டெல்லி: ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் செபி தலைவரின் நம்பகத்தன்மையை குறைத்து அவரது பதவியை பலவீனப்படுத்த கூடும் என முன்னாள் நிதித்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையமான செபியின் தலைவராக மாதிபி பூச் செயல்பட்டு வருகிறார். மாதபி பூச் மற்றும் அவரது கணவருக்கு எதிராக கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்காவை சேர்ந்த ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

அதாவது அதானி குழுமத்தின் பங்குச்சந்தை முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி பூச் மற்றும் அவரது கணவர் பங்குகளை வைத்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதானி குழுமம் கார்ப்பரேட் வரலாற்றில் மிகப்பெரிய மோசடி செய்ததாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. முதலீட்டிற்கு மிகக் குறைந்த வரி செலுத்த வேண்டிய நாடுகளில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் மூலம் அதானியின் குழும பங்குகளின் விலை முறைகேடாக உயர்த்தப்பட்டன என முதல் அறிக்கையில் கூறியிருந்தது. இந்த அறிக்கை தொடர்ந்து அதானி நிறுவன பங்குகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன.
அதன் பின்னர் அதானி குழும பங்குகள் படிப்படியாக மீண்டு வந்துவிட்டன. இந்த தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கூட வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் தான் செபி தலைவர் மீதே பெரிய குற்றச்சாட்டை ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ளது.
இந்த முறை ஹிண்டன்பர்க் அறிக்கை அதானியை நேரடியாக குற்றம் சாட்டாமல் செபி தலைவர் மற்றும் அவரது கணவர் ஆகியோரை நேரடியாக குற்றம் சாட்டுகிறது என சுட்டிக்காட்டுகிறார் முன்னாள் நிதித்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க்.
செபி தலைவருக்கு எதிரான இந்த நேரடி குற்றச்சாட்டு அதானி குழுமத்தின் மீதான விசாரணையை செபி தலைவர் சரியான முறையில் நடத்துவாரா என்பது குறித்த கேள்வி எழுப்பும் வகையில் அமைந்துள்ளது என்றும் இது மிகத் தீவிரமான ஒரு குற்றச்சாட்டு இதிலிருந்து செபி தலைவர் தன்னை பாதுகாத்துக் கொள்வது மிகவும் கடினமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் செபி தலைவரின் நம்பகத்தன்மையை குறைத்து அந்த பதவியை பலவீனப்படுத்தப் போகிறது என்றும் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளை செபி தலைவர் மறுத்துள்ளார். முதன்முதலில் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்ட போது இந்திய பங்குச்சந்தையில் அது கடுமையாக எதிரொலித்தது. ஆனால் இம்முறை பங்குச்சந்தையிலும் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications