ஹிண்டன்பர்க் ரிசர்ச்-ன் சக்சஸ் ரேட்.. 63ல் 51 நிறுவனங்கள் ரத்தக்களறி..!!

பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் நிறுவனங்கள் குறித்து கடுமையான அறிக்கைகளை வெளியிடுவதில் பெயர்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், சிறப்பான வெற்றி வரலாற்றைப் கொண்டுள்ளது எத்தனை பேருக்கு தெரியும்.

லைவ்மின்ட் வெளியிட்டுள்ள தகவல் படி ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் குறிவைத்து அறிக்கை வெளியிட்ட 63 நிறுவனங்களில் 51 நிறுவனங்களின் பங்கு விலை, அறிக்கை வெளியிடப்பட்டதை அடுத்த நாளில் இருந்து இன்று வரையில் குறைவாக வர்த்தகம் நடந்து வருகிறது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச்-ன் சக்சஸ் ரேட்.. 63ல் 51 நிறுவனங்கள் ரத்தக்களறி..!!

இதன் மூலம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் கைவைத்த நிறுவனங்களில் சுமார் 81% சக்சஸ் ரேடிட்டிங் கொண்டுள்ளது. இது நிறுவனத்தின் திறனை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இப்படிப்பட்ட ஒரு மாஸ் நிறுவனத்தை அதன் தலைவர் நேத்தன் ஆண்டர்சன் மூட முடிவு எடுத்தது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

ஹிண்டன்பர்க் அறிக்கைகளின் தாக்கம் காரணமாக எபிக்ஸ் இன்க், லார்ட்ஸ்டவுன் மோட்டார்ஸ், சோரெண்டோ பாராமாசுட்டிகல்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் திவால் ஆனதாக அறிவித்துள்ளது. மேலும் ஹிண்டன்பெர்க் டார்கெட் செய்த 63 நிறுவனங்களின் இன்றைய நிலைமை என்ன தெரியுமா..?

இதில் முதலில் இருக்கும் தேதி ஹிண்டன்பெர்க் அந்நிறுவனம் குறித்து வெளியிட்ட அறிக்கையின் நாள், கடைசியில் இருப்பது அறிக்கைக்கு முந்தைய பங்கு விலைக்கும் இன்றைய பங்கு விலைக்குமான வித்தியாசம்.

