இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை என்பது 10ல் ஒன்று போன்ற சிறிய துறை கிடையாது, இந்திய பொளாதாரத்திலும், அன்னிய செலாவணி வருவாய் ஈர்ப்பதிலும் முக்கியமானதாக விளங்கும் சுமார் ரூ.30 லட்சம் கோடி மதிப்புடைய மாபெரும் துறையாக விளங்குகிறது. ஏற்கனவே வர்த்தக பாதிப்பு, ஏஐ, லாப அளவீடுகளில் சரிவு என பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் புதிய தலைவலியாக டிரம்ப் வந்துள்ளார்.
டிரம்ப் இந்தியா பொருட்கள் மீது 50 சதவீத வரியை விதித்து மொத்த ஏற்றுமதி சந்தையை சின்னாபின்னமாக்கி வரும் வேளையில், டிரம்ப் அரசு அடுத்த அடியாக இந்தியாவின் ஐடி சேவை துறையை குறிவைத்து வரி விதிக்க முடிவு செய்து அதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தால் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது எல்லோருக்கும் தெரியும் என்றாலும், இதன் மூலம் இந்திய ஐடி நிறுவனங்களும், இந்தியா ஐடி ஊழியர்களும் எந்த வகையான பாதிப்புகள் ஏற்படுத்தும் என்பதை தான் விரிவாக பார்க்கப்போகிறோம்..?

முதலில் பிரச்சனை என்ன..?
ரிபப்ளிக் கட்சியை சேர்ந்த செனட்டர் Bernie Moreno ஹயர் ஆக்ட் 2025 என்ற மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தாக். இந்த சட்டம் என்ன சொல்கிறது.
அமெரிக்க நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சேவைகளை பெற திட்டங்களை அவுட்சோர்சிங் செய்யும் போது 25 சதவீதம் வரி விதிக்கப்பட வேண்டும் என்பது தான்.
இந்தியா ஐடி நிறுவனங்களுக்கு என்ன பிரச்சனை..?
அமெரிக்க நிறுவனங்கள் பெரும்பாலும் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு தான் ஐடி சேவைகளை உருவாக்க திட்டங்களை அவுட்சோர்சிங் செய்து வருகிறது. இந்திய ஐடி நிறுவனங்களின் குறைந்த செலவில் டெக் சேவைகளை அளிக்கும் காரணத்தால் மட்டுமே அதிகப்படியான திட்டங்களை பெற்று வருகிறது.
இந்தியாவின் 100 பில்லியன் டாலருக்கும் மேற்பட்ட டெக் சேவை ஏற்றுமதியில் அமெரிக்கா சுமார் 50 சதவீத சந்தை பங்கீட்டை வகிக்கிறது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால், இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் 20 - 25 சதவீத வருமானமாத்தை இழக்கும் அளவுக்கான பெரும் தாக்கம் ஏற்படும் என்பது தான் தற்போதைய பிரச்சனை.

பங்குச்சந்தை தாக்கம்
இந்திய ஐடி சேவை துறையில் ஏற்கெனவே பல்வேறு சவால்கள் இருந்த நிலையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் இருந்து 2025 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் ரூ.62,000 கோடி மதிப்புள்ள தகவல் தொழில்நுட்ப பங்குகளை விற்றுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் இத்துறை மீதான நம்பிக்கை குறைந்தது தான். கடந்த 2 வருடமாகவே ஐடி துறையை பெரும் சரிவிலேயே தத்தளித்து வருகிறது.
நிஃப்டி ஐடி இண்டெக்ஸ் அதன் உச்சத்திலிருந்து 23 சதவீதத்துக்கும் மேல் சரிந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் நிஃப்டி குறியீட்டை காட்டிலும் 16 சதவீதமும், ஒரு ஆண்டில் 14.6 சதவீதமும் குறைந்துள்ளது. Price-to-earnings ratios 30 மடங்கிலிருந்து 20 மடங்காக சரிந்துள்ளன.
முதல் பிரச்சனை: வர்த்தகம் இழப்பு
HIRE Act மூலம் 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டால், இந்த வரி சுமையை யார் ஏற்பது என்பதில் அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் மத்தியில் பெரும் வாக்குவாதம் ஏற்படும். ஏற்கனவே இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் மிகவும் குறைவான தொகை கொடுத்து தான் திட்டங்களை கொண்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் 25 சதவீத வரி சுமை மூலம் கூடுதலாக தொகையை குறைக்க வேண்டிய கட்டாயம் இருக்கும்.
இந்திய நிறுவனங்கள் இந்த வரி சுமையை ஏற்க மறுத்தால் அமெரிக்க நிறுவனங்களின் திட்டங்கள் பிற நாட்டு நிறுவனங்களுக்கு செல்லும். உதாரணமாக வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகியவை ஐடி சேவை துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் இந்த நாடுகள் அமெரிக்க வர்த்தகத்தை கைப்பற்ற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
2வது பிரச்சனை: லாப அளவுகள் சரிவு
இந்த 25 சதவீத வரி சுமையை குறைக்க வேண்டும் என்ற திட்டமிட்டால், இந்திய ஐடி நிறுவனங்கள் தங்கள் அமெரிக்காவில் ஊழியர்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது லாப அளவுக்களில் 5 முதல் 10 சதவீதம் வரையில் பாதிப்பு ஏற்படும். அமெரிக்காவில் ஊழியர்களை நியமித்தால் அவர்களின் சம்பளம் மற்றும் இதர சேவைகள் மூலம் செலவுகள் அதிகரிக்கும். இந்த மாற்றம் நிறுவனங்களின் செயல்பாட்டு செலவுகளை உயர்த்தி பங்குச்சந்தையில் பெரும் பாதிப்பை உருவாக்கும்.
3வது பிரச்சனை: செலவுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை
அமெரிக்காவில் அதிகப்படியான ஊழியர்களை நியமித்து வர்த்தகத்தை தொடர்ந்தால் செலவுகள் அதிகரிக்கும். இதை கட்டுப்படுத்த இந்தியாவில் இருக்கும் ஊழியர்களை குறைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதே சூழ்நிலையில் அதிகப்படியான பிரஷ்ஷர்களை பணியில் நியமிக்கப்படலாம். இதற்கான பணிகள் ஏற்கனவே துவங்கியுள்ளது என்பது தான் வருத்தமான விஷயம்.
டிசிஎஸ் 12000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது, இன்போசிஸ் 2 வருடத்திற்கு பின்பு பிரஷ்ஷர்களை சேர்வு செய்ய கேம்பஸ் ஹையரிங் பணிகளை துவங்கியுள்ளது.
4வது பிரச்சனை: செயற்கை நுண்ணறிவு
இந்தியாவின் பெரிய ஐடி சேவை நிறுவனங்களான இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் போன்றவை செயற்கை நுண்ணறிவு ஏற்றுக்கொள்ளவதில் பெரிய அளவில் பின்தங்கியுள்ளன என்பதை கள நிலவரமாக உள்ளது. இந்நிறுவனத்தில் கிட்டத்தட்ட 40-50 சதவீத ஊழியர்கள் ஏஐ துறையில் திறன் பெற்றுள்ளனர் என்ற அறிவிக்கப்பட்டாலும் இது சந்தையின் போக்கிற்கு போதாது என்பதே உண்மை.
உலகளாவிய நிறுவனங்களில் 75 சதவீதம் அளவில் 2025ஆம் ஆண்டுக்குள் முழுமையான செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்பைத் திட்டமிட்டுள்ளன. இந்த இலக்கை அடைய இந்திய ஐடி சேவை நிறுவனங்களிடம் போதுமான ஊழியர்கள் இல்லை என்பதை தற்போதைய பிரச்சனை.
அமெரிக்க நாடாளுமன்றம்
HIRE Act மசோதா ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ப்பட்டால் மட்டுமே ஒப்புதல் பெற வாய்ப்பு பெறும். இதேபோல் இந்த மசோதாவில் இறுதியாக டொனால்டு டிரம்ப் கையெழுத்திட வேண்டும். இதன் பின்பு தான் 25 சதவீத வரி நடைமுறைப்படுத்தப்படும்.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

மத்திய அரசின் ஒற்றை அறிவிப்பு.. ரூ.82,000 கோடி இழப்பை சந்தித்த முகேஷ் அம்பானி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications