சீனாவில் வேகமாக பரவி வரும் ஹியூமன் மெட்டாநியூமோவைரஸ் (HMPV) தொற்று இந்தியாவிலும் பரவ துவங்கியதாக தகவல் நேற்று வெளியான நிலையில் பெங்களூருவில் முதல் HMPV தொற்று பதிவாகியுள்ளது. இதேவேளையில் டெல்லியில் முக்கிய கட்டுப்பாடுகளும், முன்னெச்சரிக்கைகளும் எடுக்க மூத்த மருத்துவத்துறை அதிகாரியான வந்தனா பாகா உத்தரவிட்டு உள்ளார்.
ஐடி நகரமான பெங்களூரில் தற்போது குளிர்காலம் என்பதால் இந்த HMPV வைரஸ் வேகமாக பரவக்கூடும் வாய்ப்புகள் உள்ளது, சீனாவில் இந்த வைரஸ் வேகமாக பரவ முக்கிய காரணமாக குளிர்காலத்தை முக்கியமான காரணியாக கூறப்பட்டது கவனிக்கத்தக்கது. இதேவேளையில் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் ஏற்கனவே காற்று மாசுப்பாடு அதிகமாக இருக்கும் வேளையில் இந்த HMPV வைரஸ் பரவல் குழந்தைகள், முதியவர்கள், ஆஸ்துமா நோயாளிகளை அதிகம் பாதிக்கும் என கூறப்பட்டு உள்ளது.

ஐடி நகரில் முதல் HMPV கேஸ்: பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் எட்டு மாத குழந்தைக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத் துறை பரிசோதனை செய்யப்பட்ட மாதிரியை மறுபரிசோதனை செய்யவில்லை என்றாலும், தனியார் மருத்துவமனையின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.
முக்கியமாக 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் சுவாச வைரஸான HMPV, காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல் மற்றும் சளி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. பெங்களூரில் HMPV வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தை எந்த HMPV வகை வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளது என்பது இன்னும் தெரியவில்லை.
டெல்லி பாதிப்பு: டெல்லி சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஹெச்.எம்.பி.வி மற்றும் பிற சுவாச வைரஸ்களுடன் தொடர்புடைய தொற்று பாதிப்புகளுக்கு தயாராக இருக்க அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளனர்.தீவிர சுவாச நோய்த்தொற்று (SARI) வழக்குகள் மீது விரிவான பதிவுகளை பராமரிக்கவும், ஆய்வகத்தில் உறுதிப்படுத்தப்பட்ட இன்ஃப்ளூயன்சா கேஸ்களை கண்காணிக்கவும் மருத்துவ வசதிகளை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன.
டெல்லியின் முக்கிய சுகாதார அதிகாரி டாக்டர் வந்தனா பாகா, மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரிகள் மற்றும் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் (IDSP) மாநில திட்ட அதிகாரி ஆகியோருடன் ஆலோசனை நடத்தி, சுவாச நோய்களை தொற்றுகளை கையாள தயார்நிலை குறித்து விவாதித்துள்ளார்.
டெல்லியில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு இன்ஃப்ளூயன்சா போன்ற நோய் (ILI) மற்றும் தீவிர சுவாச நோய்த்தொற்று (SARI) வழக்குகளை IHIP தளத்தில் தெரிவிக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிடிஐ தெரிவித்துள்ளது. இதேவேளையில் சந்தேகத்திற்கிடமான தொற்ரு பாதிப்பு கொண்டு நபர்களை கடுமையான தனிமைப்படுத்தல் நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிரா அறிவிப்பு: சீனாவில் மனித மெட்டாநியூமோவைரஸ் (HMPV) பரவல் அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநில சுகாதாரத் துறை தனது அறிக்கையில் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், சுகாதார அதிகாரிகள் SARI மற்றும் ILI நோய் மூலம் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை மற்றும் விபரத்தை பதிவு செய்ய வேண்டும் வேண்டும் என்றும் மாநில சுகாதார சேவைகள் இயக்குனர் டாக்டர் நிதின் அம்படேகர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது எந்த HMPV வழக்குகளும் பதிவாகவில்லை என்றும் சுகாதாரத் துறை பொதுமக்களை உறுதிப்படுத்தியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications