இந்தியா 200 ஆண்டுகள் அடிமைபடுவதற்கு காரணமாக இருந்த கிழக்கிந்திய கம்பெனி திவாலானதாக அறிவிப்பு!!

இந்தியா ஆங்கிலேய ஆட்சியில் 200 ஆண்டு காலம் அடிமைப்பட்டு கிடந்தது. இந்தியர்களை அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தி நம் நாட்டு வளங்களை எல்லாம் பிரிட்டிஷ்காரர்கள் சுரண்டி செல்வதற்கு காரணமாக இருந்தது கிழக்கிந்திய கம்பெனி தான்.

இந்தியாவில் பிரிட்டிஷ் வணிகத்திற்கும் ஆட்சிக்கும் தொடக்கப்புள்ளி வைத்த கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயர் பல ஆண்டுகளாக நம் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்துள்ளது. 1600 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ராணி பிறப்பித்த அரசு சாசனத்தின் மூலம் தான் கிழக்கிந்திய கம்பெனி தொடங்கப்பட்டது. இந்த கம்பெனியை சேர்ந்தவர்கள் கப்பல் மூலம் கடல் கடந்து பயணம் செய்து இந்தியா வருகை தந்தார்கள்.

இந்தியா 200 ஆண்டுகள் அடிமைபடுவதற்கு காரணமாக இருந்த கிழக்கிந்திய கம்பெனி திவாலானதாக அறிவிப்பு!!

வணிக நோக்கத்தில் காலடி வைத்து படிப்படியாக இந்தியாவில் தன்னுடைய கிளைகளை பரப்பி இந்தியாவையே ஆட்சி செய்தது கிழக்கிந்திய கம்பெனி. பின்னர் 1857ஆம் ஆண்டு புரட்சிக்கு பிறகு கிழக்கிந்திய கம்பெனி வசம் இருந்த அதிகாரம் பிரிட்டிஷ் அரசிடம் சென்றது. அப்படிப்பட்ட கிழக்கந்திய கம்பெனி திவாலானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் காலனி ஆதிக்கம் செய்ய அடித்தளம் போட்ட கிழக்கிந்திய கம்பெனி 152 ஆண்டுகளுக்கு முன்னதாகவே செயலிழந்து போனது.

இதனை அடுத்து பிரிட்டிஷ் இந்தியரான சஞ்சீவ் மேத்தா கிழக்கிந்திய கம்பெனியை வாங்கினார். கிழக்கிந்திய கம்பெனி என்ற உரிமத்தை பயன்படுத்துவதற்கான அதிகாரத்தை பெற்ற அவர், இந்த கிழக்கிந்திய கம்பெனி இந்தியனால் நிறுவப்படுகிறது என்றார். 2005 ஆம் ஆண்டு ஆடம்பர தேநீர் , காபி மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக கிழக்கு இந்திய கம்பெனியை மாற்றினார்.

இந்த நிறுவனம் இதன்பிறகு பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமாக மாறியது. முதன்முதலாக 2010 ஆம் ஆண்டில் கிழக்கு இந்திய கம்பெனியின் முதல் கடை லண்டனில் மேஃபேர் பகுதியில் திறக்கப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனி கடையில் இருக்கிறோம் என இந்தியர்கள் பலரும் புகைப்படம் எடுத்து பதிவிட்டார்கள்.

இந்நிலையில் தான் சஞ்சீவ் மேத்தா மீண்டும் தொடங்கிய கிழக்கிந்திய கம்பெனியும் மூடப்பட்டு விட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த நிறுவனம் கடன்களை நிலுவையில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளது. எனவே லண்டனில் உள்ள இந்த நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது நிறுவனத்தின் இணையதளமும் செயல்படவில்லை. மே ஃபேரில் இருந்த கடையும் மூடப்பட்டு வேறு நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது.

கிழக்கிந்திய கம்பெனியோடு தொடர்புடைய பல்வேறு நிறுவனங்களும் மூடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பின் மூலம் ஒரு வர்த்தக நிறுவனம் எப்படி ஒரு நாட்டையே அடிமைப்படுத்தி அழிந்து போனது என்ற வரலாற்றை இந்தியர்கள் மீண்டும் நினைவு கூற தொடங்கியுள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+