இந்திய மக்களின் பெரும்பாலானவர்களின் கனவு என்றால் சொந்த வீடு தான்.
இந்தச் சொந்த வீட்டை அடைய சில வருடங்கள் முன் வரையில் பணத்திற்காகவும், பெரும் சேமிப்பு தொகைக்காகவும், வெளிநாட்டில் இருந்து அப்பா, அண்ணன் போன்றோர் அனுப்பும் பணம் வைத்து சொந்து வீடு வாங்கவோ கட்டவோ வேண்டும்.
இப்போ ரொம்ப ஈசி
ஆனால் இப்போது வீட்டுக் கடன் என்பது அனைத்து தரப்பினருக்கும், அனைத்து வருமான அளவுகள் கொண்டவருக்கும் கிடைக்கும் காரணத்தால் நீண்ட காலம் சொந்த வீடு வாங்கக் காத்திருக்கும் நிலை மாறியுள்ளது.
வீட்டுக் கடன் வட்டி விகிதம்
இதற்கு ஏற்றார் போல் கடந்த 4 வருடமாகவே வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவாக இருந்த காரணத்தாலும், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அதிகப்படியான தள்ளுபடி, சலுகைகளை அளித்து வந்த காரணத்தால் விற்பனை சூடுபிடித்தது.
ஆனால் இப்போது நிலைமை மொத்தமாக மாற்றியுள்ளது.
ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து அதிகரித்து வரும் ரெப்போ விகிதம் காரணமாக வீட்டு கடன் வட்டி விகிதம் அனைத்து வங்கிகளிலும் அதிகரித்து வருகிறது. இதனால் 2-3 வருடத்திற்கு முன்பு 20 வருடம் ஹோம் லோன் வாங்கியவர்களுக்குத் தற்போது கடனுக்கான காலம் 24 வருடமாக உயர்ந்துள்ளது.
ஹோம் லோன் ஈஎம்ஐ
இதேபோல் சிலருக்கு ஹோம் லோன் ஈஎம்ஐ தொகை அதிகரித்தும் உள்ளது. எதனால் இந்த மாற்றம்..? யாருக்கெல்லாம் கடனுக்கான காலம் அதிகரித்துள்ளது..? யாருக்கெல்லாம் கடனுக்கான EMI அதிகரித்துள்ளது..? வாங்கப் பார்ப்போம்.
ரெப்போ விகித உயர்வு
ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தை ஏப்ரல் மாதத்தில் இருந்து செப்டம்பர் வரையில் 4 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதேவேளையில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 6.7 சதவீதத்தில் இருந்து 8.6 சதவீதம் வரையில் உயர உள்ளது. இதனால் 20 வருட ஹோம் லோனுக்கு ஈஎம்ஐ தொகை 7574 ரூபாயில் இருந்து 8741 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.
கடன் காலம் உயர்வு
இந்த நிலையில் வட்டி உயர்வை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குச் சுமை அளிக்கக் கூடாது என்பதற்காகக் கடனுக்கான ஈஎம்ஐ தொகையை அதிகரிக்காமல் கடனுக்கான காலத்தை வட்டி உயர்வுக்கு ஏற்ப 21 முதல் 25 வருடம் வரையில் அதிகரித்துள்ளது. இது கிரெடிட் ஸ்கோர், ஈஎம்ஐ தொகை, கடன் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் மாறும்.
ஈஎம்ஐ தொகை அதிகரிப்பு
இதுவே கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தாலோ, வீட்டுக் கடனுக்கான காலம் 25 வருடம் முதல் 30 வருடமாக இருந்தாலோ உங்களது ஈஎம்ஐ தொகை அதிகரித்திருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த நிலையில் ஈஎம்ஐ சுமையைக் குறைக்க அசல் தொகையைக் குறைப்பதன் மூலம் சரி செய்ய முடியும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications