அமெரிக்காவினை சேர்ந்த பிரபல ஷார்ட் செல்லரான ஹிண்டர்ன்பர்க் ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக கூறி, பல்வேறு குற்றசாட்டுகளை சுமத்தியது. அதானி குழுமம் தங்களது நிறுவனங்களின் பங்குகளை ஏற்றம் காண வைக்க பல்வேறு மோசடிகளை செய்ததாக அறிவித்தது.
இந்த அறிவிப்பினை அடுத்து அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியினை தொடர்ந்து சந்தித்து வருகின்றன.
செபியின் முன்னாள் தலைவர் கருத்து?
இதற்கிடையில் அதானி குழுமத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து பல்வேறு தரப்பினரும் அவர்களது கருத்துகளை கூறி வரும் நிலையில், செபியின் முன்னாள் நிர்வாக இயக்குனரான ஜே என் குப்தா, அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து நம்பகத்தன்மை இல்லை என கூறியுள்ளார். இது வீழ்ச்சியில் இருந்து லாபம் இருக்கலாம் என்ற கேள்வியினையும் எழுப்பியுள்ளார்.
அதிகரிக்கும் குழப்பம்
இது பங்கு சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து குப்தா ஹிண்டன்பர்க் அறிக்கை ஒரு நற்செய்தி அல்ல எனவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பெரும் குழப்பத்தில் உள்ள முதலீட்டாளர்கள் மத்தியில், குப்தாவின் கருத்து மேற்கொண்டு குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மறைமுக தாக்கமா?
எனினும் குப்தா இரண்டு விஷயங்களை சுட்டிக் காட்டியுள்ளார். ஒன்று ஹிண்டன்பர்க் ஒரு ஷார்ட் செல்லர். மற்றொன்று அதானி குழும பங்குகள் மீது அழுத்தம் கொடுக்க ஏற்பட்ட ஒரு மறைமுக தாக்கமாக கூட இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். செபியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் இப்படி கூறியிருப்பது, பலரின் மத்தியிலும் பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
உண்மை என்ன?
ஒரு வகையில் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே உச்சம் தொட்டு வந்த அதானி குழும பங்குகள், தொடர்ந்து உச்சத்திலேயே இருந்தது. இதனால் இப்படி ஒரு அறிவிப்பினை கொடுத்திருக்கலாமோ என்ற கேள்வியினையும் எழுப்பியுள்ளது. இது அதானி குழுமத்திற்கு ஆதரவாக பார்க்கப்பட்டாலும், இதுவரையில் செபி இது குறித்து சரியானதொரு அறிக்கையினை வெளியிடவில்லை. ஆக அதுபோன்று வெளியிட்டால் மட்டுமே இது குறித்து முதலீட்டாளர்களுக்கு உண்மை என்னவென்பது தெரியவரும்.
விசித்திரமான தற்செயல்
அதானி குழுமத்தின் மீது சுமத்தப்பட்ட இந்த அறிக்கையை தயாரிக்க இரண்டு வருடங்கள் ஆகியது என்று ஹிண்டன்பர்க் கூறுகிறது. இது அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் எஃப்பிஓ-வுக்கு முன்னதாக வெளியிடப்படுகின்றது. இது ஒரு விசித்திரமான தற்செயலாக உள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ் எஃப்பிஓ
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை எப் பி ஓ- மூலம் வெளியிட திட்டமிடப்பட்ட நிலையில். 1.12 மடங்கு சந்தாவினையும் பெற்றது. இந்த வெளியீட்டில் 3112 - 3276 ரூபாய் வரையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், விலை 1000 ரூபாய்க்கு மேலாக வர்த்தகமாகி வந்தது.
பாதியாக சரிவு
ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பானது 100 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக சரிவடைந்த நிலையில், அதானி குழும பங்குகளின் விலையும் பாதியளவு குறைந்துள்ளது.
அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் & செஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி பவர், அதானி டோட்டல் கேஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி வில்மர், ஏசிசி, அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் என்டிடிவி உள்ளிட்ட நிறுவனங்களும் அடங்கும்.
கடன் பற்றி
அதானி குழுமத்தின் கடன் பற்றிய பேசிய குப்தா, வணிக அளவுடன் ஒப்பிடும்போது இது கவலை அளிக்கும் ஒரு விஷயம் இல்லை. அதன் வணிகத்தின் அளவுடன் ஒப்பிடும் கடன் குறைவு தான். அவர்களிடம் போதியளவு பணம் உள்ளது. அந்த கடனை அவர்கள் திரும்ப செலுத்தும் அளவுக்கு திறன் உள்ளது. அதானியின் வளர்ச்சி என்பது விரைவானது. அதானி பல வணிகங்களையும் வாங்கியிருப்பதால், அவற்றையும் சேர்ந்து பாதிக்கும் ஒரு முயற்சியாகவும் இது தெரிகிறது என்றும் கூறியுள்ளார்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications