ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையால் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்புடன் ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராக இருந்த கௌதம் அதானி சொத்து மதிப்பு தற்போது வெறும் 50 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
அதானி குழுமத்தின் மீதான விசாரணை இன்னும் தொடர்ந்து வரும் வேளையில், ஹிண்டன்பர்க் ரிசர்ச் அடுத்த வேட்டைக்கு தயாராகியுள்ளது. ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் New Report Soon - another big one என்று ட்வீட் செய்துள்ளது.
இதனால் அடுத்த பெரிய நிறுவனம் எது.? என்ற கேள்வி அனைத்து முன்னணி நிறுவனங்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச்
ஹிண்டன்பர்க் ரிசர்ச் ஒவ்வொரு அறிவிப்பும் ஒரு நிறுவனத்தின் நிதிநிலை, பங்கு மதிப்பை புரட்டிப்போடும் அளவுக்கு தான் இருக்கும். இதேபோல் பெரிய நிறுவனங்கள் தனது வர்த்தகம், வருவாய் அதிகரிக்க முறைகேடான முறைகளை கையாளும் போது ஹிண்டன்பர்க் ரிசர்ச் போன்ற நிறுவனங்கள் அதை கண்டுப்பிடித்து பணமாக்கிக்கொள்ளும்.
அடுத்த டார்கெட்
ஹிண்டன்பர்க் ரிசர்ச் அடுத்து எந்த நிறுவனத்தை டார்கெட் செய்ய போகிறது என்ற கேள்விக்கான பதில் அதன் ரிப்போர்ட்டிங் முறையை பார்த்தாலே ஒரு சில தீர்வுக்கு வர முடிகிறது. இதில் முக்கியமாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் டார்கெட் செய்வது அனைத்தும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பிரபலமான அதேநேரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிறுவனங்கள் தான்.
துறைவாரியான ஆய்வு
மேலும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் துறைவாரியாக ஆய்வு செய்கிறது உதாரணமாக சமீபத்தில் அதாவது கடந்த ஒரு வருடத்தில் எலக்ட்ரிக் வாகன துறையில் நிகோலா கார்ப் வெற்றியை தொடர்ந்து இத்துறையில் இருக்கும் Mullen Automotive, Standard Lithium, எலான் மஸ்க் ஆகியோரை டார்கெட் செய்து மொத்தமாக ஒரு துறையை வீழ்த்தியுள்ளது.
ஹெல்த்கேர் துறை
EV துறைக்கு முன்பு ESG துறை இதை தொடர்ந்து சமீபத்தில் ஹெல்த்கேர் துறையில் Natera, Enochian Biosciences, Establishment Labs, Welltower ஆகிய நிறுவனங்களை டார்கெட் செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். இதன் பின்பு தான் அதானி குரூப் குறித்து ஆய்வு செய்து பல முக்கியமான விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.
இந்திய நிறுவனமா..?
இந்த நிலையில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அடுத்த அறிக்கை இந்திய நிறுவனம் குறித்து இருக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக ஹிண்டன்பர்க் ரிச்ர்ச் நிறுவனம் தனது ட்வீட்டில் another big one என்று குறிப்பிட்டு உள்ளது, நிகோலா கார்ப் நிறுவனத்திற்கு பின்பு ஹிண்டன்பர்க் ரிசர்ச் டார்கெட் செய்த பெரிய நிறுவனம் அதானி குழுமம். யார் இந்த நாதன் ஆண்டர்சன்..?
நாதன் ஆண்டர்சன்
நாதன் ஆண்டர்சன் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வணிகத்தில் பட்டம் பெற்ற பின்பு, Factset ரிசர்ச் சிஸ்டம்ஸ் இன்க் என்ற டேட்டா நிறுவனத்தில் நிதித்துறையில் தனது பணியைத் துவங்கினார். இன்று உலக நிறுவனங்களை மிரட்டி வருகிறார்.
ஷாட் செல்லிங்
நேதன் ஆண்டர்சன் தலைமை வகிக்கும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஷாட் செல்லிங் விஷயத்தில் கில்லாடி. பங்குச்சந்தையில் பெரிய பணத்தைப் பார்க்க சில வழிகள் உள்ளது, அதில் முக்கியமானது Short Position, மற்றொன்று Long Postion. இதில் Short Position என்றால் ஒரு நிறுவனத்தின் பங்கு விலை குறையும் எனப் பிட்டிங் செய்து முதலீடு செய்வது, இதில் பங்கு விலை குறைந்தால் மட்டுமே முதலீட்டாளர்களுக்கு லாபம்.
Hindenburg Research நிறுவனம்
Nathan Anderson 2017 ஆம் ஆண்டு Hindenburg Research என்ற தடயவியல் நிதி ஆராய்ச்சி நிறுவனத்தை உருவாகினார். இந்த நிறுவனம் பங்குச்சந்தை மட்டும் அல்லாமல், கிரெடிட், டிரைவேட்டிவ்ஸ் ஆகிய துறைகளையும் ஆய்வு செய்கிறது. Nathan Anderson ஷாட் செல்லிங் மூலம் பெரும் பணத்தை பார்க்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.
முக்கியப் பணி
இதற்காக Nathan Anderson-ல் உருவாக்கப்பட்ட Hindenburg Research நிறுவனம் கணக்கியல் முறைகேடுகள், தவறான நிர்வாகம் மற்றும் வெளியிடப்படாத நிதி பரிவர்த்தனைகள் போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட நிதி மோசடிகளைத் தேடி வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் கட்டமைப்பை உருவாக்கி ஷாட் செல்லிங் முறையில் பணம் சம்பாத்தி வருகிறார்.
முதலீடு, லாபம்
உதாரணமாக அதானி குழுமம் குறித்து பக்கம் பக்கமாக குற்றச்சாட்டுகளை அடுக்கி ஜனவரி 24 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையிலும், அதன் பின்பு அதானி குழும அறிக்கைக்கு பதிலளித்த ஜனவரி 29ஆம் தேதி அறிக்கையிலும் அதானி குழும பங்குகள் மீது Hindenburg Research ஷாட் செல்லிங் ஆப்ஷன்களை வைத்துள்ளது என வெளிப்படையாக தெரிவித்திருந்தது.

More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications