ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கை மூலம் அதானி குழுமத்தின் தலையெழுத்தை மாற்றும் அளவுக்கு மோசமான பாதிப்பை எதிர்கொண்டது. கடந்த 1.5 வருடமாக இதுகுறித்து செபி விசாரணை செய்து வந்த நிலையில் தற்போது ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்திற்கு செபி விளக்கம் கேட்டு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் செபியின் நோட்டீஸ் பெற்ற பின்னர் ஹிண்டன்பெர்க் ரிசர்ச் மீண்டும் ஒரு பகிர் கிளப்பும் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது. இது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் நாட்டு மக்கள் அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. அப்படி என்ன நடந்தது..?

ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தனது இணையத்தில் வெளியிட்ட தகவல் படி, "இந்திய பங்குச்சந்தையில் சில முக்கியமான நபர்களிடமும், அமைப்புகளிடமும் விசாரணை செய்தது மூலம் நாங்கள் அறிந்தது என்னவென்றால், ஜனவரி 2023 ஆம் ஆண்டில் நாங்கள் வெளியிட்ட அறிக்கையின் பின்னர், செபி அமைப்பு மறைமுகமாக அதானி குழுமத்திற்கு ஆதரவளித்தது" எனக் குற்றம் சாட்டியுள்ளது.
ஹிண்டன்பர்க் அறிக்கையின் விளைவாக, அதானி பங்குகளில் ஷாட் செய்து வைத்திருந்த ப்ரோகரேஜ் நிறுவனங்களையும், முதலீட்டாளர்களையும், செபி அமைப்பு கடுமையான விசாரணை செய்வோம் என்று மிரட்டலின் மூலம் ஷார்ட் புக்கிங்-ஐ மூட கட்டாயப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, அதானி பங்குகளின் விலை குறையாமல் இருப்பதற்கு செயற்கையான ஆதரவு கிடைத்துள்ளது.
இப்படி அதானி குழுமத்திற்கு மறைமுகமாக உதவி செய்த செபி, பொதுமக்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் அழுத்தத்தின் காரணமாக, அதானி குழுமம் மீதான புகார்களை விசாரிக்க வேண்டிய நிலைக்கு செபி தள்ளப்பட்டது. ஆரம்ப கட்டத்தில், ஹிண்டன்பர்க் அறிக்கையின் சில முக்கிய கண்டுபிடிப்புகளை செபி ஏற்றுக்கொண்டதாகத் தோன்றியது. இதில் உச்ச நீதிமன்ற வழக்கு ஆவணங்களில் குறிப்பிட்ட சில கருத்துக்கள் பின்வருமாறு:
"ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாவதற்கு முன்பு நடந்தது சில முறைகேட்டில் செபி அமைப்பு வெளிப்படுத்திய பிரச்சனைகளில், அதானி குழும பங்குகளை வாங்கிய வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்(FPIs) அதானி குழுமத்துடன் தொடர்புடையவர்கள் இல்லை என்பதை உறுதி செய்ய முடியவில்லை." என கூறியிருந்தது.
ஆனால், இதற்கு பின்னர் செபி இதற்கு மேல் விசாரணை நடத்த இயலாது என தெரிவித்தது. நீதிமன்ற ஆவணங்கள் செபி "தகவல் தெரியவில்லை" என்று கூறியதையும், இந்த வழக்கில் மேல் விசாரணை என்பது "முடிவில்லாத பயணம்" ஆகிவிடும் என்றும் சுட்டிக்காட்டுகின்றன. இது, அதானி குழுமத்தின் மீதான புகார்களை விசாரிக்க செபி தயாராக இல்லை அல்லது விசாரிக்க முடியவில்லை என்பதையே காட்டுகிறது.
அதானி குழுமத்தின் மீதான பரவலான குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், அவர்களுக்கு எதிராக மிகக் குறைவான அபராதம் அல்லது தொழில்நுட்ப ரீதியான தண்டனை மட்டுமே செபி விதிக்கும் என்று ஊடகங்கள் செய்திகள் அப்போது வெளியாகியுள்ளன.
ஜூன் 2024 இல், அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜுகேஷிந்தர் சிங், தங்கள் குழுமத்திற்கு எதிராக செபி அனுப்பிய சில கடிதங்களை "அற்பமானவை" என்று விவரித்தார். இதன் மூலம், விசாரணை முடிவடைவதற்கு முன்பே, செபி அமைப்பின் நடவடிக்கைகள் கடுமையானவை இராது என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த நம்பிக்கைக்கான காரணங்களில் ஒன்றாக, அதானி குழுமத்திற்கும் செபிக்கும் இடையேயான உறவு இருக்கலாம் என ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் சந்தேகப்படுகிறது.
இரு தலைவர்களின் சந்திப்பு: 2022 ஆம் ஆண்டில், அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, செபி தலைமை அதிகாரி மதுபதி புச் (Madhabi Buch) இரண்டு முறை சந்தித்தார். இதை தி இந்து பிசினஸ் லைன் பத்திரிக்கை, செபி தலைவரை சந்தித்த முதல் முக்கிய தொழிலதிபர்களில் முதன்மையான நிகழ்வு என குறிப்பிட்டதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்தச் சந்திப்புகளில் ஒன்று, அதானி குழுமம் 10.5 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் ஏ.சி.சி மற்றும் அம்புஜா சிமெண்ட் நிறுவனங்களைக் கையகப்படுத்தியது தொடர்பானது. இந்த கையகப்படுத்தலுக்காக நிதி திரட்ட அதானி குழுமம் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு சிறப்பு நோக்க கருவி (SPVs) தொடர்பாக செபி ஆய்வு செய்து வந்ததாக ராய்ட்டர்ஸ் அப்போது தெரிவி்தது. இந்த SPV பின்னர், வினோத் அதானியுடன் தொடர்புடையவை எனக் கண்டறியப்பட்டது.
இரண்டாவது சந்திப்பு 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. இந்தச் சந்திப்பிற்கு என்ன காரணம் என்பது இதுவரையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என தகவல் உரிமைச் சட்ட (RTI) மனு மூலம் பெறப்பட்ட தகவல் என ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தெரிவிக்கிறது.
RTI மனு தாக்கல்: செபி அமைப்பின் செயல்பாடுகள் குறித்து மேலும் அறியும் நோக்கில், அதானி விவகாரத்திலும் ஹிண்டன்பர்க் விவகாரத்திலும் பணியாற்றிய செபி ஊழியர்களின் பெயர்கள், செபி அதிகாரிகள் மற்றும் அதானி குழுமத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்புகள் மற்றும் தொலைபேசி உரையாடல்கள் குறித்த அடிப்படைத் தகவல்களைத் பெற்ற RTI மனு தாக்கல் செய்யும் பணியில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் இருப்பதாக தெரிித்துள்ளது. இதற்கு செபி-யின் பதில் என்னவாக இருக்கும், அடிப்படை வெளிப்படைதன்மையாவது கடைப்படிக்குமா என்பது பார்ப்போம் என குறிப்பிட்டது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications