அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அதிகரித்து வருவது பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் தங்களுடைய முதலீடுகள் மீது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஷாட் செல்லரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நேற்று தனது டிவிட்டர் பதிவின் மூலம் அடுத்த முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்தது. இதன் வாயிலாக இன்று அதானி குழும பங்குகள் சிறிய அளவில் சரிவைச் சந்தித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள பல வங்கிகளில் 310 மில்லியன் டாலர் மதிப்பிலான அதானி குழுமத்தின் நிதி முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது டிவிட்டர் பதிவின் மூலம் தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து அரசு நிர்வாகம் பண சலவை மற்றும் பத்திர மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த பணம் முடக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச், X (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட பதிவில், இந்த விசாரணை 2021 ஆம் ஆண்டு முதல் தொடங்கியதாகவும், இந்தியத் தொழிலதிபர் கவுதம் அதானிக்கு சொந்தமான வெளிநாட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முறையற்ற நிதி பரிமாற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் இதுகுறித்து விசாரணை துவங்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.
இது தொடர்பாக சுவிட்சர்லாந்து ஊடக அறிக்கையின் படி, ஜெனீவா பொது வழக்காடு நீதிமன்றம், அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது முதல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு முன்பே இந்த குற்றச்சாட்டுகளை விசாரித்து வருகிறது என தெரிவித்துள்ளதாக டிவிட்டரில் ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிவிஸ் கோதம் சிட்டி வெளியிட்டுள்ள செய்தியில் "பில்லியனர் கௌதம் அதானி-க்கு சொந்தமான நிறுவனங்களுக்குச் சொந்தமான 310 மில்லியன் டாலருக்கும் அதிகமான பணம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஐந்து வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை ஊடகங்களில் வெளிவந்த பிறகு, சுவிட்சர்லாந்து பொது வழக்காடு நீதிமன்றம் (OAG) இந்த வழக்கைக் கையில் எடுத்துள்ளது." என்று கூறியுள்ளது.
அதானி-ஹிண்டன்பர்க் சர்ச்சை தொடர்பான வழக்குகள் முடிவடைந்து வரும் நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அடுத்தடுத்து ஹிண்டன்பர்க் ரிசர்ச் புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதால் அதானி பங்கு முதலீட்டாளர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர். ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அதானி-ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து வழக்கைச் செபி விசாரிக்க உத்தரவிட்டு உள்ளது.
ஆனால் ஹிண்டன்பர்க் ரிசர்ச் சில நாட்களுக்கு முன்பு SEBI தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகியோர் அதானி குழுமத்துடன் தொடர்புடைய ஒரு வெளிநாட்டு நிதியில் முதலீடு செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது. பல ஆவணங்களை வெளியிட்டது, மேலும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பல நிறுவனங்கள் மாதபி புரி புச்-க்கு பணத்தைப் பல வழிகளில் கொடுத்திருப்பதாகக் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
அமெரிக்க ஷார்ட் செல்லரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அதானி குழுமம் மீது தனது முதல் குற்றச்சாட்டை 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் முன்வைத்தது. இந்த குற்றச்சாட்டுகளை கௌதம் அதானி அப்போதே 'அடிப்படையில்லாதவை' என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் அடுத்தடுத்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தது மூலம் மீண்டும் அதானி-ஹிண்டன்பர்க் விவகாரம் தீவிரமாகி வருகிறது.
இந்த நிலையில் வாரத்தின் கடைசி நாளான இன்று அதானி குழுமத்தின் பங்குகள் கணிசமான சரிவைச் சந்தித்துள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ் - 0.65 சதவீதம் சரிவு
அதானி போர்ட்ஸ் & SEZ - 1.37 சதவீதம் சரிவு
அதானி பவர் - 2.16 சதவீதம் சரிவு
அதானி எனர்ஜி சொல்யூஷன் - 1.67 சதவீதம் சரிவு
அதானி கிரீன் எனர்ஜி - 0.66 சதவீதம் சரிவு
அதானி டோட்டல் கேஸ் - 0.32 சதவீதம் சரிவு
அதானி வில்மார் - 0.03 சதவீதம் உயர்வு
ஏசிசி லிமிடெட் - 1.13 சதவீதம் உயர்வு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 0.33 சதவீதம் உயர்வு
NDTV - 0.73 சதவீதம் உயர்வு
சங்கி இண்டஸ்ட்ரீஸ் - 0.15 சதவீதம் உயர்வு
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications