அதானி நினைத்தது நடந்தது.. ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ன செய்யப் போகிறது..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்குச்சந்தையைப் புரட்டிப்போட்டு உள்ள அதானி குழுமத்தின் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறுத.

Recommended Video

Adani VS Hindenburg | US-ல் நடந்த Balloon விபத்திற்கும்...Adani Shares சரிவிற்கும் என்ன தொடர்பு?

இதே வேளையில் இந்தக் குற்றச்சாட்டுகள் வெளி வந்த உடனே சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி கடந்த ஒரு வருடம் அதானி குழுமத்தின் ஒப்பந்தங்கள் நிதி பரிமாற்றங்களை ஆய்வு செய்யத் துவங்கியுள்ளது.

சீனர் Chang Chung Ling உடன் என்ன தொடர்பு.. ஹிண்டன்பர்க் கேள்விக்கு பதில் அளிக்காத அதானி குழுமம்..! சீனர் Chang Chung Ling உடன் என்ன தொடர்பு.. ஹிண்டன்பர்க் கேள்விக்கு பதில் அளிக்காத அதானி குழுமம்..!

இந்த நிலையில் அகமதாபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகளில் வர்த்தகம் செய்யும் அதானி குழுமம் ஞாயிற்றுக்கிழமை இரவு "பங்கு கையாளுதல் மற்றும் கணக்கியல் முறைகேடுகள்" குறித்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றச்சாட்டுகளுக்கு விரிவான மறுப்பு அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

வினோத் அதானி நெட்வொர்க்.. அதானி குழுமத்தில் பெரும் முதலீடு.. ஹிண்டன்பர்க் கேள்விக்குப் பதில் என்ன..? வினோத் அதானி நெட்வொர்க்.. அதானி குழுமத்தில் பெரும் முதலீடு.. ஹிண்டன்பர்க் கேள்விக்குப் பதில் என்ன..?

ஹிண்டன்பர்க் ரிசர்ச்

ஹிண்டன்பர்க் ரிசர்ச்

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ஷாட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச், அதானி குழுமத்தின் மீது வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்து, "இந்தியா மற்றும் அதன் சுயாதீன நிறுவனங்கள் மீதான தாக்குதல்" என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அதானி குழுமம்

அதானி குழுமம்

அதானி குழும நிறுவனப் பங்குகளின் விலை ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை மூலம் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்ட நிலையில், இந்தப் பாதிப்பைக் குறைக்கும் விதமாக, திங்கட்கிழமை பங்குச்சந்தை வர்த்தகம் துவங்குவதற்குள் இந்தத் தாக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக முக்கியமான விளக்க அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

413 பக்க அறிக்கை

413 பக்க அறிக்கை

திங்கட்கிழமை பங்குச்சந்தை வர்த்தகம் துவங்குவதற்கு முன் அதானி குழுமம் வெளியிடப்பட்ட 413 பக்க விரிவான மறுப்பு அறிக்கையில் அதானி குழுமம் இந்தக் குற்றச்சாட்டுகள் "அடிப்படையற்றது" மற்றும் "ஒரு போலியான சந்தை சூழ்நிலையை உருவாக்குவதற்கான உள்நோக்கம் கொண்டு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு உள்ளது " என்று விளக்கம் கொடுத்துள்ளது.

ஷாட் பொசிஷன்

ஷாட் பொசிஷன்

இதேபோல் இந்தச் சரிவால் அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது ஷாட் பொசிஷன் மூலம் அதிகப்படியான நிதி ஆதாயங்களைப் பெற உள்ளது என அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

கணக்கிடப்பட்ட தாக்குதல்

கணக்கிடப்பட்ட தாக்குதல்

அதானி குழுமம் இந்த அறிக்கையில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மீதான தேவையற்ற தாக்குதல் மட்டுமல்லாமல், இந்தியா மற்றும் இந்திய நிறுவனங்களின் சுதந்திரம், ஒருமைப்பாடு, தரம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சி பாதை மற்றும் லட்சியத்தைப் பாதிக்கும் வகையில் கணக்கிடப்பட்ட தாக்குதல் எனத் தெரிவித்துள்ளது.

சட்ட நடவடிக்கைகள்

சட்ட நடவடிக்கைகள்

அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் ஜனவரி 26 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் அதானி குழுமத்தின் சட்ட நடவடிக்கைகளை வரவேற்கத் தயார் எனக் கூறிய பின்பு, இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் முதல் முறையாக விரிவான பதில்-ஐ 413 பக்க விரிவான மறுப்பு அறிக்கையில் அளித்துள்ளது.

2 ஆண்டு ஆய்வு

2 ஆண்டு ஆய்வு

ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அதானி குழுமத்தின் மீதான ஆய்வறிக்கையை 2 ஆண்டுக் காலமாகப் பல கட்ட ஆய்வுகள், தரவு சேகரிப்பு மூலம் தயாரிக்கப்பட்டதாகவும், இதற்காகப் பல நாடுகளுக்குச் சென்றதாகவும், ஆவணங்கள் மற்றும் தரவுகள் திரட்டப்பட்டதாகவும், அதானி குழுமத்துடன் பணிபுரிந்த நிர்வாகிகளுடன் பேசியதாகவும் தெரிவித்துள்ளது.

சட்டங்களுக்கு உட்பட்டது

சட்டங்களுக்கு உட்பட்டது

இதேவேளையில் அதானி குழுமம் மற்றும் அதன் பல்வேறு கிளை நிறுவனங்களும் இந்திய அரசின் அனைத்துச் சட்டங்களுக்கு இணங்குகின்றன என்பதை வலியுறுத்தி, அதானி குழுமம் அதன் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களும் "வலுவான நிர்வாகக் கட்டமைப்பையே" கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஜனவரி 24

ஜனவரி 24

ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அதானி குழுமத்தின் மீதான அறிக்கையை ஜனவரி 24 ஆம் தேதி அமெரிக்காவில் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து இரு தரப்பு மத்தியிலும் காரசாரமான விவாதம் மத்தியில் அதானி குழுமப் பங்குகள் பெறும் சரிவைப் பதிவு செய்தது.

அதானி எண்டர்பிரைசர்ஸ்

அதானி எண்டர்பிரைசர்ஸ்

இதேபோல் இந்த அறிக்கை மூலம் அதானி குழுமம் நினைத்தது நடந்தது, அதானி எண்டர்பிரைசர்ஸ் பங்குகள் 2.85 சதவீதம் உயர்ந்தாலும், பிற அனைத்து நிறுவனங்களுக்கும் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.

பிற பங்குகள்

பிற பங்குகள்

அதானி போர்ஸ் - 1.76 சதவீத சரிவு
அதானி பவர் - 5 சதவீதம் சரிவு
அதானி டிரான்ஸ்மிஷன் - 20 சதவீதம் சரிவு
அதானி கிரீன் - 18.05 சதவீதம் சரிவு
அதானி டோட்டல் கேஸ் - 20 சதவீதம் சரிவு
அதானி வில்மார் - 5 சதவீதம் சரிவு
ஏசிசி - 1.27 சதவீதம் உயர்வு
அம்புஜா சிமெண்ட் - 3.10 சதவீத உயர்வு
NDTV - 5 சதவீதம் சரிவு

வெறும் 3 நாளில் ரூ.11.6 லட்சம் கோடி இழப்பு.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கண்ணீர்..!! வெறும் 3 நாளில் ரூ.11.6 லட்சம் கோடி இழப்பு.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கண்ணீர்..!!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Hindenburg report was baseless and calculated attack on India says in Adani group's 413 page rejoinder

Hindenburg report was baseless and calculated attack on India says Adani group's 413 page rejoinder
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X