சீனா-வை மிரட்டி வரும் HMPV வைரஸ் தற்போது இந்தியாவையும் மிரட்ட துவங்கியுள்ளது இன்று காலையில் இருந்து பெங்களூரில் இரு குழந்தைகளுக்கும், குஜராத்தில் ஒரு குழந்தைக்கும் இத்தொற்று மூலம் பாதிக்கப்பட்டதை உறுதி செய்யப்பட்ட நிலையில் மாலையில் 2 முக்கிய அறிவிப்பு வெளியானது.
தமிழ்நாட்டில் இரண்டு பேருக்கு ஹியூமன் மெட்டாநியூமோவைரஸ் (HMPV) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒருவருக்கும், சேலத்தில் ஒரு நபருக்கும் HMPV வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளதை உறுதி செய்யப்பட்டு தமிழ்நாடு பொது சுகாதார துறை அறிவித்துள்ளது.

மேலும் சுகாதார அதிகாரிகள் திங்கள்கிழமை இந்த தகவலை உறுதிப்படுத்தும் போது இருவரின் உடல் நிலையும் சீராக இருப்பதாக அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தற்போது தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையை தொடர்ந்து மாலையில் கொல்கத்தாவில் நவம்பர் மாதம் முதல் மூன்று HMPV வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த நகரத்தின் பீர்லெஸ் மருத்துவமனையின் சி.இ.ஓ. சுதீப்தா மித்ரா தெரிவித்தார். குளிர்காலங்களில் இந்த HMPV பாதிப்பு ஏற்படுவது புதியது அல்ல என்றும், தற்போது பாதிக்கப்பட்டு உள்ள 3 பேரும் லேசான பாதிப்பை மட்டுமே கொண்டு இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். தற்போது எந்தவிதமான தனிப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
மிழ்நாடு மாநில சுகாதாரத் துறை, HMPV ஐ கண்டறிந்து அதன் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கைகளை எடுக்க முக்கியமான விவாதிக்க கூட்டம் ஒன்றை நடத்தியது. கண்காணிப்பு வழிமுறைகளை வலுப்படுத்துதல், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தொற்றுநோய் பரவலை நிர்வகிக்க போதுமான சுகாதார வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யும் பணிகளை கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.
HMPV என்றால் என்ன?: ஹியூமன் மெட்டாநியூமோவைரஸ் (HMPV) என்பது நம்முடைய சுவாச மண்டலத்தை பாதிக்கும் ஒரு வகை வைரஸாகும். இது பொதுவாக சாதாரண சளி போன்ற லேசான அறிகுறிகளை ஏற்படுத்தும் என்றாலும், சில சமயங்களில் நிமோனியா போன்ற கடுமையான நோய்களை உண்டாக்கக்கூடும். இந்த வைரஸ், RSV (Respiratory Syncytial Virus) போன்ற மற்ற சுவாசக் குழாய் தொற்றுக்களை ஏற்படுத்தும் வைரஸ்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.
HMPV யாரை அதிகம் பாதிக்கிறது?: HMPV முதன்மையாக குழந்தைகளை, குறிப்பாக 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கிறது. ஆனால், பெரியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களும் இந்த தொற்றால் பாதிக்கப்படலாம். குறிப்பாக, முன்கூட்டியே பிறந்த குழந்தைகள், ஆஸ்தமா உள்ளவர்கள், இதய நோயாளிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இந்த தொற்றின் தாக்கத்திற்கு அதிகமாக உள்ளனர்.
HMPV தொற்று ஏற்பட்டால், பொதுவாகக் காணப்படும் அறிகுறிகள்: சளி, மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கு அடைப்பு, இருமல், வறண்ட இருமல் அல்லது சளி உடன் கூடிய இருமல், காய்ச்சல், தொண்டை வலி, தொண்டை எரிச்சல், தலைவலி, உடல் வலி, குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வரையில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம்.
கடுமையான சந்தர்ப்பங்களில், HMPV தொற்று இந்த சிக்கல்களை ஏற்படுத்தலாம் நிமோனியா: நுரையீரலில் ஏற்படும் தொற்று, ப்ரொங்கியோலிடிஸ்: நுரையீரலின் வீக்கம், காது தொற்று ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
HMPV தொற்று எவ்வாறு பரவுகிறது?: HMPV தொற்று, ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பின்வரும் வழிகளில் பரவுகிறது
காற்றின் மூலம்: தொற்றுள்ள நபர் இருமினால் அல்லது தும்மினால், காற்றில் வெளியேறும் துகள்களின் மூலம் வைரஸ் பரவுகிறது.
தொடுவதன் மூலம்: தொற்றுள்ள நபர் தொட்ட பொருட்களை (கதவு கைப்பிடிகள், பொம்மைகள்) மற்றொருவர் தொட்டுவிட்டு, பின்னர் தங்கள் வாய், மூக்கு அல்லது கண்களைத் தொட்டால் தொற்று பரவலாம்.
முடிவுரை
HMPV என்பது குறிப்பாக குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு சுவாச வைரஸாகும். எனவே, இந்த தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள, கைகளை அடிக்கடி கழுவுதல், முகக்கவசம் அணிதல் மற்றும் கூட்டமான இடங்களில் செல்வதைத் தவிர்ப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications