தைரோகேர் நிறுவனர் டாக்டர் வேலுமணி சமூக வலைத்தளங்களில் வெளியிட கூட பதிவுகள் பலரது கவனத்தை ஈர்க்கும். வாழ்க்கை சார்ந்தும் வேலை வாய்ப்புகள் சார்ந்தும் தன்னுடைய அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்த வண்ணம் இருக்கிறார்.
எளிமையான வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும், ஒரு தொழிலில் எப்படி முன்னேறி வர வேண்டும் எப்படி எல்லாம் தனிநபராக நம்முடைய தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் வெளியிடக்கூடிய பதிவுகள் அனைத்துமே தற்கால இளைய தலைமுறைக்கு உபயோகமானதாக இருக்கும் . அந்த வகையில் தற்போது தைரோகேர் வேலுமணி நிறுவனங்கள் எப்படி தங்களுக்கான ஊழியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்த ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

கோயம்புத்தூரில் எளிய பின்னணியில் பிறந்து வளர்ந்து தைரோகேர் என்ற தனித்துவமான ரத்த பரிசோதனை நிறுவனத்தை உருவாக்கி சாதனை படைத்தவர் தான் தைரோகேர் வேலுமணி. சுயதொழில் புரிவது குறித்து தொடர்ச்சியாக இளைஞர்களுக்கு வழிகாட்டி வருகிறார்.
தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், " நான் ஒரு ஊழியராகவும் இருந்திருக்கிறேன், ஒரு முதலாளியாக ஊழியர்களை வேலைக்கும் எடுத்து இருக்கிறேன் என்னுடைய அனுபவத்திலிருந்து இதனை தெரிவிக்கிறேன் "என கூறியிருக்கிறார் . அதாவது ஏழையாக பிறந்தவ பெரும்பாலானவர்கள் அல்லது ஏழையான ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்களால் மிகப்பெரிய பிரச்சினைகளை கூட மிக எளிமையாக தீர்த்து விட முடியும் இது என் அனுபவத்தின் மூலம் நான் தெரிந்து கொண்ட விஷயம் என கூறியுள்ளார்.
அதேவேளையில் பணக்காரராகப் பிறந்து பணக்காரராகவே வளர்ந்து வந்த பெரும்பான்மையானவர்கள் எளிமையாக தீர்க்கக்கூடிய பிரச்சினையை கூட சிக்கலானதாக மாற்றி விடுவார்கள் என தெரிவித்திருக்கிறார். எனவே ஒரு நிறுவனம் நீண்ட கால அடிப்படையில் வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்றால் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும், குறிப்பாக கிராமப்புறங்களில் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கிறார்.
இந்தியாவை சேர்ந்த தொழில் முனைவோர் பலரும் கிராமப்புற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என தொடர்ந்து கூறி வருகின்றனர். சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவும் கூட இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் கிராமப்புற பகுதிகளில் இருக்கும் திறன்மிகு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நீண்ட கால அடிப்படையில் உங்களுடைய நிறுவனம் பெரிய அளவில் வளர்ச்சி அடைய வேண்டும் என நீங்கள் விரும்பினால் கிராமங்களை நோக்கி செல்லுங்கள், அங்குதான் உங்களால் உங்களுடைய கனவை நிறைவேற்ற முடியும் என தெரிவித்திருக்கிறார். தற்போது அதே போன்ற ஒரு கருத்தை தான் தைரோகேர் வேலுமணியும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications