சென்னை: இந்தியாவின் முன்னணி FMCG நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தில் 2024 ஆம் நிதியாண்டில் சுமார் ரூ.1 கோடிக்கு அதிகமாக வருடாந்திர சம்பளம் பெற்ற மேனேஜர்களின் எண்ணிக்கையில் முந்தைய ஆண்டை காட்டிலும் குறைவு காணப்பட்டாலும், பிற நிறுவனங்களை ஒப்பிடுகையில் அதிகமான அளவிலேயே உள்ளது.
பொதுவாக பெரிய நிறுவனங்களில் மூத்த அதிகாரிகளுக்குப் பல கோடி ரூபாய் சம்பளம் அளிப்பது என்பது சர்வசாதாரணமான விஷயமாகும். ஆனால் சில நிறுவனங்களில் மேனேஜர் அளவில் இருப்பவர்களுக்கு அதிகப்படியான சம்பளம் வழங்கப்படுகிறது.

இந்த வகையில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் போன்ற நிறுவனங்கள் எத்தனை பேருக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சம்பளம் கொடுக்கப்படுகிறது என்பதை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு சந்தையில் பெரும் விளம்பரத்தைத் தேடி வருகிறது. இந்த வகையில் 2024 ஆம் நிதியாண்டுக்கான சம்பள உயர்வு அளிக்கப்பட்டு பின்பு ஹிந்துஸ்தான் யூனிலீவர் இவ்வாண்டுக்கான விபரங்களை வெளியிட்டு உள்ளது.
2023ஆம் நிதியாண்டில் 205 மேனேஜர்கள் ரூ.1 கோடிக்கு மேற்பட்ட சம்பளம் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 200 ஆகக் குறைந்துள்ளது. ஆயினும்கூட, இது இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய நிலை, அதாவது 2022 ஆம் நிதியாண்டில் இருந்த 163 விட அதிகமாகும்.
நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையின்படி, கடந்த நிதியாண்டில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் ஊழியர்களுக்கான சராசரி சம்பள உயர்வு 7.38% ஆக இருந்தது. இது முந்தைய (FY23) ஆண்டின் 10.73% உயர்வை விட குறைவு. அதே நேரத்தில், மேலாளர்கள் அல்லாத பிற ஊழியர்களுக்கான சராசரி சம்பள உயர்வு 4.4% ஆக இருந்துள்ளது என தெரிவித்துள்ளது.
குறிப்பிடத்தக்க விஷயமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக ரூ.1 கோடிக்கு மேற்பட்ட சம்பளம் பெறும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிர்வாகிகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேற்பட்டோர் 40 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கின்றனர். இளம் தலைமுறையில் முக்கிய நிர்வாக பொறுப்புக்கு வந்துள்ளது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் சம்பள அமைப்பு, நிறுவனத்தின் விற்பனை மற்றும் லாபத்தைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. இதன் மூலம் சந்தையில் அதிக விற்பனை செய்த ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கும்.
ஹிந்துஸ்தான் யூனிலீவர் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள ஐஐட், ஐஐஎம் கல்லூரியில் இருந்து கூட ஊழியர்களைத் தேர்வு செய்வது வழக்கம். இதன் காரணமாக, திறமையான அதிகாரிகளைத் தக்கவைத்துக்கொள்ள ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் கூடுதல் முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்தியாவில் தற்போது பல்வேறு நுகர்வோர் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளில் பலர், குறிப்பாக FMCG துறையில் இருப்பவர்கள், ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தில் பணியாற்றியவர்கள்.
இதற்கு உதாரணமாக சேனல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி லீனா நாயர், கோத்ரேஜ் நுகர்வோர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுதீர் சிதாபதி, நிவியா இந்தியாவின் நிர்வாக இயக்குநர் கீதிகா மேத்தா, கொல்கேட் பால்மோலிவ் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் பிரபா நரசிம்மன், நிவியா இந்தியா-வின் நிர்வாக இயக்குனர் கீதிகா மேத்தா ஆகியோர் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தில் பணியாற்றி வெளியேறியவர்கள்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications