சென்னை: அதானி குழுமத்தின் மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த அமெரிக்க ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச், இன்று காலையிலேயே, 'இந்தியா' விரைவில் மிகப்பெரிய விஷயம் வெளியிடப்போகிறோம் என டிவிட்டரில் தெரிவித்திருந்தது.
இந்த பதிவை சுமார் 81 லட்சம் பேர் பார்க்கும் வகையில் பெரிய அளவில் வைரலான நிலையில் 10 மணிக்கு இந்தியாவின் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் மற்றும் அதானி குரூப் தொடர்பாக புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது ஹிண்டன்பர்க் ரிசர்ச்.

அதானி குழுமம் பணத்தைத் திருடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவருக்கும் பங்கு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டியுள்ளது ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பு.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது அறிக்கையில் "அதானி நிறுவனத்தின் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டும் எந்தவிதமான ஒழுங்குமுறை நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்ற அதானி குழுமத்தின் நிர்வாகத்திற்கு இருக்கும் நம்பிக்கைக்குக் காரணம் மாதபி புச்சுடன் அதானி குழுமத்திற்கு தொடர்பு இருக்கலாம் என்று நாங்கள் முன்பு குறிப்பிட்டிருந்தோம்" என்று தெரிவித்துள்ளது.
"எங்கள் கணிப்புக்கு ஏற்றப்படி மாதபி புச்சு மற்றும் அவரது கணவர் தவால் புச்சு ஆகியோர் வினோத் அதானி பயன்படுத்திய அதே மர்மமான பெர்முடா மற்றும் மொரிஷஸ் பண்ட் நிறுவன கட்டமைப்புகளில் பங்கு வைத்திருந்தனர் என்பது எங்களுக்குத் முன் தெரியவில்லை" என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"மாதபி புச்சு மற்றும் அவரது கணவர் தவால் புச்சு ஆகியோர் 2015 ஜூன் 5 அன்று சிங்கப்பூரில் உள்ள IPE Plus Fund 1-ல் தங்கள் கணக்கைத் திறந்திருக்கிறார்கள் என்பது விசில்ப்ளோவரின் ரகசிய ஆவணங்கள் கூறுகிறது. இந்த கணக்கில் செய்யப்பட்ட முதலீட்டுக்கான ஆதாரமாக அவர்கள் சம்பளம் பெற்ற பணத்தை முதலீடு செய்வதாக குறிப்பிட்டு உள்ளனர். மேலும் புச்சு தம்பதியின் நிகர சொத்து மதிப்பு 10 மில்லியன் டாலர்கள் என்றும் IIFL-ல் ஒரு முக்கிய அதிகாரி கையெழுத்திட்டு உள்ளதாக அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது" என்றும் ஹிண்டன்பர்க் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, இந்தியா இன்ஃபோலைன் நிறுவனம் மூலம் இந்த IPE Plus Fund என்ற பண்ட்-ஐ தொடங்கியுள்ளார். வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனமான இந்தியா இன்ஃபோலைன் நிறுவனம் வயர் கார்டு ஊழலுடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது என ஹிண்டன்பர்க் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வினோத் அதானி, அதானி குழுமத்திற்கு அதிக விலையில் மின் சாதனங்களை விற்பது மூலம் பணத்தை திருடி, அதனை இந்த IPE Plus Fund-ல் முதலீடு செய்து, அதன் வாயிலாக அதானி பங்குகளில் முதலீடு செய்து மறைமுகமாக அதானி பங்குகளின் விலை உயர்த்தப்பட்டது குற்றச்சாட்டுகளை ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த புதிய தகவல், அதானி குழுமத்தின் மீதான சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
அதானி குழுமம் குறித்த ஹிண்டன்பர்க் ரிசர்ச்-ன் தனது முந்தைய அறிக்கையைத் தொடர்ந்து, செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் மற்றும் அதானி குரூப் மத்தியிலான தொடர்பாகப் பற்றிய மற்றொரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது ஹிண்டன்பர்க்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications