ஹோம் லோன் வாங்கிருக்கீங்களா? வட்டி அதிகமா இருக்கா? லோன் ட்ரான்ஸ்ஃபர் இருக்கே! ஆனா இதை கவனிக்காம சிக்கிடாதீங்க!

ஹோம் லோன் பெற்றவர்களில் பலர்.. கையில் பணத்தை வாங்கும் வரைக்கும் தான் லோனைப் பற்றி சிந்திக்கின்றனர். அதன் பிறகு எவ்வளவு வாங்கினோம்? அதற்கு எவ்வளவு வட்டி செல்கிறது? என்பதை எல்லாம் மறந்துவிட்டு ஈஎம்ஐ செலுத்திக்கொண்டே வருகின்றனர். அவசர அவசரமாக லோன் பெறும்போது சிலர் பிற வங்கிகளில் கிடைக்கும் வட்டி விகிதத்தை கவனிப்பதே இல்லை.

எப்பொழுதும் லோன் வாங்கும்போது எந்த வங்கியில் வட்டி குறைவாக இருக்கிறது என்பதை வைத்து தான் லோன் பெற வேண்டும். அப்படி இல்லை என்றாலும் கவலைப்பட தேவையில்லை. அதற்காகத்தான் ஹோம் லோன் ட்ரான்ஸ்பர் என்ற ஆப்ஷன் இருக்கிறது.

ஹோம் லோன் ட்ரான்ஸ்ஃபர் என்றால் என்ன?: ஹோம் லோன் ட்ரான்ஸ்பர் என்றால் உங்களுடைய வீட்டுக் கடனை இன்னொரு வங்கிக்கு மாற்றுவது. நீங்கள் வாங்கி இருக்கும் வங்கியில் 8 சதவீதம் வட்டி விதிக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். வேறு ஒரு வங்கியில் 7 சதவீத வட்டியில் கடன் கிடைத்தால்.. நீங்கள் அந்த வங்கிக்கு உங்கள் கடனை மாற்றலாம். நீண்ட நாட்களுக்கு கடனைத் திருப்பி செலுத்தும் போது வட்டி விகிதத்தில் இருக்கும் சிறு வித்தியாசம் கூட.. பிற்காலத்தில் உங்களுக்கு பெரிய சேமிப்பைக் கொடுக்கும்.

ஹோம் லோன் வாங்கிருக்கீங்களா? வட்டி அதிகமா இருக்கா? லோன் ட்ரான்ஸ்ஃபர் இருக்கே! ஆனா இதை கவனிக்காம சிக்கிடாதீங்க!

தற்போது உங்கள் கடனை வேறு வங்கிக்கு மாற்றுகிறீர்கள் என்றால்.. அந்த புதிய கடன் வழங்குனர், நீங்கள் ஏற்கனவே வாங்கிய கடனை அடைத்து விடுவார், பிறகு நீங்கள் புதிதாக மாற்றிய வங்கிக்கு தொடர்ந்து ஈஎம்ஐ செலுத்த வேண்டும்.

நீங்கள் 9.25 சதவீத வட்டியில் வீட்டுக் கடன் ஈஎம்ஐ செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.. அதே சமயம் வேறு ஒரு வங்கி 8.25 சதவீத வட்டியில் கடன் வழங்கினால், நீங்கள் அந்த வங்கிக்கு தாராளமாக மாறலாம். 1 சதவீத வட்டி வித்யாசம் என்பது பார்ப்பதற்கு ன்னவோ சிறிய விஷயமாக தோன்றலாம். ஆனால் பல ஆண்டுகளுக்கு நீங்கள் ஈஎம்ஐ செலுத்தும் போது, அதிக தொகை மிச்சமாகும்.

டைமிங் ரொம்ப முக்கியம்: நீங்கள் கடன் பெற்று நீண்ட காலம் ஆகியிருந்தால் தொடர்ந்து நீங்கள் அந்த வங்கியிலேயே கடனை திருப்பிச் செலுத்தலாம். ஏனெனில் கடன் காலம் தொடங்கும் போதே வங்கிகள் அதிக வட்டியை வசூலித்துவிடும், பிறகு செல்லக்கூடிய தொகை அசலை கழிப்பதற்காகத்தான் இருக்கும். அப்படி இருக்கும்போது நீங்கள் வேறு ஒரு வங்கிக்கு மாற்றினால் அங்கு மீண்டும் முதலில் வட்டி எடுத்துக்கொண்ட பின் அசலை எடுப்பார்கள். இதற்கு பேசாமல் பருத்தி மூட்டை குடவுனிலேயே இருக்கலாம்.

வட்டியை மட்டும் பார்க்க கூடாது: வட்டியில் சிறு வித்தியாசம் இருந்தாலும்.. உங்களுக்கு சேமிப்பு அதிகமாகும் என்பது உண்மைதான். அதே நேரத்தில் உங்களுடைய கடனை வேறு வங்கிக்கு மாற்றும்போது நீங்கள் பிராசசிங் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களையும் செலுத்த வேண்டும். இன்னும் சில வங்கிகளில் கூடுதலாக இன்சூரன்ஸ் மற்றும் எக்ஸ்ட்ரா கட்டணங்களும் விதிக்கப்படுகின்றன. இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் செலவுக்கே ஒரு தொகையை கொடுக்க வேண்டி வரும். இதுபோன்ற சூழலில் வேறு வங்கிக்கு கடனை மாற்றினாலும் எந்தப் பயனும் இருக்காது. எனவே உங்கள் ஹோம் லோனை ட்ரான்ஸ்பர் செய்யும் போது எந்தெந்த கட்டணங்களுக்கு பணம் கேட்கப்படுகிறது. இன்னொரு வங்கிக்கு சென்றால் சேமிக்க முடியுமா? என்பதையெல்லாம் பொறுத்து மாற்ற வேண்டும்.

கையெழுத்து போடுவதற்கு முன் நிபந்தனைகளை சரி பாருங்கள்: பேங்க் லோன் ட்ரான்ஸ்ஃபர் செய்ய முடிவு எடுத்து விட்டால் எல்லா நிபந்தனைகளையும் படித்து பார்க்க வேண்டும். ஏனெனில் இன்று குறைந்த வட்டி இருப்பது எப்போதும் அதேபோல இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. சில கடன் வழங்குநர்கள் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக இது போன்ற குறைந்த வட்டியைக் கூறுவார்கள். ஆனால் நீங்கள் லோன் எடுத்த பிறகு இந்த வட்டியில் மாற்றம் இருக்கலாம். ஏனெனில் பல வங்கிகள் ஃப்ளோட்டிங் ரேட் முறையில் கடன்களை வழங்குகின்றன. ஃபிக்சட் ரேட் என்றால் உங்கள் கடன் காலம் முழுவதும் வட்டி மாறாது. ஃப்ளோட்டிங் ரேட்டில் வங்கிகள் தங்களுக்கு தகுந்தாற்போல் வட்டியை மாற்றி அமைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+