பலருக்கும் தங்களுடைய கனவு வீட்டை எப்படியாவது கட்டிவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்காக பட்ஜெட் இல்லாதவர்கள் நாடுவது வங்கி கடன்களை தான். இந்நிலையில் வங்கி கடன் வாங்கியவர்களுக்கு இனிப்பான செய்தி ஒன்று 2025-ஆம் ஆண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் ரெப்போ வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் வங்கிகளும் கடனுக்கு வழங்கும் வட்டி விகிதத்தை குறைக்கும்.
2025-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் நடக்கவிருக்கும் நிதி கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் விகிதத்தை குறைந்தபட்சம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். 2025-ஆம் ஆண்டில் பிப்ரவரி, ஏப்ரல், ஜூன், ஆகஸ்ட், அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சுமார் 6 நிதி கொள்கை கூட்டங்களை நடத்தவுள்ளது.

இதில் சுமார் நான்கு கூட்டங்களில்.. ஒவ்வொரு முறைக்கும் 25 அடிப்படை புள்ளிகள் வீதம் மொத்தம் 100 அடிப்படை புள்ளிகள் ரெப்போ விகிதம் குறைக்கப்படும் என்று நிபுணர்கள் கருத்துள்ளனர். இந்த ஆண்டில் RBI-யால் 100 அடிப்படை புள்ளிகள் ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டால் கடன் வாங்குபவர்களுக்கு அது நிவாரணம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 6-ஆம் தேதி அன்று நடந்த பணவியல் கொள்கை மதிப்பாய்வில் ரிசர்வ் வங்கி 11-வது முறையாக அதன் பெஞ்சு மார்க் விகிதத்தை 6.5 சதவீதமாக அப்படியே வைத்திருக்க முடிவு செய்துள்ளது. ஆனால் 2025-ஆம் ஆண்டு ரெப்போ வட்டி விகிதம் குறையும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஆர்பிஐ சுமார் 25 அடிப்படை புள்ளிகள் வீதம் 2 வட்டி விகிதக் குறிப்புகளை செயல்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இது ரெப்போ விகிதத்தை 6 சதவீதம் குறைக்கும்.
ஜப்பானிய முதலீட்டு வங்கியான நோமுரா 2025-ஆம் ஆண்டில் ஆர்பிஐ 100 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி விகிதத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கிறது. இது கடன் வாங்கியவர்களுக்கு நிவாரணத்தை வழங்கும்.
100 அடிப்படை புள்ளிகள் ரெப்போ ரேட் குறைந்தால் வீட்டு கடன் இஎம்ஐ வெகுவாக குறையும். தற்போது முன்னணி வங்கிகள் வீட்டுக் கடனுக்கு 9.75 சதவீதம் வரை வட்டி வசூலிக்கின்றன. உதாரணமாக 9.25% வட்டி விகிதத்தில் 20 ஆண்டுகளுக்கு ஒருவர் ரூ.50 லட்சம் கடன் வாங்கி இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு மாதம் 45,793 ரூபாய் இஎம்ஐ செலுத்தி வருகிறார் என்றால் வட்டி விகிதம் 1 சதவீதம் குறைந்தால் இஎம்ஐ தொகை ரூ.42,603 ஆகக் குறையும். இதன் மூலம் மாதம் ரூ.3190 வரை சேமிக்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications