தேசியவாதத்தால் மோசடியை மறைக்க முடியாது.. அதானி பற்றி ஹிண்டன்பர்க் ரிசர்ச்..!

ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பு அதானி குழுமத்தின் மீது வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்து, "Attack on India and its independent institutions" என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

Recommended Video

Adani VS Hindenburg | US-ல் நடந்த Balloon விபத்திற்கும்...Adani Shares சரிவிற்கும் என்ன தொடர்பு?

அதானி குழுமம் வெளியிட்ட 413 பக்க விரிவான மறுப்பு அறிக்கையில் அதானி குழுமம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றது எனத் தெரிவித்துள்ளது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மீதான தேவையற்ற தாக்குதல் மட்டுமல்லாமல், இந்தியா மற்றும் இந்திய நிறுவனங்களின் சுதந்திரம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சி பாதை மற்றும் லட்சியத்தைப் பாதிக்கும் வகையில் கணக்கிடப்பட்ட தாக்குதல் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அதானி குழுமத்தின் 413 பக்க அறிக்கைக்குப் பதிலடி கொடுத்துள்ளது.

413 பக்க அறிக்கை

413 பக்க அறிக்கை

ஜனவரி 30 ஆம் தேதி ஹிண்டன்பர்க் ரிசர்ச், அதானி குழுமத்தின் 413 பக்க அறிக்கை "தேசியவாதத்தால் மழுங்கடிக்கப்படும் முயற்சி" என அதிரடியாகப் பதில் அளித்துள்ளது. இந்த அறிக்கையில் அதானி குழுமம் மீதான பங்குக் கையாளுதல் மற்றும் வரிச் சலுகை நிறைந்த நாடுகள் மூலம் செய்த முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

சீன நாட்டவர் சாங் சுங்-லிங்

சீன நாட்டவர் சாங் சுங்-லிங்

இதேபோல் அதானி குழுமம் சீன நாட்டவரான சாங் சுங்-லிங் உடனான தொடர்பைத் தெளிவுபடுத்தக் கூட முயற்சிக்கவில்லை, அதானி் குழும பணப் பரிமாற்றத்திற்கும் சாங் சுங்-லிங்-கிர்கும் பல தொடர்புகள் இருந்தபோதிலும் பதில அளிக்காதது ஏன் என ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வினோத் அதானி

வினோத் அதானி

அதானி குழுமம் கௌதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி மற்றும் சாங் சுங்-லிங் இடையேயான உறவின் தன்மை அல்லது குழுமத்திற்குச் சீன நாட்டவர் உடனான தொடர்பு குறித்துத் தங்களுடைய அறிக்கையில் இருந்த கேள்விக்குப் பதிலளிக்கவில்லை என்று கூறியுள்ளது.

அதானி குழும முதலீடுகள்

அதானி குழும முதலீடுகள்

இதேபோல் சீன நாட்டவரான சாங் சுங்-லிங் தொடர்புடைய வெளிநாட்டுக் கணக்கில் அதானி குழுமத்திற்குத் தொடர்புடைய நிறுவனம் அதிகப்படியான தொகையை முதலீடு செய்துள்ளது என்பதற்கான எடுத்துக்காட்டை ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது அறிக்கையில் காட்டியுள்ளது.

Amicorp உதவி

Amicorp உதவி

இதேபோல் Amicorp உதவியுடன் உருவாக்கப்பட்ட சந்தேகத்திற்குரிய stock parking நிறுவனங்களின் தொடர்பை எங்களுடைய அறிக்கையில் மேற்கோள் காட்டியுள்ளது. இதேபோல் Amicorp என்னும் நிறுவனம் வரலாற்றில் மிகவும் மோசமான சர்வதேச மோசடி மற்றும் பணமோசடி ஊழல்களில் ஒன்றான 1MDB ஊழலில் ஈடுபட்ட நிறுவனமாகும்.

மொரீஷியஸ் பண்ட் நிறுவனங்கள்

மொரீஷியஸ் பண்ட் நிறுவனங்கள்

அதானி நிறுவனங்களின் சமீபத்திய ஃபாலோ ஆன் பப்ளிக் ஆஃபர் (FPO) முதலீட்டிலும் இதே வகையான மொரீஷியஸ் பண்ட் நிறுவனங்கள் தொடர்புடையதை நாங்கள் கவனித்துள்ளோம். இது கட்டாயம் SEBI விதிமுறைகளைத் தெளிவாக மீறுவது தான் என ஹிண்டன்பர்க் ரிசர்ச் தெரிவித்துள்ளது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச்

ஹிண்டன்பர்க் ரிசர்ச்

மேலும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் தான் சந்தேகப்படும் மொரீஷியஸ் பண்ட் நிறுவனங்களின் நிதி கொண்ட அதானி எண்டர்பிரைசர்ஸ் முதலீட்டாளர்களின் ஆங்கர் லிஸ்ட் நிறுவனங்களைப் பட்டியலிட்டு உள்ளது. (1) Ayushmat Limited (2) Coeus Global Opportunities Fund (3) Great International Tusker Fund and (4) Aviator Global Investment.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+