இந்தியாவில் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியங்கள் தனது முக்கியமான வர்த்தக பிரிவை தனியாகப் பிரித்து பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களின் கூடுதல் முதலீட்களையும் ஈர்க்கவும், நிறுவனத்தின் மதிப்பை அதிகரிக்கவும் சமீப காலமாக டீமெர்ஜிங் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதில் முதல் முறையாக பெரிய அளவில் வெற்றி அடைந்தது முகேஷ் அம்பானியின் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் தான்.
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் வெற்றியை தொடர்ந்து பல முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியங்கள் Demerging திட்டத்தில் குதித்துள்ளது. அதில் முக்கியமாக ஐடிசி தனது ஹோட்டல் வர்த்தகத்தை தனியாக பிரிக்க உள்ளது, இதன் வழியில் ஹிந்துஸ்தான் யுனிலீவர் தற்போது முக்கியான முடிவை எடுத்துள்ளது.

ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் (HUL) தனது ஐஸ்கிரீம் பிரிவை தனியாக பிரித்து பட்டியலிடும் முக்கியமான முடிவை இன்று அறிவித்துள்ளது. இந்த முடிவு ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிர்வாகத்தை நியமிக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட குழுவால் ஆய்வு செய்யப்பட்ட பின்னர் எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை நிறுவனத்தின் நீண்ட கால வளர்ச்சி மற்றும் நிறுவனத்தின் மதிப்பை அதிகரிப்பதற்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று இக்குழு கண்டறிந்துள்ளது.
ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் கீழ் இந்தியாவில் குவாலிட்டி வால்ஸ், கார்னெட்டோ மற்றும் மேக்னம் உள்ளிட்ட ஐஸ்கிரீம் பிராண்டுகள் உள்ளது. இந்த 3 பிராண்டுகள் HUL நிறுவனத்தின் வருடாந்தி மொத்த விற்பனையில் சுமார் 3 சதவீத பங்கீட்டை வைத்துள்ளது. அதாவது ஹிந்துஸ்தான் யுனிலீவர் -ன் மொத்த ரூ.60,000 கோடி விற்பனையில் ஐஸ்கிரீம் மட்டும் 1800 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்கிறது.
ஐஸ்கிரீம் வணிகம் HUL இன் மொத்த வருவாயில் சுமார் 3% மட்டுமே பங்களித்தாலும், அதிக வளர்ச்சி கொண்ட பிரிவாக உள்ளது. இப்பிரிவின் நீண்ட கால வளர்ச்சிக்கு ஏதுவாக சிறப்பு குளிர் சங்கிலி உள்கட்டமைப்பு மற்றும் தனித்துவமான விநியோக சேனல்கள் கொண்டுள்ளது.
ஹிந்துஸ்தான் யுனிலீவர் ஐஸ்கிரீம் வணிகத்தை பிரிப்பதன் மூலம், இதன் பிற முக்கியமான அழகு, உணவு, சுகாதாரம் மற்றும் வெல்னஸ் போன்ற அதன் முக்கிய வணிகப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்த முடியும். மேலும் ஐஸ்கிரீம் வணிகத்தை நிர்வாகம் செய்ய தனியாக ஒரு நிர்வாக குழுவை அமைக்க உள்ளது.
ஹிந்துஸ்தான் யுனிலீவர் ஐஸ்கிரீம் வணிகத்தை எப்படி, எப்போது பிரிக்கும் என்பது இனி தான் திட்டமிடும். ஆனால் இது ஹிந்துஸ்தான் யுனிலீவர் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயமாக உள்ளது.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications