வீட்டு கடன், வாகன கடன் வாங்கியவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..!! சிக்கனமா இருந்தா நல்லது..!!

வங்கிகளில் வீட்டு கடன், வாகன கடன் உள்ளிட்ட கடன்களை வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அடுத்தடுத்த மாதங்களில் மக்கள் சிக்கனத்தை கையாளவில்லை என்றால் சிக்கல் தான் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதாரம் , பணவீக்கம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தான் ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கும். ரெப்போ வட்டி விகிதம் மாறும் போதெல்லாம் நம் வீட்டு கடன், வாகன கடன் வட்டிகளிலும் மாற்றம் ஏற்படும். அண்மையில் தான் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. இந்நிலையில் மேலும் ரெப்போ வட்டி விகிதம் உயரும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

வீட்டு கடன், வாகன கடன் வாங்கியவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..!! சிக்கனமா இருந்தா நல்லது..!!

ஆர்பிஐ தனது ரெப்போ வட்டி விகிதங்களை 6.25% வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணிக்கின்றனர். தற்போது இது 5.50% என உள்ளது. நாட்டில் சில்லறை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு எல்லைக்கு மேல் தொடர்ச்சியாக அதிகரித்து வருவது இதற்கு முக்கிய காரணம். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை அதிகரிப்பது அவசியமானாலும், இது சந்தையில் பணப்புழக்கத்தை குறைத்து, நுகர்வோர் செலவழிக்கும் திறனை பாதிக்கும்.

வட்டி விகிதங்கள் உயர்ந்தால், வங்கிகள் வழங்கும் வீட்டு கடன் வாகன கடன் மற்றும் இதர தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் கணிசமாக அதிகரிக்கும். இதனால் ஏற்கனவே பணவீக்கத்தால் திணறிவரும் நடுத்தர வர்க்கத்தினரின் மாதாந்திர EMI சுமை மேலும் அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல் புதிய கடன்களை பெறுவதும், தொழில்களுக்கான மூலதன கடன்களை பெறுவதும் மிகவும் செலவுமிக்கதாக மாறிவிடும்.

Also Read

அதாவது மாதம் தோறும் நாம் கடன்களுக்காக செலுத்தி வரும் ஈஎம்ஐ கணிசமாக உயரும். எனவே நம் குடும்ப பட்ஜெட்டில் மற்ற செலவுகளை குறைத்து நாம் ஈஎம்ஐ செலவை ஈடுகட்ட வேண்டிய சூழல் உண்டாகலாம். ஏற்கனவே பால், அரிசி, சர்க்கரை என பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்வு நம்மை வாட்டி வதைக்கிறது. இந்த சூழலில் ஈஎம்ஐ அதிகரிப்பது கோடிக்கணக்கான மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

வட்டி விகிதங்கள் தொடர்ந்து உயர்வாகவே நீடித்தால், அது நிறுவனங்களின் முதலீட்டு திட்டங்களை மந்தமாக்கக்கூடும் என எச்சரிக்கபப்டுகிறது. இதனால் தொழிற்துறைகளின் வளர்ச்சி வேகம் குறைந்து, வேலைவாய்ப்பு மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியே குறையும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Recommended For You

பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்துவது அவசியமான ஒரு நடவடிக்கையாக இருந்தாலும், இந்த முறை நுகர்வோர், கடன் வாங்குபவர்கள் மற்றும் தொழில் துறையினர் இதனால் எதிர்கொள்ளவிருக்கும் நிதிச்சுமை கடந்த காலங்களை விட அதிகமாகவே இருக்கும் என்பதை தான் நிபுணர்கள் மறைமுகமாக கூறுகின்றனர். பொதுமக்கள் செலவுகளை குறைத்து சிக்கனமாக இருந்தால் தான் இந்த கடினமான காலத்தை எதிர்கொள்ள முடியும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+