யார் இந்த இந்துஜா பிரதர்ஸ்.. குடும்ப சொத்துக்காக இங்கிலாந்து நீதிமன்றத்தில் போராட்டம்.. ஏன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்துஜா பிரதர்ஸ் நாம் நிறைய செய்திகளில் படித்திருப்போம். 2020ம் ஆண்டின் இங்கிலாந்து நாட்டின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவைக் பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்தியர்களான இந்துஜா சகோதரர்கள் ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் ஆகியோர் 2வது இடத்திற்கு சென்றுள்ளனர்.

 

இந்துஜா பிரதர்ஸ் மொத்தம் நான்கு பேர். அவர்களில் ஸ்ரீசந்த், கோபிசந்த் ஆகியோர் லண்டனிலும், பிரகாஷ் ஜெனிவாவிலும், அசோக் மும்பையிலும் உள்ளனர்.

பல பில்லியன்களுக்கு சொந்தமான இவர்கள் தற்போது, இங்கிலாந்தினை சேர்ந்த இந்துஜா குழும சகோதர்கள் தங்கள் குடும்ப சொத்து சம்பந்தமாக இங்கிலாந்து நீதிமன்றத்தினை நாடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சகோதரர்களுக்கு எதிராக வழக்கு

சகோதரர்களுக்கு எதிராக வழக்கு

மேலும் இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் இந்த வழக்கினை, சகோதரர்களுக்கு எதிராக இந்த குடும்பத்தின் patriarch என்று அழைக்கப்படும், 84 வயதான ஸ்ரீசந்த் பரமானந்த் இந்துஜா கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது இவரது சகோதரர்களான ஜிபி இந்துஜா (80 வயது), பி பி இந்துஜா (75 வயது), ஏபி இந்துஜா (69 வயது).

பிரச்சனையாய் வந்த கடிதம்

பிரச்சனையாய் வந்த கடிதம்

ஜூலை 2, 2014 தேதியிட்ட ஒரு கடித்தத்தின் பற்றிய விவாதம் தான் இந்த வழக்கு. சரி அப்படி என்ன தான் அந்த கடிதத்தில் உள்ளது. கடிதத்தில் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் நிர்வாகிகளாக இருப்பர். மேலும் எந்தவொரு சகோதரரின் பேரில் உள்ள ஒருவரின் சொத்து, நால்வருக்கும் சொந்தமானது என்றும் கூறப்பட்டுள்ளது.

வெளிசத்திற்கு வந்த பிரச்சனை
 

வெளிசத்திற்கு வந்த பிரச்சனை

மேலும் இது தொடர்பான மற்றொரு கடிதமும் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிகிறது. இது ஜூலை 1, 2014 தேதியும் இடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த செவ்வாய்கிழமையன்று லண்டனை சேர்ந்த நீதிபதி வழங்கிய தீர்ப்பில் தான் இப்பிரச்சனையும் வெட்ட வெளிசத்திற்கு வந்துள்ளது.

இந்துஜா வங்கியை கைபற்ற முயற்சி

இந்துஜா வங்கியை கைபற்ற முயற்சி

கோபிசந்த், பிரகாஷ் மற்றும் அசோக் ஆகிய மூன்று சகோதரர்களும், இந்த கடிதத்தினை பயன்படுத்தி இந்துஜா வங்கியின் கட்டுப்பாட்டை கைபற்ற முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த சொத்தானது ஸ்ரீசந்தின் பெயரில் உள்ள சொத்தாகும். இந்த கடிதம் எந்தவொரு சட்ட ரீதியான விளைவையும் கொண்டிருக்க கூடாது என்றும் ஸ்ரீ சந்த் மற்றும் அவரது மகள் வினு விரும்புகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

வணிகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை

வணிகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை

கடந்த 2016ம் ஆண்டிலேயே ஸ்ரீசந்த் குடும்ப சொத்துக்கள் பிரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகவும், அவரின் மகள் வினு கூறியுள்ளதாகவும் இடி செய்திகள் கூறுகின்றன. இதற்கிடையில் மற்று மூன்று சகோதாரர்கள் இந்த வழக்கினால் எங்கள் வணிகத்தில் எந்த பிரச்சனையும் வராது என்றும், இது எங்கள் குடும்பத்திற்கு எதிரானது என்றும் கூறப்படுகிறது.

எல்லாம் எல்லோருக்கும் சொந்தம்

எல்லாம் எல்லோருக்கும் சொந்தம்

எங்களின் கொள்கைகள் பல தாசப்தங்களாக உள்ளது. குறிப்பாக எல்லாம் அனைவருக்கும் சொந்தமானது. எதுவும் யாருக்கும் சொந்தமானது அல்ல என்றும் இடி செய்தியில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்துஜா குழுமத்தின் இந்த பிரச்சனை உலகப் வர்த்தகத்தில் எந்த பிரச்சனையும் கொண்டு வராது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்துஜா குழுமத்திற்கு சொந்தமாக பல நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. குறிப்பாக வாகனம், விருந்தோம்பல், வங்கி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Hinduja brothers battle for $11 billion dollar family assets

UK based hinduja brothers are locked in a legal dispute in the high court in England over their billionaire family assets.
Story first published: Wednesday, June 24, 2020, 13:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X