இந்திய ரிசர்வ் வங்கி 2024-25 ஆம் நிதியாண்டின் முதல் இருமாத நாணயக் கொள்கை கூட்டத்தை ஏப்ரல் 3 ஆம் தேதி துவங்கிய நிலையில் இன்று கூட்டத்தின் முடிவுகள் வெளியானது.
சந்தை கணிப்புகளுக்கு ஏற்ப ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றத்தையும் ஆர்பிஐ அறிவிக்கவில்லை, இதன் மூலம் 7வது முறையாக வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்கிறது.

நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் வட்டி விகிதம் மாற்றம் குறித்து வழக்கமாகச் செய்யப்படும் வாக்கெடுப்பில் 6ல் 5 பேர் வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டாம் என அறிவித்ததைத் தொடர்ந்து வட்டி விகிதம் மாற்றப்படவில்லை. அடுத்த 2 மாதத்திற்கு ரெப்போ விகிதம் 6.50 சதவீதமாக இருக்கும்.
ரெப்போ விகிதத்தைத் தொடர்ந்து MSF விகிதம் 6.75 சதவீதமும், SDF 6.25 சதவீத அளவீட்டையும் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டின் விலைவாசி ஏற்படும் தடுமாற்றங்கள் குறைந்தால் மட்டுமே வட்டி விகிதத்தைக் குறைக்க முடியும் எனத் தெரிவித்தார்.
இதனால் வங்கியில் வீட்டு கடன், வாகன கடன், பர்சனல் லோன், நகை கடன் என அனைத்து விதமான கடன்களின் வட்டி விகிதம் மாறப்போவது கிடையாது. வட்டி விகிதம் மாறாத பட்சத்தில் மக்கள் தங்களுடைய கடனுக்கான ஈஎம்ஐ மாறாது.
மேலும் வங்கிகள் கூடுதலான நிதி ஆதாரம் வேண்டும் என நினைத்தால் ரெப்போ விகித அறிவிப்புக்குப் பின்பு வைப்பு நிதி மூலம் கூடுதல் நிதியை திரட்ட டெபாசிட் திட்டத்தின் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புகள் உள்ளது. இந்தியாவின் வர்த்தக சந்தை சிறப்பாக இருக்கும் வேளையில் வங்கிகளுக்கு அதிகப்படியான கடன் கொடுக்கக் கூடுதல் நிதி ஆதாரம் அவசியமாக இருக்கும்.
ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகள் பங்குச்சந்தையைத் துளியும் பாதிக்கவில்லை, சென்செக்ஸ் இன்றைய வர்த்தகம் துவக்கத்தில் இருந்த படியே 80 புள்ளிகள் சரிவில் உள்ளது. தற்போது சென்செக்ஸ் குறியீடு 86.33 புள்ளிகள் சரிந்து, 74,141.30 புள்ளிகள் அளவில் உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications