இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவி வரும் வேளையில் இந்தியாவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய ஊசி தொழிற்சாலை சுற்றுச்சூழல் பாதிப்புக் காரணமாக மூடப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் தற்போது சிரிஞ் மற்றும் ஊசி தட்டுப்பாடு நிலவும் நிலை உருவாகியுள்ளது, இந்த மாபெரும் தொழிற்சாலை மூடுவதற்கு என்ன காரணம்.
ஹரியானா மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுசூழல் மற்றும் காற்றுமாசுப்பாட்டுக் காரணமாகப் பல தொழிற்சாலைகளைத் தற்காலிகமாக மூடப்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் இந்தியாவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய ஊசி தொழிற்சாலையான ஹிந்துஸ்தான் சிரிஞ் அண்ட் மெடிக்கல் டிவைஸ் நிறுவனம் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஹிந்துஸ்தான் சிரிஞ் அண்ட் மெடிக்கல் டிவைஸ்
இந்தியாவின் சிரிஞ் தேவையில் சுமார் 3ல் இரண்டு பங்கை ஹிந்துஸ்தான் சிரிஞ் அண்ட் மெடிக்கல் டிவைஸ் (HMD) நிறுவனம் பூர்த்திச் செய்து வரும் நிலையிலும், கோவிட் வேக்சின் ட்ரைவ் முழு வேகத்தை எட்டியுள்ள நிலையிலும், ஒமிக்ரான் வைரஸ்-ம் பரவி வரும் இந்த வேளையில் இந்தியாவில் பெரிய அளவில் டிமாண்ட் அண்ட் சப்ளை பிரச்சனை உருவாகும்.
4 தொழிற்சாலைகள்
ஹிந்துஸ்தான் சிரிஞ் அண்ட் மெடிக்கல் டிவைஸ் நிறுவனம் ஃபரிதாபாத்-ல் 11 ஏக்கர் அளவில் சுமார் 4 தொழிற்சாலையை வைத்துள்ளது, இதில் 3 தொழிற்சாலைகள் ஹரியானா மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின் பெயரில் மூடப்பட்டு உள்ளது.
ராஜீவ் நாத்
வெள்ளிக்கிழமை வெளியான உத்தரவின் படி எங்களுடைய தொழிற்சாலைகளை மூட முடிவு செய்துள்ளோம் என HMD நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் ராஜீவ் நாத் தெரிவித்துள்ளார். மேலும் தங்களிடம் 2 நாட்களுக்கு அதிகமாக இருப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
1.2 கோடி சிரிஞ் தயாரிப்பு
தினமும் 1.2 கோடி சிரிஞ் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தற்போது மூடப்பட்டு உள்ளது, திங்கட்கிழமை 40 லட்சம் சிரிஞ் தயாரிக்கும் தொழிற்சாலையும் மூடப்பட உள்ளதால் சந்தையில் சிரிஞ் மற்றும் யின் தட்டுப்பாடு பெருமளவில் ஏற்படும் என HMD நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் ராஜீவ் நாத் தெரிவித்துள்ளார்.
ஃபரிதாபாத்
ஹரியானா மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஃபரிதாபாத்-ல் இருக்கும் 228 தொழிற்சாலைகளை மூட உத்தரவிட்டுள்ளது. டெல்லி என்சிஆர், ஹரியானா ஆகிய பகுதிகளில் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்த முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
பிரதமர் மோடி
இந்நிலையில் HMD நிறுவனம் பிரதமர் மோடிக்கும், சுகாதார அமைச்சருக்கும் கோவிட் வேக்சின் டிரைவ் மற்றும் ஹெல்த்கேர் சேவைக்கும் சிரிஞ் மற்றும் ஊசி கட்டாயத் தேவையாக உள்ளது. இந்த நிலையில் தொழிற்சாலை மூடுவதன் மூலம் பெரிய அளவிலான தட்டுப்பாடு நாடு முழுவதும் ஏற்படும் எனக் கடிதம் அனுப்பியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications