இந்திய ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து 5.25 சதவீதமாக மாற்றியது எல்லோருக்கும் தெரியும். இந்த மாற்றம் எப்போது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்த்த பலருக்கு அடுத்தடுத்து வங்கிகள் சர்ப்ரைஸ் கொடுக்க துவங்கியுள்ளது.
2025ஆம் ஆண்டில் மட்டும் ஆர்பிஐ நான்காவது முறையாக ரெப்போ விகிதத்தை குறைத்துள்ளது, இதன் மூலம் இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 1.25 சதவீதம் அளவிலான ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வீட்டுக் கடன், வாகன கடன், பர்சனல் லோன் என அனைத்து கடன்களின் மீதான வட்டி விகிதம் குறைந்து ஈஎம்ஐ குறைய உள்ளது.
ஆனால் இந்த வட்டி குறைப்பு ப்ளோட்டிங் வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடன்களுக்கு மட்டும் தான் வட்டி குறைப்பு நடக்கும். பல முக்கிய வங்கிகள் உடனடியாக தங்கள் கடன் விகிதங்களை குறைத்துள்ளன.

6 வங்கிகளின் வட்டி குறைப்பு:
HDFC பேங்க் தனது MCLR அளவை 5 அடிப்படை புள்ளிகள் குறைத்ததுள்ளது. இதன் மூலம் பழைய விகிதம் 8.35-8.60 சதவீதமாக இருந்தது, இப்போது 8.30-8.55 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
பஞ்சாப் நேஷனல் பேங்க் (PNB) தனது ரெப்போ லிங்க்ட் லெண்டிங் ரேட் (RLLR)யை 8.35 சதவீதத்தில் இருந்து 8.10 சதவீதமாக குறைத்தது. இது டிசம்பர் 6 முதல் அமலுக்கு வந்தது.
பேங்க் ஆஃப் பரோடா (BoB) தனது பெஞ்ச்மார்க் ரீடெயில் லோன் லெண்டிங் ரேட் (BRLLR)யை 8.15 சதவீதத்தில் இருந்து 7.90 சதவீதமாக குறைத்தது.
இந்தியன் பேங்க் தனது RLLRயை 8.20 சதவீதத்தில் இருந்து 7.95 சதவீதமாக குறைத்தது. இது டிசம்பர் 6 முதல் அமலில் உள்ளது.
பேங்க் ஆஃப் இந்தியா (BOI) தனது ரெப்போ பேஸ்ட் லெண்டிங் ரேட் (RBLR)யை 8.35 சதவீதத்தில் இருந்து 8.10 சதவீதமாக குறைத்தது. இது டிசம்பர் 5 முதல் செயல்படுத்தப்பட்டு உள்லது.
பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா தனது வீட்டுக் கடன் விகிதங்களை 7.35 சதவீதத்தில் இருந்து 7.10 சதவீதமாக, கார் கடன் விகிதங்களை 7.70 சதவீதத்தில் இருந்து 7.45 சதவீதமாக குறைத்தது. கூடுதலாக இந்த கடன்களுக்கு செயலாக்கக் கட்டணமும் (processing fee) தள்ளுபடி செய்யப்பட்டது.
EMI குறைப்பு:
RBI ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு கடன் வாங்கியர்களுக்கு நேரடி பயனை தரும். பிளோட்டிங் ரேட் கடன்கள் (floating rate) ரெப்போ விகிதத்துடன் இணைந்துள்ளதால், வங்கிகள் விகிதங்களை குறைத்ததன் மூலம் EMI குறையும் அல்லது கடன் காலம் குறையும்.
உதாரணமாக, ரூ.35 லட்சம் வீட்டுக் கடன், 20 ஆண்டுக்கு காலத்திற்கு, EMI ரூ.1,850 குறையலாம். இது வீட்டு வாங்கியர்கள், கார் வாங்கியர்கள், தனிப்பட்ட கடன் வாங்கியர்களுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும். அதேபோல் இந்த ஈஎம்ஐ குறைப்பு என்பது ப்ளோட்டிங் ரேட் உடன் இணைக்கப்பட்ட கடன்களுக்கு மட்டுமே.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications