சென்னை: இந்தியாவில் தற்போது 75 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட வீட்டு கடன்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்திருப்பதாக அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் குடியிருப்புகள் சார்ந்த ரியல் எஸ்டேட் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக இந்த நகரங்களில் எல்லாம் வீடுகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது.
பிரீமியம் மற்றும் ஆடம்பர வீடுகளை வாங்குபவர்களின் எண்ணிக்கை நகரங்களில் அதிகரித்திருப்பதாக தெரிகிறது. அதேவேளையில் வீட்டு கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. குறிப்பாக 75 லட்சம் ரூபாய்க்கும் மேல் மதிப்பு கொண்ட வீட்டுக் கடன்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்திருக்கிறது. 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 75 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட வீடுகளை வாங்க கடன் வாங்குபவர்கள் எண்ணிக்கை 19 சதவீதமாக இருந்து 2024 ஆம் ஆண்டில் அது 31.4 சதவீதம் என அதிகரித்துள்ளது.

அண்மையில் Knight frank இந்தியா என்ற நிறுவனம் இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறை மற்றும் குடியிருப்புகள் விற்பனை தொடர்பான அறிக்கையை வெளியிட்டது. இதன்படி இந்தியாவில் வீட்டு கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இது இந்தியாவில் வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதையே காட்டுகிறது என அறிக்கை கூறுகிறது.
குறிப்பாக 1 கோடி ரூபாய்க்கும் மேல் அதிக மதிப்பு கொண்ட வீடுகளை வாங்குபவர்களின் எண்ணிக்கை 41% என அறிக்கை கூறுகிறது. 75 லட்சம் ரூபாய்க்கும் மேல் மதிப்பு கொண்ட வீடுகளின் விற்பனை 2021 ஆம் ஆண்டில் 20 சதவீதமாக இருந்து 2022 ஆம் நிதி ஆண்டில் 24 சதவீதம் எனவும் 2023 ஆம் நிதி ஆண்டில் 27.3% எனவும் அதிகரித்துள்ளது.
வீட்டு கடன்களை பொறுத்தவரை 75 லட்சம் ரூபாய்க்கும் கீழ் வழங்கப்பட்ட கடன்கள் பெரும்பாலும் பொதுத்துறை வங்கிகளில் இருந்தும், 75 லட்சம் ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்ட வீட்டுக் கடன்களில் பெரும்பாலும் தனியார் வங்கிகளில் இருந்தும் வழங்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. 35 லட்சம் ரூபாய்க்கும் கீழ் இருக்கும் வீடு சார்ந்த கடன்கள் வீட்டுக் கடன் நிதி நிறுவனங்களில் தான் அதிக அளவில் வழங்கப்படுவதாக தெரிகிறது.
கடந்த மார்ச் மாத நிலவரத்தின் படி இந்தியாவில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் நிலுவையில் இருக்கும் வீட்டுக் கடன்களின் மொத்த மதிப்பு 36.2 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இந்தியாவில் தற்போது பொதுத்துறை வங்கிகளில் 8.35 சதவீதம் முதல் அதிகபட்சமாக 11.15 சதவீதம் வரை வட்டி விகிதத்தில் வீட்டு கடன்களை வழங்குகின்றன.
Story written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications