சென்னை உட்பட 5 பெரு நகரங்களில் புதிய வேலைவாய்ப்புகள் சரிவு.. கொரோனாவால் புதிய பிரச்சனை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அதிகரிப்பு கொண்ட பகுதிகளில் லாக்டவுன் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதன் எதிரொலியாக இந்தியாவில் பிற பகுதிகளை விடவும் வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புகள் நிறைந்த பெரு நகரங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது நிறுவனங்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் வாயிலாக இந்தியாவின் டாப் 5 பெரு நகரங்களில் புதிதாக ஊழியர்களை வேலைக்குச் சேர்க்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் வெயிட் கால் ஜாப்ஸ் எனக் கூறப்படும் கார்ப்பரேட் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை அதிகளவில் குறைந்துள்ளது.

 பெரு நகரங்கள்

பெரு நகரங்கள்

இந்தியாவின் டாப் 5 முக்கிய பெரு நகரங்களாக விளங்கும் பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, மும்பை மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் வெயிட் காலர் ஜாப்ஸ் இருந்தது. இது நாட்டின் மொத்த அளவீட்டில் கிட்டதட்ட 40 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

 லாக்டவுன் கட்டுப்பாடுகள்

லாக்டவுன் கட்டுப்பாடுகள்

கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்ட பின்பு அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கி வந்த நிலையில் இந்த மார்ச் மாதம் வெயிட் காலர் ஜாப் பிரிவில் கிடைக்கும் புதிய வேலைவாய்ப்புகள் மொத்தமாகத் தேக்கம் அடைந்துள்ளது என லிங்கிடுஇன் மற்றும் நேரடி வேலைவாய்ப்புத் தரவுகள் மூலம் எக்னாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

 11 சதவீதம் சரிவு

11 சதவீதம் சரிவு

பிப்ரவரி மாதம் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, மும்பை மற்றும் சென்னை ஆகிய டாப் 5 நகரங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் எண்ணிக்கை சுமார் 11 சதவீதம் குறைந்துள்ளது. இதேவேளையில் மொத்த இந்தியாவிலும் புதிய வேலைவாய்ப்பு எண்ணிக்கை 1 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.

 கொரோனாவின் 2வது அலை

கொரோனாவின் 2வது அலை

இந்தப் பாதிப்புக்கு மிக முக்கியக் காரணமாக இந்தியாவில் தற்போது உருவாகியுள்ள கொரோனாவின் 2வது அலை இந்த நிலைக்கு முக்கியக் காரணம் என்று Xpheno நிறுவனத் தலைவர் கமல் கார்நாத் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Hiring for white-collar jobs in chennai and other top metros slows down

Hiring for white-collar jobs in chennai and other top metros slows down
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X