கொரோனாவின் காரணமாக கடந்த சில காலாண்டுகளாகவே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது நடுத்தர மக்கள் தான். ஏனெனில் வேலையிழந்து, தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து தவித்து வந்தனர்.
எப்பிடியிருப்பினும் 2021ன் பிற்பாதியில் இந்த போக்கானது சற்றே மேம்பட்டிருந்தது. இதற்கிடையிலும் முந்தைய ஆண்டினைக் காட்டிலும் 2021ல் பணியமர்த்தல் விகிதமானது 34% அதிகரித்திருந்தது.
இந்த போக்கு நடப்பு ஆண்டிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 7 முக்கிய துறைகளில் 2022ல் 31% பணியமர்த்தல் விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இணைய வணிகங்களில் பணியமர்த்தல்
இது தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி விகிதமானது மேம்பட்டு வருவதையே சுட்டிக் காட்டுகின்றது. இது குறித்து குறித்து டிஜிட்டல் ஆட்சேர்ப்பு தளமான Taggd ஒரு ஆய்வினை நடத்தியுள்லது. இதில் நடப்பு ஆண்டில் இணைய வணிகங்கள் மூலம் 55% பணியமர்த்தல் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐடி மற்றும் ஐடி சார்ந்த துறை
அதனை தொடர்ந்து ஆட்டோமொபைல் மற்றும் ஐடி மற்றும் ஐடி சார்ந்த துறைகளில் 40% பணியமர்த்தல் வளர்ச்சியானது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே மற்ற முக்கிய தொழில்கள், வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள், மருந்து மற்றும் சுகாதாரம், உற்பத்தி மற்றும் பொறியியல் துறைகள் உள்ளன.
தொழில் நுட்ப பணியமர்த்தல்
மேலும் இந்தியாவில் உள்ள குளோபல் இன் ஹவுஸ் சென்டர்களில் முந்தைய 27% வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், 2022ல் 31% வளர்ச்சியை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே ஏஐ & மெஷின் லேர்னிங், பயனர்களுக்கு ஏற்ற வடிவமைப்பு, கிளவுட் கம்யூட்டிங், டேட்டா அனலிடிக்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ் உள்ளிட்டவை, தொழில் நுட்ப துறையில் முன்னிலையில் உள்ளதாகவும் அந்த அறிவிக்கையானது சுட்டிக் காட்டுகின்றது.
புதியவர்களுக்கு வாய்ப்பு
பணியமர்த்தப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (56%) 0 - 5 வருடங்கள் அனுபவம் உள்ளவர்களாக உள்ளனர். இது ஆரம்ப காலகட்டத்தில் பணியினை தேடுபவர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. 2021ல் பல நிறுவனங்களும் கற்றுக் கொண்ட பாடம், ஊழியர்களை பணி நீக்கம் செய்வது அல்லது பணியமர்த்தலை குறைப்பது என்பது, தொற்று நோய்க்கான பதில் அல்ல என்பது தான்.
பணியமர்த்தல் மாடல்
மேலும் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள ஒரு நெகிழ்வுத் தன்மையை நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றனர். இதற்கிடையில் 2022ல் ஊழியர்கள் 23% பணியாளர்கள், தொலைதூரத்தில் இருந்து பணியாற்றி வருகின்றனர். அதேபோல 75% பேர் ஹைபிரிட் மாடலில் பணியாற்றி வருகின்றனர். ஏற்கனவே ஐடி மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஊழியர்கள் தொழிலை தூரத்தில் இருந்து பணியாற்றி வருகின்றனர்.
எங்கிருந்து வரலாம்?
இதே இணைய வணிகங்கள் மற்றும் இ-காமர்ஸ் வணிகங்களில் 50% ஊழியர்கள் ஹைபிரிட் முறையில் பணியாற்றலாம். மேலும் 20% ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்களாகவே அல்லது கிக் உழியர்களாகவோ பணியாற்றலாம். கடந்த ஆண்டில் இந்த விகிதமானது 8% ஆக இருந்தது. அதேபோல புதியதாக பணியமர்த்தப்படுவர்களில் 47% பேர் டயர் 1 நகரங்களில் இருந்து வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வலுவான வளர்ச்சி
2021ம் ஆண்டினை காட்டிலும், 2022ம் பணியமர்த்தலானது 31% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இது உற்பத்தி மற்றும் வாகன துறைகளில் அதிகரிக்கலாம். தற்போது நிலவி வரும் தொழில்நுட்ப தேவை, திறமைகளுக்கான பற்றாக்குறை, ராஜினாமா போன்ற சில தடைகள் உள்ளதை நாங்கள் பார்க்கிறோம். எனினும் நடப்பு ஆண்டில் வலுவான வளர்ச்சி இருக்கலாம் என்றும் ஆய்வு நிறுவனங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications