உலகளவில் புகழ்பெற்ற கேமிங் தளமான ரோப்லாக்ஸ் (Roblox), தனது நிறுவனத்தின் மதிப்பையும், பங்குகளின் மதிப்பையும் உயர்த்தி காட்ட, முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்தியதாக ஹிண்டன்பெர்க் ரிசர்ச் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது. இது மட்டும் அல்லாமல் அதானி குழும விவகாரத்தில் நடந்தது போலவே ஷார்ட் செல்லரான ஹிண்டன்பெர்க் ரிசர்ச் இந்த நிறுவனத்தில் ஷார்ட் பொசிஷனை எடுத்துள்ளது.
Roblox நிறுவனம் தனது பயனர் எண்ணிக்கை மற்றும் பயன்பாட்டு அளவீடுகளை மிகைப்படுத்தி முதலீட்டாளர்களுக்குக் காட்டியுள்ளதாக ஹிண்டன்பெர்க் ரிசர்ச் கூறுகிறது. ஹிண்டன்பெர்க் ரிசர்ச்-ன் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் ரோப்லாக்ஸ் பங்குகள் முந்தைய சந்தையின் பங்கு மதிப்பில் இருந்து 7.5 சதவீதம் வரையில் வீழ்ச்சியடைந்தன.

ரோப்லாக்ஸ் குறித்த ஹிண்டன்பெர்க்கின் குற்றச்சாட்டுகளில் பல முக்கிய பகுதிகள் உள்ளது. முதலாவதாக, ஹிண்டன்பெர்க் ரிசர்ச் நிறுவனம் ரோப்லாக்ஸ் நிர்வாகிகள் 2021 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் ஐபிஓ வெளியிட்டத்தில் இருந்து சுமார் 1.7 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்றதாகக் குறிப்பிட்டது, கடந்த ஆண்டில் மட்டும் 150 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்றது. இதேபோல் இந்த நிறுவனத்தில் மூன்று மூத்த நிர்வாகிகள், CFO உட்பட பதவி விலகியதும் ஹிண்டன்பெர்க் முக்கிய ரெட் ஃபிளாக் ஆக சுட்டிக்காட்டுகிறது.
ரோப்லாக்ஸ் தனது பயனர் எண்ணிக்கையை மறைமுகமாகக் காட்டியதாகவும் அறிக்கை குற்றம் சாட்டுகிறது. ஹிண்டன்பெர்க்கின் கண்டுபிடிப்புகள் நிறுவனம் தனது தினசரி பயனர் (DAU) அளவீட்டை 25 முதல் 42 சதவீதம் அல்லது அதற்கு மேல் மிகைப்படுத்தியிருக்கலாம் என்று கூறுகிறது. கூடுதலாக, இந்நிறுவனம் தனது பயனர் ஈடுபாடு அளவீட்டை (Engagement Hours) 100 சதவீதத்திற்கும் மேல் உயர்த்தி காட்டியிருக்கலாம் என்று நம்புகிறது.
ரோப்லாக்ஸ் தனது DAUக்களை "மக்கள்" என குறிப்பிடுகிறது, ஆனால் உண்மையில் DAU-க்கான விளக்கத்தை இது துல்லியமாகப் பிரதிபலிக்கவில்லை என்று ஹிண்டன்பெர்க் விமர்சித்ததுள்ளது.
டேட்டா ட்ராக்கர் ரோமோனிட்டர் தளத்தின் படி ரோப்லாக்ஸ் சுமார் 6.5 பில்லியன் பதிவு செய்யப்பட்ட ரோப்லாக்ஸ் கணக்குகள் உள்ளன என்று காட்டுகிறது, இது பூமியின் மக்கள்தொகைக்குக் கிட்டத்தட்டச் சமம். இது ரோப்லாக்ஸின் அளவீடுகளின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி "alt" அல்லது போட் கணக்குகளுக்காக இருக்கிறது. எனவே 6.5 பில்லியன் கணக்குகளும் மக்கள் இல்லை என்பதையும் இது உறுதி செய்வதாக கூறுகிறது ஹிண்டன்பெர்க்.
இந்த குற்றச்சாட்டுகளை முன் வைத்து தான் ரோப்லாக்ஸ் நிறுவன பங்குகள் ஷார்ட் பொசிஷனை வைத்துள்ளது ஹிண்டன்பெர்க் ரிசர்ச்.


Click it and Unblock the Notifications