இந்தியா சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்தியாவின் ஜிடிபி எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்பதை அறிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஒரு நாட்டின் பொருளாதாரம் எப்படி இருக்கிறது என்பதை கணக்கிட்டு கூறும் ரேங்க் கார்ட் போன்றது தான் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி. அதாவது நாட்டில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பொருளாதாரம் அதிகரித்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா என்பதைக் கண்டறிய மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிடப்படுகிறது. இதன்மூலம் பணவீக்கம் மற்றும் பண மதிப்பு அதிகரித்துள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளமுடியும்.
இந்தியாவைப் பொறுத்தவரை ஜிடிபி காலஅளவு ஏப்ரல் ஒன்று முதல் மார்ச் 31 வரையான கால இடைவெளி. ஜிடிபியில் நாமினல் ஜிடிபி, ரியல் ஜிடிபி என்று இரண்டு வகை உள்ளன. இதில் பணவீக்கத்தினால் உற்பத்தி விலை உயர்ந்து அதனால் பொருட்களின் விற்பனை விலையும் உயர்வது நாமினல் ஜிடிபி ஆகும்.
அதுவே உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்து அதன் விற்பனை விலை பணவீக்கத்தால் ஏற்படும் பாதிப்பை கழித்து கணக்கிடுவது தான் ரியல் ஜிடிபி எனப்படுகிறது.

ஒரு நாட்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் நன்றாக உள்ளது என்றால் அந்த நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் சரியாக செயல்படுகின்றன என்றும் அனைத்து மக்களுக்கும் வளர்ச்சி சென்றடைகிறது என்றும் அர்த்தம் கொள்ளலாம். இதுவே ஜிடிபி வளர்ச்சியடையாமல் வளர்ச்சி விகிதம் எதிர்மறையாக உள்ளது என்றால் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்வதற்கான திட்டங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று பொருள்.
மேக்ரோ டிரெண்ட்ஸ் தளம் வெளியிட்டுள்ள தகவலின் படி இந்தியாவில் 1960ஆம் ஆண்டில் ஜிடிபி 37.03 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்தியா சுதந்திரம் அடைந்தது 1947ஆம் ஆண்டாக இருந்தாலும் 1960 முதல் தான் ஜிடிபி தரவுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது 1965ஆம் ஆண்டில் 59.55 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் தான் இருந்தது. 1970இல் 62.42 பில்லியன் டாலர்கள் என்றானது. 1975ஆம் ஆண்டில் 98.47 பில்லியன் டாலர்கள் என அதிகரித்தது. 1980ஆம் ஆண்டில் 152.99 பில்லியன் டாலர்கள் என இருந்தது. 1985ஆம் ஆண்டில் நாட்டின் ஜிடிபி 232.51 பில்லியன் டாலர்கள் என்ற அளவை எட்டியது. அதாவது நாட்டின் ஜிடிபி படிப்படியாக அதிகரித்தது. பொருளாதாரமும் வளர்ச்சி அடைந்தது என அர்த்தம்.
1990ஆம் ஆண்டில் 320.98 பில்லியன் டாலர்கள் என்றும், 1995ஆம் ஆண்டில் 360.28 பில்லியன் டாலர்கள் என்றும் மந்தமான வளர்ச்சியில் தான் இருந்தது. 2000ஆம் ஆண்டில் 458.82 பில்லியன் டாலர்கள் என உயர்வு கண்டது. 2005ஆம் ஆண்டு 820.38 பில்லியன் டாலர்கள் என வளர்ச்சி அடைந்தது. இதுவே 2010ஆம் ஆண்டு 1675 பில்லியன் டாலர்கள் என ஆயிரத்தை கடந்து வளர்ச்சி கண்டது .
2015 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 8 சதவிகிதம் என அதிகரித்து 2103.59 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் நீடித்தது. ஆனால் 2020 ஆம் ஆண்டில் சற்றே சரிவடைந்து 2061.60 டாலர்கள் ஆனது. இந்தியாவை பொருத்தவரை 2023 ஆம் ஆண்டில் ஜிடிபி 3,572.08 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
1965 ,1972, 1979 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவின் ஜிடிபி கணிசமான அளவு சரிவை கண்டிருந்தது. இதில் குறிப்பாக 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 5.83% சரிவை கண்டது 1979 ஆம் ஆண்டில் 5.24% வீழ்ச்சி அடைந்தது. 1960 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்தியாவின் ஜிடிபி 1988 ஆம் ஆண்டில் 9.63% என அதிகபட்ச வளர்ச்சியை கண்டது. 2003 முதல் 2007 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் ஜிடிபி சரிவில்லாமல் வளர்ச்சி பாதையிலேயே இருந்து வந்தது. கொரோனா தொற்றுக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 9.0 % வளர்ச்சியை கண்டது.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications