அதானி குழுமத்தை வைத்து இந்திய பங்குச்சந்தையை தலைகீழாக புரட்டிப்போட்ட ஹிண்டன்பர்க் அடுத்தடுத்து தனது வருமானத்தை பெருக்க பல முன்னணி கார்பரேட் நிறுவனங்களை டார்கெட் செய்து அறிக்கைகளையும், மோசடிகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது.
நாதன் ஆண்டர்சன் தலைமையிலான Hindenburg Research நிறுவனம் அதானி குழுமம் குறித்து பல நூறு பக்க குற்றச்சாட்டுகளை முன்வைத்தை தொடர்ந்து, டிவிட்டர் நிறுவனர் ஜாக் டோர்சிக்கு சொந்தமான பிளாக் நிறுவனத்தில் நடக்கும் தில்லு முல்லு வேலைகளை பட்டியலிட்டு அதன் பங்குகளை ஷாட் பொசிஷன் செய்தது.
இதை தொடர்ந்து பல வாரங்கள் அமைதியாக இருந்த நாதன் ஆண்டர்சன் தலைமையிலான Hindenburg Research நிறுவனம் செவ்வாய்கிழமை 2023 ஆம் ஆண்டில் தனது டார்கெட் பட்டியலில் ஐகான் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை சேர்த்துள்ளது. அமெரிக்காவின் பிரபல முதலீட்டாளரான Carl Icahn-க்கு சொந்தமான நிறுவனம் தான் இந்த Icahn Enterprises.

Icahn Enterprises நிறுவனம் கார்ப்பரேட் ரைடர் மற்றும் முதலீட்டு ஆர்வலர் கார்ல் ஐகானால் நடத்தப்படும் 18 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை கொண்ட ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் கார்ல் ஐகான் மற்றும் அவருடை மகன் Brett ஆகியோர் மட்டுமே சுமார் 85 சதவீத பங்குகளை வைத்துள்ளனர்.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் செய்த ஆய்வில் 3 முக்கிய காரணங்களால் ஐகான் எண்டர்பிரைசஸ் பங்குகள் அதன் உண்மையான விலையை காட்டிலும் சுமார் 75 சதவீதம் அதிகப்படியான விலைக்கு மதிப்பிடப்படுவதை கண்டுப்படித்துள்ளது. முதலாவதாக ஐகான் எண்டர்பிரைசஸ் கடைசியாக அறிவிக்கப்பட்ட நிகர சொத்து மதிப்புக்கு (NAV) 218% பிரீமியத்தில் வர்த்தகம் செய்கிறது. இதை சந்சையில் இருக்கும் பிற நிறுவனங்களை காட்டிலும் மிகவும் அதிகமானது.
இரண்டாவதாக ஐகான் எண்டர்பிரைசஸ் இன் குறைந்த ல்கிவிட் மற்றும் ப்ரைவேட் சொத்துக்கள் அதிப்படியான விலைக்கு மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளதன் தெளிவான ஆதாரங்களை கண்டுள்ளதாக ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது. கடைசியாக நிதி நிலைகள் அறிவித்ததை தொடர்ந்து இன்றுவரை கூடுதல் செயல்திறன் இழப்புகளை சந்தித்துள்ளதாகவும் ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது.
வழக்கம் போல் இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பாகவே ஹிண்டன்பர்க் நிறுவனம் ஐகான் எண்டர்பிரைசஸ் நிறுவன பங்குகளில் ஷாட் பொஷினிங் செய்துள்ளது. ஹிண்டன்பேர்க் நிறுவனம் என்பது குறுகிய காலப் பங்கு விற்பனையில் தனித் திறன் பெற்றது. அதாவது ஒரு ஒரு நிறுவனத்தின் பங்கு விலை குறையும் என்று எதிர்பார்த்து அதற்காகப் பிட்டிங் செய்து பணம் சம்பாதிப்பதில் கெட்டிக்கார நிறுவனம்.
ஐகான் எண்டர்பிரைசஸ் நிறுவன பங்கு மதிப்பில் பாதிப்பு ஏற்படுத்துவது மூலம் ஹிண்டன்பர்க் நிறுவனம் பலன் அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications