ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் (HUL) இன்று மிகவும் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. வருகிற 27 ஆம் தேதி ஜூன் 2023 முதல் ரோஹித் ஜாவா இந்தியாவின் மிகப்பெரிய FMCG நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் CEO ஆக பொறுப்பேற்பார் என ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் தெரிவித்துள்ளது.
56 வயதான ரோஹித் ஜாவா தற்போது லண்டன் தலைமை அலுவலகத்தில் யூனிலீவரின் டிரான்ஸ்பார்மேஷன் தலைவராக உள்ளார். இதன் மூலம் சர்வதேச சந்தையின் ஒட்டுமொத்த அனுபவம், வர்த்தக முறை, உக்திகள் என அனைத்தும் அத்துப்படியாக இருக்கும்.
இந்திய FMCG சந்தையில் பல முன்னணி நிறுவனங்கள் இறங்கியுள்ளதால் இனி வரும் காலத்தில் பெரும் போட்டி இருக்கும். இந்த நிலையில் ரோஹித் ஜாவா ஜாக்பாட் ஆகவும் அமையலாம் அல்லது தோல்வி அடையவும் வாய்ப்பு உள்ளது.
ஹிந்துஸ்தான் யுனிலீவர்
ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சீவ் மேத்தா நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதனால் ஏப்ரல் 1, 2023 முதல் ரோஹித் ஜாவா நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் முழு நேர இயக்குநராக இணைவார் என்று HUL தெரிவித்துள்ளது. யூனிலீவர் தெற்காசியாவின் தலைவராகவும் ரோஹித் ஜாவா பதவியேற்க உள்ளார்.
ரோஹித் ஜாவா
ரோஹித் ஜாவா 1988 இல் மேனேஜ்மென்ட் ட்ரைனியாக ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்துடன் தனது பணியை தொடங்கினார். வட ஆசியாவிற்கான EVP ஆகவும், யுனிலீவர் சீனாவின் தலைவராகவும் பெறுப்பில் இருந்தார். இக்காலக்கட்டத்தில் சீனா சந்தையில் ஒரு போட்டி, லாபம் மற்றும் நிலையான வணிக தளமாக யுனிலீவர்-ஐ மாறுவதற்கு வழிவகுத்தார் ரோஹித் ஜாவா.
பிலிப்பைன்ஸ்
யூனிலீவர் பிலிப்பைன்ஸின் தலைவராக இருந்த போது உலகளவில் யூனிலீவரின் முதல் 10 சந்தைகளில் ஒன்றாக இச்சந்தை வர்த்தகத்தை உயர்த்தினார். இதன் மூலம் சென்ற இடமெல்லாம் வெற்றி தடத்தை பதித்தவர் கட்டாயம் இந்திய சந்தையில் யுனிலீவர்-க்கு இருக்கும் ஆதிக்கத்தை தொடர்ந்து தக்க வைக்க வாய்ப்பு அதிகம்.
கல்வி
ரோஹித் ஜாவா செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார், பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் எஃப்எம்எஸ்ஸில் எம்பிஏ படித்தார். ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் மேம்பட்ட மேலாண்மை பட்டத்தையும் பெற்றார்.
சஞ்சீவ் மேத்தா
தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சீவ் மேத்தா அக்டோபர் 2013 இல் HUL இன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அவர் தலைவராக இருந்த பத்தாண்டுகளில் வர்த்தகம் 50 ஆயிரம் கோடியைத் தாண்டியது விற்றுமுதல் மற்றும் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 17 பில்லியன் டாலர் முதல் 75 பில்லியன் டாலர் வரை என நான்கு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
முக்கிய இணைப்பு
மேலும் சஞ்சீவ் மேத்தா GSK கன்ஸ்யூமர் ஹெல்த்கேர் நிறுவனத்தை ஹிந்துஸ்தான் யுனிலீவர் உடன் இணைப்பது போன்ற கையகப்படுத்துதல் திட்டத்தை வெற்றிகரமாக முடித்ததில் இவரின் பங்கு மிகவும் முக்கியமானதாக விளங்கியது.


Click it and Unblock the Notifications