ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உலகளவில் இருக்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள் குறிப்பாக அமெரிக்க நிறுவனங்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். காரணம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் ஒரு நிறுவனம் குறித்து அறிக்கை வெளியிட்டால் சந்தை மதிப்பில் பெரும் பகுதியை இழப்பது கட்டாயம். இந்த லிஸ்டில் அதானி குழுமமும் உள்ளது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் ஆரம்பம்: நேத்தன் ஆண்டர்சன் 2017ஆம் ஆண்டில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம் பங்குச் சந்தை மட்டுமல்லாமல், கடன் மற்றும் டெரவேட்டிவீஸ் போன்ற பல்வேறு நிதி சந்தைகளில் நடக்கும் முறைகேடுகளை கண்டறிந்து வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டது.

கல்வி, முதல் பணி, அனுபவம்: நேத்தன் ஆண்டர்சன், கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வணிகம் படித்த பிறகு, தனது முதல் பணியை FactSet Research Systems Inc என்ற நிதித் தரவு நிறுவனத்தில் தொடங்கினார். பல ஆண்டுகால அனுபவத்தின் மூலம் பெற்ற நிதித்துறை அறிவு மற்றும் திறன்களைப் பயன்படுத்தி, அவர் ஹிண்டன்பர்க் ரிசர்ச்யை நிறுவி, பங்குச் சந்தை மற்றும் நிதித் துறைகளில் நேர்மையற்ற செயல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் பணியை மேற்கொண்டார்.
முதலீட்டு முறை: இந்த முறைக்கேடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது மூலம் என்ன லாபம்..? இந்த தரவுகளை பயன்படுத்தி ஹிண்டன்பர்க் ரிசர்ச் பல்வேறு முதலீட்டாளர்களிடம் சேர்ந்து Short Position, Long Postion முதலீடுகளைச் செய்து வருகிறது. இந்த இரண்டு Short Position, Long Postion முதலீட்டில் சிறந்து விலகும் ஒரு நிறுவனம் தான் Hindenburg Research.
நேத்தன் ஆண்டர்சன் சொத்து மதிப்பு: இதன் மூலம் நேத்தன் ஆண்டர்சன் சொத்து மதிப்பு தற்போது 5 மில்லியன் டாலராக உள்ளது. இவர் யூத மதத்தை சேர்ந்தவர் பள்ளி கல்வி முழுவதும் யூத மத பள்ளியில் முடித்துள்ளார். இவருடைய சந்தை ஒரு கல்லூரி பேராசிரியர் மற்றும் தாயார் செவிலியர் ஆவார்.
இவருடைய மனைவி மற்றும் குழந்தை குறித்த தரவுகள் தெரியவில்லை. ஆனால் நேத்தன் ஆண்டர்சன் எழுதிய கடைசி கடிதத்தில் தனது மனைவி-க்கு நன்றியும், மன்னிப்பும் கேட்டு உள்ளார். இதேபோல் ஹிண்டன்பெர்க் நிறுவனத்தை துவங்கும் போது அடுத்தடுத்து பாய்ந்த 3 வழக்குகள் மூலம் கைகுழந்தை உடன் நிதியியல் அளவில் பெரும் பாதிப்பை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
முதலீட்டுக்கான ஆதாரம்: ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், நிறுவனங்களின் நிதி நடைமுறைகள் மற்றும் நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் மோசடிகளை ஆழமாக ஆய்வு செய்து, அதைப் பற்றிய விரிவான அறிக்கைகளை வெளியிடுகிறது. இந்த அறிக்கைகளை அடிப்படையாக வைத்து முதலீடு செய்வதால் பெரும் லாபத்தை ஹிண்டன்பர்க் ரிசர்ச் பெறுகிறது.
பங்கு விலை பாதிப்பு: இந்த அறிக்கைகள் பொதுவாக நிறுவனங்களின் பங்கு விலையில் கடுமையான வீழ்ச்சியை ஏற்படுத்தும். கடந்த சில ஆண்டுகளில், ஹிண்டன்பர்க் ரிசர்ச் சுமார் 25க்கும் அதிகமான நிறுவனங்களின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கைகளை வெளியிட்டு உள்ளது.
இந்த நிறுவனத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க ஆய்வறிக்கைகளில் ஒன்று, அமெரிக்காவின் எலக்ட்ரிக் டிரக் தயாரிப்பு நிறுவனமான நிகோலா கார்ப்பரேஷன் குறித்தது. ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையின் பின்னர், நிகோலா கார்ப்பரேஷனின் மதிப்பு பல பில்லியன் டாலர்களால் குறைந்து திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச்யின் செயல்பாடுகள் நிதி உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நேத்தன் ஆண்டர்சன் நிறுவிய ஹிண்டன்பர்க் ரிசர்ச், நிதி உலகில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது. இந்த நிறுவனம் நிதி மோசடிகளை வெளிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றாலும், அதன் செயல்பாடுகள் பல விவாதங்களையும் கேள்விகளையும் எழுப்புகின்றன.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications