சீனாவில் வேகமாக பரவி வரும் ஹியூமன் மெட்டாநியூமோவைரஸ் (HMPV) தற்போது உலகில் பல நாடுகளில் சிறிய எண்ணிக்கையில் தொற்று அதிகரிக்க துவங்கியுள்ளது. இன்று காலையில் பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அடுத்த தொற்று குஜராத்தில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஏற்கனவே கூறப்பட்டது போல் குழந்தைகளையும், முதியவர்களையும் அதிகம் தாக்கும் இந்த HMPV வைரஸ் இந்தியாவில் இதுவரையில் 3 பேரை தாக்கியுள்ளது. இந்த 3 பேரும் குழந்தைகள் என்பது சோகமான விஷயமாகும், குஜராத் மாநிலத்தில் முதல் HMPV வைரஸ் கேஸ் பதிவாகியுள்ளது. இரண்டு மாத குழந்தைக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால் கூடுதல் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

மேலும் HMPV வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ள 3 பேரும் சீனாவுக்கு பயணம் செய்யாதவர்கள் என்பது கூடுதல் தகவல். இந்த HMPV வைரஸ் புதிய வைரஸ் அல்ல 2001ஆம் ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்ட வைரஸ் உலகில் பல நாடுகளில் பரவியுள்ளது, இதுநாள் வரையில் இதன் தொற்று எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது சீனாவில் குளிர்காலம், காற்று மாசுப்பாடு அதிகரித்துள்ள வேளையில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் HMPV வைரஸால் பாதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட மூன்றாவது வழக்காக குஜராத் குழந்தை உள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் இரண்டு வழக்குகள் பதிவாகின.
முதல் வழக்கு மூன்று மாத பெண் குழந்தையை பாதித்தது. இந்த குழந்தைக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு பாப்டிஸ்ட் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து எட்டு மாத ஆண் குழந்தையை இரண்டாவதாக பாதிக்கப்பட்டு பாப்டிஸ்ட் மருத்துவமனையில் கண்டறியப்பட்டது, இக்குழந்தை தற்போது குணமடைந்து வருகிறது.
ஒரே நாளில் 3 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளதை தொடர்ந்து மக்களுக்கு பெரும் அச்சத்தை கொடுத்தாலும், பெங்களூரில் பாதிக்கப்பட்ட குழந்தை வேகமாக குணமடைந்தது தொடர்ந்து மக்களுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது.
HMPV என்றால் என்ன?: ஹியூமன் மெட்டாநியூமோவைரஸ் (HMPV) என்பது சுவாச மண்டலத்தைத் தாக்கும் ஒரு வைரஸாகும். இது பொதுவாக சளி போன்ற லேசான அறிகுறிகளை ஏற்படுத்தும் என்றாலும், சில சமயங்களில் நிமோனியா போன்ற கடுமையான நோய்களை ஏற்படுத்தும். இந்த வைரஸ், RSV (Respiratory Syncytial Virus) போன்ற மற்ற சுவாச வைரஸ்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.
HMPV யாரை அதிகம் பாதிக்கிறது?: HMPV முதன்மையாக குழந்தைகளை பாதிக்கிறது, குறிப்பாக 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள். இருப்பினும், பெரியவர்கள் மற்றும் குறிப்பாக நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளவர்களும் இந்த தொற்றால் பாதிக்கப்படலாம்.
HMPV தொற்றின் அறிகுறிகள் என்ன?: HMPV தொற்றின் அறிகுறிகள் பொதுவாக சளி, காய்ச்சல், இருமல் மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்றவை. சில நேரங்களில், தொண்டை வலி, தலைவலி மற்றும் உடல் வலி போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம். கடுமையான சந்தர்ப்பங்களில், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் நிமோனியா போன்ற சிக்கல்கள் ஏற்படலாம்.
HMPV எவ்வாறு பரவுகிறது?: HMPV ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பல்வேறு வழிகளில் பரவுகிறது.
காற்றின் மூலம்: தொற்றுள்ள நபர் இருமினால் அல்லது தும்மினால் காற்றில் வைரஸ் துகள்கள் வெளியேறி, மற்றவர்களைத் தொற்றிக்கொள்ளலாம்.
தொடுவதன் மூலம்: தொற்றுள்ள நபர் தொட்ட பொருட்களை (கதவு கைப்பிடிகள், பொம்மைகள்) மற்றொருவர் தொட்டுவிட்டு, பின்னர் தங்கள் வாய், மூக்கு அல்லது கண்களைத் தொட்டால் தொற்று பரவலாம்.
நேரடி தொடர்பு: தொற்றுள்ள நபருடன் நேரடி தொடர்பு, குறிப்பாக இருமல் அல்லது தும்மும் போது, தொற்று பரவுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
HMPV தொற்றின் சிகிச்சை
தற்போது, HMPV தொற்றுக்கு நேரடி சிகிச்சை அதாவது நேரடி மருந்து அல்லது வேக்சின் இல்லை. பொதுவாக, அறிகுறிகளை நிர்வகிக்க ஆதரவான சிகிச்சை வழங்கப்படும். இதில் ஓய்வு எடுப்பது, அதிகமாக திரவம் குடிப்பது மற்றும் காய்ச்சலைக் குறைக்க மருந்துகளை எடுத்துக்கொள்வது ஆகியவை அடங்கும். கடுமையான சந்தர்ப்பங்களில், மருத்துவமனையில் அனுமதி தேவைப்படலாம்.
தடுப்பு நடவடிக்கைகள்: HMPV தொற்றைத் தடுக்க, பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்:
கைகளை அடிக்கடி கழுவுதல்: சோப்பும் தண்ணீரும் கொண்டு அடிக்கடி கைகளை கழுவுவது வைரஸ் பரவுவதைத் தடுக்க உதவும்.
முகக்கவசம் அணிதல்: குறிப்பாக கூட்டமான இடங்களில் முகக்கவசம் அணிவது தொற்று பரவுவதைத் தடுக்க உதவும்.
தொற்றுள்ள நபர்களிடமிருந்து விலகி இருத்தல்: தொற்றுள்ள நபர்களிடமிருந்து விலகி இருப்பது தொற்று பரவுவதைத் தடுக்க உதவும்.
தொடர்ந்து சுத்தமாக இருத்தல்: வீட்டை சுத்தமாக வைத்திருப்பது மற்றும் பொது இடங்களில் உள்ள பொருட்களை சுத்தம் செய்வது வைரஸ் பரவுவதைத் தடுக்க உதவும்.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications