இந்தியாவிலேயே அதிக வேலைவாய்ப்புகளை ஒவ்வொரு வருடமும் உருவாக்கும் ஐடி துறையில் தற்போது அதிகளவிலான ப்ராஜெக்ட்-கள் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் காரணத்தால் அளவுக்கு அதிகமாக வேலைவாய்ப்புகள் உருவாகி வருகிறது.
இதேநிலையில் ஐடி நிறுவனங்களுக்கும் போதுமான ஊழியர்கள் இல்லாத காரணத்தால் அவசர அவசரமாக ஊழியர்கள் பணியில் நியமித்து வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில், ஐடி நிறுவனங்கள் தேர்வு செய்து பணியில் அமர்த்திய ஊழியர்களின் திறன் மிகப்பெரிய கேள்விக்குறியாகி வருகிறது, இவை அனைத்திற்கும் மிக முக்கியக் காரணம் வீடியோ கால் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..?
பெங்களூர் ஐடி நிறுவனம்
சமீபத்தில் பெங்களூர் ஐடி நிறுவனத்தில் புதிதாகப் பணியில் சேர்க்கப்பட்ட ஊழியர் ஒருவர் தொடர்ந்து வீடியோ கான்பரன்ஸ்-ல் இணைய மறுத்து வந்தார், ஆனால் இண்டர்வியூவின் போது வீடியோ கான்பரன்ஸ் பயன்படுத்தியுள்ளார்.
ஆள்மாறாட்டம்
இதில் சந்தேகம் அடைந்த டீம் மேனேஜர் ஊழியரை அலுவலகத்திற்கு அழைத்த போது வீடியோ கான்பரன்ஸில் பார்த்த நபருக்கும், அலுவலகம் வந்த நபருக்கும் முற்றிலும் மாற்றுப்பட்டவராக இருந்துள்ளார். இதேவேளையில் வேலை திறனிலும் அதிகப்படியான வித்தியாசம் உள்ளது முக்கியமானது.
ஐடி ஊழியர்கள் மோசடி
வேலை வாய்ப்புக்காகவும், அதிகப்படியான சம்பளத்திற்காகவும் இண்டர்வியூவின் போது ஆள்மாறாட்டம் செய்து ஐடி ஊழியர்கள் பணியில் தேர்ந்து வருபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என ஐடி நிறுவனங்கள் புலம்பத் துவங்கியுள்ளது.
கொரோனா தொற்று
குறிப்பாகக் கொரோனா தொற்றுக்காக அனைத்து ஐடி ஊழியர்களும் வீட்டில் இருந்து பணியாற்றும் காரணத்தால் வீடியோ கான்பரன்ஸ் வாயிலான இண்டர்வியூ தற்போது அதிகமாகியுள்ளது, இதனால் மோசடிகளும் அதிகமாகியுள்ளது என ஐடி நிறுவனங்கள் கூறுகிறது.
வீடியோ கான்பரன்ஸ் ரெக்கார்ட்
இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க ஐடி நிறுவனங்கள் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக இண்டர்வியூ செய்யும் போது ஸ்கிரீன்ஷாட் அல்லது மொத்த இண்டர்வியூவ் ரெக்கார்ட் செய்யப்படுகிறது. இதனால் கணிசமான பிரச்சனைகள் குறையத் துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
திறனற்ற ஊழியர்கள்
இந்த ஆள்மாறாட்ட வேலையால் ஐடி நிறுவனங்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது ஒருபக்கம் அதிகச் சம்பளம் கொடுத்து நியமிக்கும் ஊழியர்கள் இதுபோன்று ஆள்மாற்றட்டம் செய்யும் காரணத்தால் போதுமான திறன் இல்லாமல் இருப்பது பெரும் பிரச்சனையாக விளங்குகிறது என ஐடி நிறுவனங்கள் கவலையில் உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications