டிவிட்டர் நிறுவனத்தின் நிறுவனரான ஜாக் டோர்சி உருவாக்கிய Square Inc. சமீபத்தில் Block Inc என பெயரை மாற்றிக்கொண்டு. இந்த பிளாக் நிறுவனத்தை தான் தற்போது நேதன் ஆண்டர்சனின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கட்டம் கட்டி அடிக்க துவங்கியுள்ளது.
நேதன் ஆண்டர்சனின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் இன்று காலையில் டிவிட்டரில் அடுத்த பெரிய நிறுவனம் குறித்து ரிப்போர்ட் தயாரித்து வெளியிட தயாராக உள்ளது என அறிவித்தது. ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் 2 அறிக்கை வெளியிட்டு அதானி சாம்ராஜ்ஜியத்தை தலைகீழாக புரட்டிப்போட்ட நிலையில், அடுத்து சிக்கப்போவது இந்திய நிறுவனமா என்ற கேள்வி அனைவரிடத்திலும் இருந்தது.
இந்த நிலையில் மாலையில் அதாவது அமெரிக்க வர்த்தக நேரத்தில் ஹிண்டன்பர்க் ஜாக் டோர்சி உருவாக்கிய Block Inc குறித்து அறிக்கைவெளியிட்டு ஷாட் பொசிஷனிங் செய்துள்ளது.
Block நிறுவனம்
அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் Block Inc சுமார் 44 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை கொண்ட நிறுவனமாக உள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான அடுத்த சில நிமிடத்தில் Block Inc பங்குகள் 20 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
ஜாக் டோர்சி
ஜாக் டோர்சி தலைமையில் Block Inc அமெரிக்காவில் வங்கி சேவை இல்லாத, பெற முடியாத மக்களுக்கு எவ்விதமான தங்கு தடையும் இல்லாத வியக்கவைக்கும் நிதியியல் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளாத கூறிக்கொள்கிறது.
2 வருட விசாரணை
ஆனால் எங்களின் 2 வருட விசாரணையின், பிளாக் உதவி செய்வதாகக் கூறும் மக்கள் தொகையை தனது நலனுக்கான பயன்படுத்திக் கொண்டது என்று எங்களின் ஆய்வு மூலம் உறுதி செய்யப்படுகிறது.
வியக்கவைக்கும் நிதியியல் தொழில்நுட்பம்
பிளாக்-கின் வணிகத்திற்குப் பின்னால் உள்ள "மேஜிக்" அதாவது வியக்கவைக்கும் நிதியியல் தொழில்நுட்பம் இல்லை, மாறாக நுகர்வோர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான மோசடியை எளிதாக்குவதற்கும், ஒழுங்குமுறையைத் தவிர்ப்பதற்கும் உதவியுள்ளது என ஹிண்டன்பர்க் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிளாக் நிறுவனத்தின் கடன்கள் மற்றும் கட்டணங்களை புரட்சிகர தொழில்நுட்பமாக காட்டப்பட்டு உள்ளது.
ஆய்வுகள்
எங்கள் ஆராய்ச்சியில் முன்னாள் ஊழியர்கள், கூட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுடன் பல நேர்காணல்கள், ஒழுங்குமுறை மற்றும் வழக்கு பதிவுகள் மற்றும் FOIA மற்றும் பொது பதிவுகள் கோரிக்கைகளின் விரிவான ஆய்வு ஆகியவற்றின் ஆய்வுகள் மூலம் இந்த அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
Block's Cash App ஆய்வு
பெரும்பாலான ஆய்வாளர்கள் தொற்றுநோய்க்குப் பிந்தைய காலக்கட்டத்தில் Block's Cash App-ன் வளர்ச்சியை கண்டு வியந்தனர். அதன் 51 மில்லியன் மாதாந்திர பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர் மற்றும் வாடிக்கையாளர் கையகப்படுத்தலில் பதிவாகும் குறைவான செலவுகள் ஆகியவற்றின் மூலம் அதிக லாபத்திற்கு வழிவகுக்கும் என கூறப்பட்டது.
நிதியியல் சேவைகள்
இது மட்டும் அல்லாமல் பல முக்கிய நிதியியல் சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க பிளாக் இன்க் முக்கிய கருவியாக விளங்கும் எனவும் கூறப்பட்டது. ஆனால் இந்நிறுவனம் குறித்த உண்மை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஹிண்டன்பர்க் அறிக்கை
உண்மையில் பிளாக் நிறுவனம் அதன் உண்மையான பயனர் எண்ணிக்கையை அதிகமாகக் கூறியுள்ளது மற்றும் அதன் வாடிக்கையாளர் கையகப்படுத்தல் செலவுகளைக் குறைத்து மதிப்பிட்டுள்ளது என்பதை எங்கள் ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது என ஹிண்டன்பர்க் கூறுகிறது.
மோசடி
பிளாக் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் தாங்கள் மதிப்பாய்வு செய்த கணக்குகளில் 40% - 75% போலியானது, மோசடியில் ஈடுபட்டது அல்லது ஒரு தனி நபருடன் இணைக்கப்பட்ட பல்வேறு கணக்குகளை தனி கணக்காக காட்டப்பட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியுள்ளது என்று ஹிண்டன்பெர்க் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications