2026-ஆம் ஆண்டின் அக்டோபர் 7-ஆம் தேதி அன்று ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் ரெப்போ விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டது. இதனால் ஆர்பிஐ வழங்கும் கடன்களுக்கான ரெப்போ விகிதம் 5.50 சதவீதமாக அதிகரித்துள்ளது. சுமார் மூன்று நாட்கள் நடைபெற்ற கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து நாட்டின் முன்னணி வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கும் வட்டி விகிதம் உயர்ந்துள்ளன.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, கனரா பேங்க் போன்ற முன்னணி வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கும் அக்டோபர் மாதம் முதல் வட்டி விகிதம் அதிகரித்துள்ளது.
ரெப்போ விகிதம் மாற்றப்பட்டுள்ளதால் ஏற்கனவே கடன் பெற்ற நபர்கள் மற்றும் புதிதாக கடன் வாங்க திட்டமிடுபவர்கள் தற்போதைய வட்டி விகிதங்களை தெரிந்து கொள்வது அவசியம்.

ரெப்போ விகிதம் என்றால் என்ன?: ரெப்போ விகிதம் என்பது நமக்கு தேவைப்படும் நேரத்தில் நாம் எப்படி வங்கிகளில் கடன் பெறுகிறோமோ? அதே போல வங்குகளும் ரிசர்வ் வங்கியிடம் கடன் பெறும். அதற்கு ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் வட்டி விகிதம் தான் இந்த ரெப்போ விகிதம். நம் நாட்டின் பொதுத்துறை வங்கிகள் ரெப்போ விகிதத்தின் அடிப்படையில் கடன் வழங்குகின்றன.
வட்டி விகிதம் அதிகரித்துள்ள 6 முக்கிய வங்கிகளின் பட்டியல்:
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா: அக்டோபர் 15, 2026 முதல் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஈபிஎல்ஆர் விகிதத்தை 7.90 சதவீதத்திலிருந்து 8.15 சதவீதமாக அதிகரித்துள்ளது. ரெப்போ விகிதத்தின் அடிப்படையில் வழங்கப்படும் கடன்களுக்குகான வட்டி விகிதம் 7.50 சதவீதத்திலிருந்து 7.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதத்தோடு சேர்த்து சிஆர்பி மற்றும் பெஞ்ச்மார்க் ஸ்ப்ரெட் ஆகியவை கூடுதலாக இருக்கும்.
பஞ்சாப் நேஷனல் பேங்க் (PNB): அக்டோபர் 8 முதல், ரெப்போ விகிதத்தின் அடிப்படையில் வழங்கப்படும் கடன்களுக்குகான வட்டி விகிதம் 8.10 சதவீதத்திலிருந்து 8.35 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பேங்க் ஆஃப் இந்தியா: அக்டோபர் 7 முதல், ரெப்போ விகிதக் கடன்களுக்கான வட்டி 8.10 சதவீதத்திலிருந்து 8.35 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியன் பேங்க்: 7.95 சதவீதத்திலிருந்து 8.20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பேங்க் ஆஃப் பரோடா: அக்டோபர் 8 முதல், 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடன் பெற்றவர்களுக்கு என்ன பிரச்சனை ஏற்படும்?: எப்போதெல்லாம் ரெப்போ ரேட் அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் கடன் பெற்றவர்களுக்கும் வட்டி அதிகரிக்கும். இந்த வட்டி விகிதம் நீங்கள் கடன் பெற்ற வங்கியைப் பொறுத்து மாறுபடும். வங்கி வட்டி விகிதத்தில் செய்கின்ற மாற்றங்களுக்கு ஏற்ப உங்கள் ஈஎம்ஐ தொகையும் அதிகரிக்கலாம் அல்லது கடன் காலம் நீட்டிக்கப் படலாம்.
எனவே கடன் பெறுபவர்கள், வங்கிகள் ஆரம்பத்தில் விதிக்கும் வட்டி விகிதம் தான் இறுதி வரை இருக்கும் என்று நினைக்கக் கூடாது. ஒரு சில நேரங்களில் ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டால் அப்போது நீங்கள் கூடுதலாக வட்டி செலுத்த வேண்டி வரும்.


Click it and Unblock the Notifications
