உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

ஈரான் போர் இந்தியாவில் எல்பிஜி தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக ஹோட்டல்களில் உணவுகளின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. டீ , காபி உள்ளிட்டவற்றின் விலைகள் உயர்ந்திருக்கின்றன. விரைவில் பெயிண்ட், சோப் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை விரைவில் உயரப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஈரான் போர் நேரடியாக சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையிலேயே தாக்கத்தை ஏற்படுத்தி வரக்கூடிய சூழல் நம்முடைய வீட்டுக் கடனிலும் மாற்றத்தை கொண்டு வர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவடைந்து இருக்கிறது , இந்தியாவிற்கு எரிபொருள் வரத்து நின்று போய் விட்டது. இதன் காரணமாக இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் அதிக ரூபாய் கொடுத்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டிய நிலை உண்டாகி இருக்கிறது.

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

இதனால் நாட்டின் வெளிநாட்டு கரன்சி இருப்பிலிருந்து டாலரின் அளவு படிப்படியாக குறைந்த வண்ணம் இருக்கிறது. இப்படி ஈரான் போர் நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த சூழலில் தான் மிக முக்கியமான இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம் அடுத்த வாரம் நடைபெறுகிறது. ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கக்கூடிய இந்த கூட்டம் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் ரிசர்வ் வங்கி ஆளுநர் தலைமையிலான அதிகாரிகள் நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலை குறித்து விரிவான ஆலோசனையை நடத்துவார்கள். ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா 8ஆம் தேதி காலை 10 மணிக்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளிப்பார். அப்போது இந்த நிதி கொள்கை குழு கூட்டத்தில் எடுத்த முடிவுகளை அறிவிப்பார்.

வழக்கமாகவே நிதி கொள்கை குழு கூட்டம் என்றாலே ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படுமா? நம்முடைய வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி குறைக்கப்படுமா என்பதுதான் கோடிக்கணக்கான இந்தியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். அந்த வகையில் போர் காரணமாக கொள்கை ரீதியிலான மற்றும் ரெப்போ வட்டி ரீதியான சில முக்கிய முடிவுகளை இந்திய ரிசர்வ் வங்கி எடுப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆறு பேர் கொண்ட ரிசர்வ் வங்கி குழு 2027 ஆம் நிதி ஆண்டின் முதல் நாணய கொள்கை குழு கூட்டத்தை நடத்துகிறது. கடந்த ஆண்டில் 1.25% வரை ரெப்போ வட்டியை குறைத்த ரிசர்வ் வங்கி இந்த ஆண்டிலும் அதே போன்ற நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் போர் காரணமாக அப்படி ஒரு நடவடிக்கைக்கு வாய்ப்பில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். ரெப்போ வட்டி விகிதம் தற்போதுள்ள 5.25% என்ற நிலையிலேயே நீட்டிக்கச் செய்யலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரெப்போ வட்டி விகிதம் தற்போதுள்ள நிலையிலேயே நீட்டிக்கப்படுகிறது எனும் போது நம்முடைய வீட்டு கடன், வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் தற்போதுள்ள அதே அளவிலேயே நீடிக்கும். ஒருவேளை நிலைமையை சரி செய்ய வட்டி உயர்த்தப்பட்டால் வீட்டு கடன் ,வாகன கடன் வட்டி உயரும். தற்போதைக்கு வட்டி குறைப்புக்கான வாய்ப்பு இல்லை. எனவே அடுத்த வாரம் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடக்கூடிய அறிவிப்புதான் நம்முடைய வீட்டுக் கடன் , வாகன கடன்கள் மீதான வட்டியின் நிலையை தீர்மானிக்க போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+