7 அக்டோபர் 2017 - போலாரிட்டி டிஇ --> -99.9%
17 நவம்பர் 2017 - ஒப்கோ ஹெல்த் --> -75%
11 டிசம்பர் 2017 - ரியாட் பிளாக்செயின் --> -46.3%
13 டிசம்பர் 2017 - மராத்தான் பேட்டன்ட் குரூப் --> -25.8%
14 பிப்ரவரி 2018 - சிகன் சூப் ஃபார் தி சோல் என்டர்டெயின்மெண்ட் --> -99.9%
21 மார்ச் 2018 - அப்ரியா இன்க் --> -86.2%
24 ஏப்ரல் 2018 - பல்ஸ் பயோசயின்சஸ் --> 11.8%
9 மே 2018 - ஜென்ப்ரைக்ஸ் --> -89.9%
4 செப்டம்பர் 2018 - அப்பல்லோ மெடிக்கல் ஹோல்டிங்ஸ் --> 188.6%
25 பிப்ரவரி 2019 - ஸ்கை சோலார் --> 300.6%
7 ஜூன் 2019 - எரோஸ் இன்டர்நேஷனல் --> -99.9%
11 ஜூலை 2019 - ப்ரெடிக்டிவ் டெக்னாலஜி --> -99.9%
13 ஆகஸ்ட் 2019 - டவிட்டா --> 133.8%
17 செப்டம்பர் 2019 - ப்ளூம் எனர்ஜி --> 140.4%
4 அக்டோபர் 2019 - ஸ்மைல்டைரக்ட் கிளப் --> -99.9%
16 ஜனவரி 2020 - ஒபரா --> 33.6%
10 பிப்ரவரி 2020 - நெக்ஸ்டெக் ஏஆர் --> -96.6%
2 மார்ச் 2020 - பார்மாசியிலோ --> -94.7%
23 மார்ச் 2020 - எச்எப் ஃபுட்ஸ் --> -72.4%
17 ஏப்ரல் 2020 - எஸ்.சி.வார்எக்ஸ் --> -85.1%
20 ஏப்ரல் 2020 - நியூ பேசிபிக் மெட்டல்ஸ் --> -63.5%
17 மே 2020 - சைனா மெட்டல் ரீசோர்சஸ் --> -98.3%
20 மே 2020 - சோரெண்டோ --> -99.8%
5 ஜூன் 2020 - ஜீனியஸ் பிராண்ட்ஸ் --> -86.1%
26 ஜூன் 2020 - ஐடியானோமிக்ஸ் --> -77.4%
30 ஜூன் 2020 - 12 குளோபல் --> -31.2%
21 ஆகஸ்ட் 2020 - கிரோஜெனரேஷன் --> -86.3%
10 செப் 2020 - நிக்கோலா --> -75.2%
13 அக்டோபர் 2020 - லூப் இண்டஸ்ட்ரீஸ் --> -79.1%
30 நவம்பர் 2020 - கண்டி --> -87.2%
4 பிப்ரவரி 2021 - கிளோவர்ஹெல்த் --> -85.64%
1 மார்ச் 2021 - ஆர்மாட் --> -9.4%
12 மார்ச் 2021 - லார்ட்ஸ்டவுன் மோட்டார்ஸ் --> -87.7%
6 ஏப்ரல் 2021 - எபேங் --> -96.3%
6 மே 2021 - பியூர்சைக்கிள் டெக்னாலஜிஸ் --> -64.3%
20 மே 2021 - ஹம்பல் --> -100%
15 ஜூன் 2021 - டிராஃப்ட் கிங்ஸ் --> -36.8%
3 பிப்ரவரி 2072 - ஸ்டாண்டர்ட் லித்தியம் --> -85.6%
9 மார்ச் 2022 - நேட்டரா --> 218.3%
6 ஏப்ரல் 2022 - முல்லன் ஆட்டோமோட்டிவ் --> -77.4%
5 மே 2022 - சிங்குலாரிட்டி ஃப்யூச்சர் டெக்னாலஜி --> -38.8%
1 ஜூன் 2022 - எனோசியன் பயோசயின்சஸ் --> -83.6%
16 ஜூன் 2022 - எபிக்ஸ் --> -100%
19 அக்டோபர் 2072 - எஸ்டாப்ளிஷ்மெண்ட் லேப்ஸ் --> -18.9%
7 டிசம்பர் 2022 - வெல்டவர் --> 80.6%
24 ஜனவரி 2023 - அதானி என்டர்பிரைசஸ்* --> -7%
24 ஜனவரி 2023 - அதானி போர்ட்ஸ் & SEZ* --> 101.5%
24 ஜனவரி 2023 - அதானி பவர்* --> 153.2%
24 ஜனவரி 2018 - அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ்* --> -60%
24 ஜனவரி 2023 - அதானி கிரீன் எனர்ஜி* --> -7.5%
24 ஜனவரி 2023 - அதானி டோட்டல் கேஸ்* --> -77.7%
24 ஜனவரி 2023 - அதானி வில்மார்* --> -33%
23 மார்ச் 2073 - ப்ளாக் --> -14.5%
2 மே 2023 - ஐகான் என்டர்பிரைசஸ் --> -68%
6 ஜூன் 2023 - டிங்கோ குரூப் --> -99.2%
15 ஆகஸ்ட் 2023 - ஃப்ரீடம் ஹோல்டிங் --> 16.1%
7 நவம்பர் 2023 - ஈஹாங் --> -14.8%
1 பிப்ரவரி 2024 - லைஃப்ஸ்டான்ஸ் --> -6.4%
13 பிப்ரவரி 2024 - ரெனோவாரோ பயோசயின்சஸ் --> -81.6%
15 பிப்ரவரி 2024 - டெமினோஸ் --> -16.5%
15 மார்ச் 2024 - எல்.பி.பி.எஸ்.ஏ --> -20.5%
20 மார்ச் 2024 - எக்வினிக்ஸ் --> -3%
04 ஜூன் 2024 - ஆக்ஸஸ் ஃபைனான்சியல் --> 24.1%

*இதில் அதானி பங்கு விலை அனைத்தும் ஆகஸ்ட் 10, 2024 வரையிலான காலக்கட்டத்தை ஒப்பிடப்பட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+