அமித் ஷா சொத்து மதிப்பு.. பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட்டில் தான் அதிக முதலீடு செய்துள்ளாராம்..!!

தன்னார்வ அறிவிப்பின் கீழ் இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரையில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சரான அமித் ஷாவிடம் எவ்வளவு பணம், சொத்துக்கள் இருக்கிறது என்பது பிஎம் இந்தியா இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

அமித் ஷா 2019 பொதுத் தேர்தலில் குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் போட்டியிட்டு லோக் சபாவில் நுழைந்தார். 2019 முதல் நாட்டின் 31 வது உள்துறை அமைச்சராகவும், 2021 முதல் இந்தியாவின் முதல் கூட்டுறவு அமைச்சராகவும் பணியாற்றுகிறார்.

அமித் ஷா சொத்து மதிப்பு.. பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட்டில் தான் அதிக முதலீடு செய்துள்ளாராம்..!!

மேலும் அமித் ஷா பாரதிய ஜனதா கட்சியின் 10வது தலைவராக 2014 முதல் 2020 வரையில் பணியாற்றினார். இதோடு 2014 முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தலைவராகவும் பணியாற்றி வருகிறார். அமித் ஷா குஜராத்தைத் தேர்ந்தவர் என்பதால் பிரதமர் மோடியின் நீண்ட கால நண்பராக உள்ளார்.

தன்னார்வ சொத்து, கடன் விபரங்கள் குறித்த அறிவிப்பின் படி அமித் அனில் சந்திர ஷா என முழுப்பெயர் கொண்ட அமித் ஷா பெயரின் கீழ் 6 அசையா சொத்துகள் உள்ளது, இதில் 1355 சதுரடி முதல் 10.47 ஏக்கர் வரையிலான நிலங்களை வைத்துள்ளார். இந்த 6 சொத்துக்களையும் அமித் ஷா தான் சம்பாதித்த பணத்தில் வாங்கியது, 6 நிலங்களும் குஜராத் மாவட்டத்தில் தான் உள்ளது. இதன் மொத்த மதிப்பு 5.71 கோடி ரூபாய்.

இதோடு அமித் ஷா-வின் தாய் எழுதிவைத்த உயில் படி அவருக்குக் கிடைத்த 4 சொத்துகளின் மதிப்பு 7.85 கோடி ரூபாய். இதன் மூலம் அமித் ஷா-வின் மொத்த அசையா சொத்துக்களின் மதிப்பு 13.5608 கோடி ரூபாய் என தன்னார்வ சொத்து, கடன் விபரங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி முடிவில் அமித் ஷா கையில் பணமாக 31,364 ரூபாயும், வங்கி இருப்பில் 1.09 கோடி ரூபாயும், வைப்பு நிதியாக 3.4 லட்சமும், நகையாக 50.91 லட்சமும் வைத்துள்ளார்.

மேலும் 3.08 கோடி ரூபாயை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத பங்குகளாகவும், 27.71 கோடி ரூபாயை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளாகவும் வைத்துள்ளார் (இதில் 23.69 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் உயில் வாயிலாக வந்தது). இதைத் தொடர்ந்து 19.75 லட்சம் ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசி வைத்துள்ளார்.

இதன் மூலம் அமித் ஷா அசையும், அசையா சொத்துக்களாக 43.14 கோடி ரூபாய் வைத்துள்ளார், அமித் ஷா 15.77 லட்சம் ரூபாயை கடனாகப் பெற்றுள்ள நிலையில் இவருடைய மொத்த சொத்து மதிப்பு 42.98 கோடி ரூபாயாக உள்ளது.

அமித் ஷா மனைவி சோனல் அமித் ஷா 4.66 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகள், வங்கி இருப்பாக 71.44 லட்சம் ரூபாய், நகைகளாக 78.34 லட்சம் ரூபாய், பங்குகளாக 12.26 கோடி ரூபாய் என இவரின் மொத்த சொத்து மதிப்பு 18.45 கோடி ரூபாயாக உள்ளது (கடனையும் சேர்த்து).

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+