மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ஹிந்துஜா குழுமம், வங்கி மற்றும் நிதி, எரிசக்தி, ஊடகம், கனரக வாகனங்கள், லூப்ரிகன்ட் பொருட்கள் மற்றும் கேபிள் தொலைக்காட்சி போன்ற பல்வேறு துறைகளில் செயல்படும் ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனமாகும்.
இந்த ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் கோபிசந்த் பி. ஹிந்துஜா, 85 வயதில், லண்டனில் காலமானதாக பி.டி.ஐ செய்தி அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. ஹிந்துஜா குடும்பத்தின் இரண்டாம் தலைமுறை தலைவரான இவர் கடந்த ஆண்டு மே மாதம் தனது மூத்த சகோதரர் ஸ்ரீசந்த் மறைந்ததை அடுத்து, குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிந்துஜா குழுமம், கடந்த சில வருடங்களாக தனது வர்த்தகத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறது, இதேபோல் தென்னிந்தியாவில் தொடர்ந்து தனது முதலீட்டை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஆந்திராவில் 20000 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்து செய்வதாக ஹிந்துஜா குழுமம் தெரிவித்தது. இந்த நிலையில் ஹிந்துஜா குழும தலைவர் மறைந்துள்ளது இக்குழுமத்திற்கு பெரும் சோகமாக அமைந்துள்ளது.
கோபிசந்த் பி. ஹிந்துஜா பிரிந்து அவருடைய மனைவி சுனிதா, மகன்கள் சஞ்சய், தீரஜ், மற்றும் மகள் ரீட்டா ஆகியோரும், மொத்த ஹிந்துஜா குடும்பமும் பெரும் சோகத்தில் உள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில், சண்டே டைம்ஸ் பணக்காரர்கள் பட்டியல், கோபிசந்த் ஹிந்துஜாவும் அவரது குடும்பத்தினரும் பிரிட்டனின் மிகப் பெரிய பணக்காரர்கள் என்ற நிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டதாகக் தெரிவித்திருந்தது.
கார்ப்ரேட் வட்டாரங்களில் 'ஜி.பி’ என அறியப்பட்ட கோபிசந்த் பி. ஹிந்துஜா, ஹிந்துஜா குழுமத்தின் மற்றும் இங்கிலாந்தில் உள்ள ஹிந்துஜா ஆட்டோமோட்டிவ் லிமிடெட்டின் தலைவராகப் பதவி வகித்தார்.
1959-ல் மும்பையில் குடும்பத் தொழிலைத் தொடங்கிய அவர், நிறுவனத்தை இந்தியா-மத்திய கிழக்கு வர்த்தகப் பிரிவில் இருந்து, பில்லியன் கணக்கான மதிப்புள்ள பன்முகத்தன்மை கொண்ட சர்வதேச வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இக்குழுமத்தை வளர்ச்சி அடையச் செய்வதில் முக்கியப் பங்காற்றினார்.
அவர் எடுத்த முக்கிய முடிவுகளில் ஒன்று, 1984-ல் கல்ஃப் ஆயில் நிறுவனத்தை கையகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து, 1987-ல் அப்போது சிக்கலில் இருந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தை வாங்கியது, இந்தியாவில் என்.ஆர்.ஐ. முதலீடுகளில் குறிப்பிடத்தக்க அளவில் செய்த வர்த்தக சாம்ராஜ்ஜியமாக ஹிந்துஜா குழுமம் உருவானது.
ஒரு தொலைநோக்கு பார்வையாளராக, ஜி.பி. ஹிந்துஜா குழுமத்தை மின்சாரம் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் விரிவுபடுத்தினார். இந்தியா முழுவதும் பெரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவும் திட்டங்களை அவர் தலைமையில் நடந்தது.
மும்பையில் உள்ள ஜெய் ஹிந்த் கல்லூரியில் 1959-ல் பட்டம் பெற்ற அவர், வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் டாக்டர் பட்டமும், லண்டன் ரிச்மண்ட் கல்லூரியில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டமும் பெற்றார்.
உலகளவில் சுமார் 200,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இந்த நிறுவனம், 1919-ல் பர்மனந்த் தீப்சந்த் ஹிந்துஜாவால் நிறுவப்பட்டது. சிந்து (அப்போது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது, தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பகுதியிலிருந்து ஈரானுக்குக் குடிபெயர்ந்த பிறகு அவர் இந்த நிறுவனத்தை தொடங்கினார். இந்த வணிகத் தலைமையகம் பின்னர் 1979-ல் ஈரானிலிருந்து லண்டனுக்கு மாற்றப்பட்டது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications