கஜானா-வில் ஓட்டை.. ரஷ்யா முடிவு என்ன? காத்திருக்கும் இந்தியா..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2022 ஆம் ஆண்டில் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் முக்கியமான பங்கு வகித்த ரஷ்யா தற்போது முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கிய நாளில் இருந்து அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா ஆகிய அனைத்து முக்கியப் பொருளாதார நாடுகளும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்குவதற்குத் தடை விதித்த நிலையில் ரஷ்யா நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் தேக்கம் அடைந்தது மட்டும் அல்லாமல் ரஷ்யாவின் நிதி நிலைமையும் மோசமானது.

இந்த நிலையில் தான் ரஷ்யா தள்ளுபடி விலையில் தனது கச்சா எண்ணெய்-ஐ இந்தியா மற்றும் சீனாவுக்கு அதிகளவில் விற்பனை செய்யத் துவங்கியது. இங்கு தான் பிரச்சனை வெடித்துள்ளது.

உலக நாடுகளின் ரெசசனால் இந்தியாவுக்கு இப்படியும் ஒரு பலன் இருக்கா? உலக நாடுகளின் ரெசசனால் இந்தியாவுக்கு இப்படியும் ஒரு பலன் இருக்கா?

ரஷ்யா

ரஷ்யா

ரஷ்யா வெற்றிகரமான அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யாவுக்குச் செல்ல வேண்டிய பெரும் பகுதி கச்சா எண்ணெய்-ஐ சீனா, இந்தியா மற்றும் பிற நடப்பு நாடுகளுக்கு விநியோகம் செய்து கச்சா எண்ணெய் இருப்பைத் தொடர்ந்து தீர்த்து வந்தாலும், ஒரு சிக்கல் உள்ளது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

ரஷ்யா தற்போது விற்பனை செய்து வரும் கச்சா எண்ணெய் அனைத்தும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வருகிறது, இதனாலேயே இந்தியா தனது ஆஸ்தான சப்ளையரான ஈரான், சவுதி அரேபியா ஆகிய நாடுகளைக் காட்டிலும் அதிகளவிலான கச்சா எண்ணெய்-ஐ வங்கி குவிந்தது.

இந்தியா மற்றும் சீனா

இந்தியா மற்றும் சீனா

இதேபோலச் சீனாவும் அதிகளவிலான கச்சா எண்ணெய்-ஐ ரஷ்யாவிடம் வாங்கிக் குவித்தது. இந்தியா மற்றும் சீனாவில் அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் காரணத்தால் அதன் Purchasiung power-ஐ பயன்படுத்தித் தள்ளுபடி விலையில் வாங்கி வந்தது தற்போது ரஷ்யாவுக்குப் பெரும் ஆபத்தாக மாறியுள்ளது என்றால் மிகையில்லை.

தள்ளுபடி கச்சா எண்ணெய்

தள்ளுபடி கச்சா எண்ணெய்

இந்தத் தள்ளுபடி ரஷ்ய அரசின் கஜானா-வை பெரிய அளவில் பாதித்துள்ளது என்றால் மிகையில்லை. கடந்த வார தரவுகள் படி ரஷ்யா கச்சா எண்ணெய் ஒரு பேரல் 52 டாலருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

பிரெண்ட் கச்சா எண்ணெய்

பிரெண்ட் கச்சா எண்ணெய்

இது பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையை ஒப்பிடுகையில் சுமாக் 39 சதவீத தள்ளுபடி அதாவது 33.28 டாலர் குறைவு. இந்தத் தள்ளுபடி இந்தியா, சீனாவுக்குப் பெரிய லாபமாக இருந்தாலும், ரஷ்யாவுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது.

4 பில்லியன் டாலர் இழப்பு

4 பில்லியன் டாலர் இழப்பு

ரஷ்யா அளித்து வரும் தள்ளுபடி மூலம் ஒவ்வொரு மாதமும் 4 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது ரஷ்யா. இது வரி வருவாய் அளவிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது முக்கியப் பிரச்சனையாக மாறியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் நாட்டின் மீது போர் துவங்கிய போது ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் 100 டாலராக இருந்தது, தற்போது 86 டாலராகச் சரிந்துள்ளதுள்ளது.

பெரும் தோல்வி

பெரும் தோல்வி

அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா இணைந்து ரஷ்யாவுக்குப் பெரிய அளவிலான நிதி பாதிப்பை இந்தத் தடை மூலம் உருவாக்க வேண்டும் என நினைத்துத் தடை விதித்தது. ஆனால் இந்தியா, சீனா துணையால் இந்த முயற்சி பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. ரஷ்யாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அளவுகள் மிகவும் வலிமையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

price cap திட்டம்

price cap திட்டம்

ஆனால் மாதம் 4 பில்லியன் டாலர் வருமான இழப்பு முக்கியப் பாதிப்பாக இருக்கிறது. இதற்கிடையில் தான் அமெரிக்கா ரஷ்யா ஏற்றுமதிக்கு price cap விதிக்க வேண்டும் என்ற முக்கியமான திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

ரஷ்யா முடிவு என்ன..?

ரஷ்யா முடிவு என்ன..?

இதை நடைமுறைப்படுத்தப்பட்டால் ரஷ்யாவுக்குச் சர்வதேச சந்தை விலையில் உலக நாடுகள் முழுவதும் கச்சா எண்ணெய் விற்க முடியும். இதனால் இந்தியாவுக்குத் தள்ளுபடியில் அளிக்கப்படும் கச்சா எண்ணெய் சப்ளை தடுக்கப்படும். ஆனால் இதை ரஷ்யா ஏற்குமா..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Hole is vladimir putin's war chest; China, India benefits from Russian oil discounts

Hole is vladimir putin's war chest; China, India benefits from Russian oil discounts. Does it end with Price cap
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X