ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் மினிமலிஸ்ட் எனப்படும் அழகு சாதன பொருட்களுக்கான பிராண்டை 3 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து வாங்குவதற்கு முன் வந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் தற்போது சிறிய அளவில் தொடங்கப்படும் நேரடியாக வாடிக்கையாளர்களை சென்று சேரக்கூடிய டைரக்ட் டு கன்ஸ்யூமர் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இதுபோன்ற சிறு நிறுவனங்களை கையகப்படுத்துவதையும் நாம் தொடர்கதையாக பார்த்து வருகிறோம். தற்போது ஜெய்ப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மினிமலிஸ்ட் நிறுவனம் ஹிந்துஸ்தான் யுனிலிவர் வசம் செல்ல இருக்கிறது.

இந்த நிறுவனம் தோல் பராமரிப்பு மற்றும் கூந்தல் பராமரிப்பு மற்றும் குழந்தைகளுக்கான தோல் பராமரிப்பு பொருட்களை விற்பனை செய்து வருகிறது . ராகுல் மற்றும் மோகித் யாதவ் என்ற சகோதரர்களால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் இந்த சகோதரர்கள் இருவரும் 84 சதவீத பங்குகளையும், பிஎஸ்பி என்ற நிறுவனம் ஆறு சதவீத பங்குகளையும் கொண்டிருக்கிறது. தற்போது இ-காமர்ஸ் தளங்களில் பலராலும் அதிகம் வாங்கப்படக்கூடிய ஒரு ஸ்கின் கேர் பிராண்டாக மினிமலிஸ்ட் இருக்கிறது.
இந்த நிலையில் ஹிந்துஸ்தான் லிமிடெட் நிறுவனம் மினிமலிஸ்ட்டை கையகப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. 3000 கோடி ரூபாயை வழங்குவதற்கு ஹிந்துஸ்தான் யுனிலிவர் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மினிமலிஸ்ட் பிராண்ட் மற்றும் அதன் கீழ் விற்பனை செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்திற்கு சொந்தமானதாக மாறிவிடும்.
அண்மையில் தான் தங்களுடைய நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்காக நிதி திரட்டலில் ஈடுபட இருப்பதாக மினிமலிஸ்ட் அறிவித்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிறுவனம் சுமார் 110 கோடி ரூபாய் நிதியை திரட்டியது . 2024 ஆம் நிதி ஆண்டில் மினிமலிஸ்ட் நிறுவனத்தின் வருமானம் 350 கோடி ரூபாய் என 86 சதவீதம் உயர்ந்தது இந்த நிறுவனத்தின் லாபம் ஓராண்டிலேயே என இரண்டு மடங்கு அதிகரித்தது.
நிறுவனத்தை முழுமையாக கைப்பற்றுவதற்கான பேச்சுவார்த்தையை ஹிந்துஸ்தான யூனிலிவர் நிறுவனம் தீவிர படுத்தியுள்ளது. ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் இந்திய சந்தையில் அழகு சாதன பொருட்களை விற்பனை விற்பனை செய்யும் பிரிவினை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது அதன் ஒரு பகுதியாகத்தான் தற்போது மினிமலிஸ்ட் பிராண்டனை வாங்குகிறது.
இந்தியாவில் மம்மா எர்த், நிவியா, நைக்கா, சுகர் காஸ்மெட்டிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பொருட்கள் ஈகாமர்ஸ் தளங்களில் அதிகம் விற்பனை செய்யப்படும் பொருட்களாக மாறியுள்ளன. இந்தியாவில் வேகமாக வளரும் சந்தையாக இது பார்க்கப்படுகிறது.
Story Written By: Devika


Click it and Unblock the Notifications