானி தான் என்பதைத் தெரிவிக்கப்படவில்லை.
7 நிறுவனங்கள்
இதற்கு மாறாக இந்த 85 பக்க அறிக்கையில் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், மொரிஷியஸ் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் பதிவு செய்யப்பட்ட 7 பட்டியலிடப்படாத நிறுவனங்களின் உரிமையாளர் வினோத் அதானி மற்றும் வினோத் அதானி மனைவி
ரஞ்சன்பென் ஆகியோரின் பெயரை குறிப்பிட்டு உள்ளது. அதானி குழுமத்தின் தகவல் படி வினோத் அதானி, ரஞ்சன்பென் ஆகியோர் எந்த அதானி நிறுவவனத்திலும் பொறுப்பு வகிக்கவில்லை.
வினோத் அதானி, ரஞ்சன்பென்
வினோத் அதானி, ரஞ்சன்பென் பெயர்களை வெளிப்படையாக மறைக்கப்பட்ட நிலையில் ஹோல்சிம் உடனான 10.5 பில்லியன் டாலர் கைப்பற்றல் திட்டம் குறித்த அதானி குழுமம் வெளியிட்ட அறிக்கையில் வினோத் அதானி-யின் ஆதிக்கம் வெளிப்படையாகத் தெரிகிறது. மேலும் ப்ளூம்பெர்க் அதானி குழுமம் பெரிய திட்டங்களைச் சிறு நிறுவனங்கள் வலைஅமைப்பை பயன்டுத்துக்கிறார் எனத் தெரிவித்துள்ளது.
பொறுப்பு வகிக்கவில்லை
அதானி குழுமத்தின் தகவல் படி வினோத் அதானி எந்த அதானி நிறுவவனத்திலும் பொறுப்பு வகிக்கவில்லை எனக் கூறப்படும் வேளையில், அதானி குழுமத்திற்கான நிதி ஒப்பந்தங்களின் பேச்சுவார்த்தையிலும், அதானி குழுமத்தின் மிகப்பெரிய கைப்பற்றல் திட்டங்களில் கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி முக்கியப் பங்கு வகித்தார் என ப்ளூம்பெர்க் தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
சைப்ரஸ் நாட்டின் குடியுரிமை
அதானி குழும அறிக்கையின் துபாயில் வசிக்கும் வினோத் அதானி சைப்ரஸ் நாட்டின் குடியுரிமை கொண்டவர் என்பது தெரிகிறது. ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பின்பு அதானி குழுமத்தின் டீல்களில் வினோத் அதானி தலையீடு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
வரிச் சலுகை கொண்ட நாடுகள்
வினோத் அதானி மொரிஷியஸ், சைப்ரஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர் மற்றும் பல கரீபியன் தீவுகளில் பல நிறுவனங்களை வைத்துக்கொண்டு பல வகையில் நிதி திரட்டி பொது விற்பனை சந்தையில் இருக்கும் அதானி குழும பங்குகளை வாங்கப்பட்டு வருகிறது. இந்த 5 நாடுகளும் அதிகப்படியான வரிச் சலுகை கொண்ட நாடுகள், மேலும் சந்தையில் பங்குகளின் புழக்கம் குறையும் போது அதன் டிமாண்ட் அதிகரித்துப் போலியாக விலை உயர்த்தப்பட்டு வருகிறது என்பது தான் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டு.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications