ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதானி குழும பங்குகள் இன்று முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தனது செயல்பாடுகளை நிறுத்தவிட்டு நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் நிறுவனர நேதன் ஆண்டர்சன் இந்த முடிவை வெளியிட்டுள்ளார். இவருடைய நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையின் மூலம் இந்தியாவில் பெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருந்த அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலர் வரையில் குறைந்தது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கடந்த ஆண்டு அதானி குழுமத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையைத் தொடர்ந்து, அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.
இந்த நிலையில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் மூடப்படும் வேளையில் முதலீட்டாளர்கள் மத்தியில் அதானி குழுமத்தின் முக்கிய டார்கெட் ஆக மாறியுள்ளது. இந்த அறிவிப்பின் பின்னர், அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் & SEZ, அதானி கிரீன் எனர்ஜி, அதானி பவர், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர், அம்புஜா சிமெண்ட், ஏ.சி.சி மற்றும் NDTV உள்ளிட்ட அதானி குழும பங்குகள் இன்று என்ன ஆகும் என்பது தான் முக்கியமான கேள்வியாக உள்ளது.
நேற்று அதாவது புதன்கிழமை வர்த்தக முடிவில், அதானி என்டர்பிரைசஸ் பங்கு 0.14% உயர்ந்து ரூ.2,385.55-க்கு வர்த்தகம் நிறைவடைந்தது. அதானி போர்ட்ஸ் & SEZ பங்கு 0.94% உயர்ந்து ரூ.1,128.15-க்கு வர்த்தகம் நிறைவடைந்தது. அதானி பவர் பங்கு 1.88% உயர்ந்து ரூ.549.30-க்கு வர்த்தகம் நிறைவடைந்தது. அதானி கிரீன் எனர்ஜி பங்கு 2.72% உயர்ந்து ரூ.1,035-க்கு வர்த்தகம் நிறைவடைந்தது.
அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் பங்கு 1.13% உயர்ந்து ரூ.780.20-க்கு வர்த்தகம் நிறைவடைந்தது. அதானி வில்மர் பங்கு 2.45% உயர்ந்து ரூ.273.50-க்கு வர்த்தகம் நிறைவடைந்தது. அதானி டோட்டல் கேஸ் பங்கு 1.16% சரிந்து ரூ.661.45-க்கு வர்த்தகம் நிறைவடைந்தது.


Click it and Unblock the Notifications