ஹோம் லோன் வாங்குற பிளான் இருக்கா? குறைந்த வட்டியில் கடன் தரும் டாப் வங்கிகள் இதுதான்!

சொந்த வீடு என்பது இங்கு பலரின் கனவு. அந்தக் கனவை நினைவாக்க பல வங்கிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஹோம் லோன்களை வழங்கி வருகின்றன. லோன் பெற்று தான் வீடு கட்ட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் ஒரே ஒரு வங்கியை மட்டும் நம்பி இருக்கக் கூடாது. எந்த வங்கியில் வட்டி குறைவாக இருக்கிறது என்பதை ஒன்றுக்கு இருமுறை ஒப்பிட்டு பார்த்து அதன் பிறகு தான் கடன் பெற வேண்டும். வட்டி விகிதங்களில் இருக்கும் சிறு வித்தியாசம் கூட உங்களுடைய ஈஎம்ஐ குறைய உதவியாக இருக்கும்.

ஏப்ரல் மாதத்திற்கு ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 5.25 சதவீதமாக வைத்திருக்க திட்டமிட்டுள்ளது. ரெப்போ விகிதம் என்பது எப்படி நமக்கு தேவைப்படும் போது நாம் வங்கிகளிடம் கடன் பெறுகிறோமோ? அதே போல வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கடன் பெறும். இந்த விகிதம் தான் ரெப்போ விகிதம் என்று கூறப்படுகிறது.

ரெப்போ விகிதம் அதிகரிக்கும் பொது வங்கிகள் நமக்கு கடன் தரும் வட்டி விகிதமும் சற்று அதிகரிக்கும். அதுவே ரெப்போ விகிதம் குறைந்தால் வங்கிகள் குறைந்த வட்டியில் கடன்களை வழங்கும். தற்போது பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சிறந்த வட்டியில் ஹோம் லோன்களை வழங்குகின்றன.

ஹோம் லோன் வாங்குற பிளான் இருக்கா? இதை படிங்க!

பொதுத்துறை வங்கிகள்:

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா: 7.25 சதவீதம் முதல் 8.95 சதவீதம் வரை
பேங்க் ஆஃப் பரோடா: 7.20 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா: 7.15 சதவீதம் முதல் 9.60 சதவீதம் வரை
பஞ்சாப் நேஷனல் பேங்க்: 7.25 சதவீதம் முதல் 9.30 சதவீதம் வரை
பேங்க் ஆஃப் இந்தியா: 7.10 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை
கனரா பேங்க்: 7.25 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை

தனியார் வங்கிகள்:

கோடக் மகேந்திரா பேங்க்: 7.6 சதவீதம் முதல் ஹோம் லோன் வழங்குகிறது:
ஐசிஐசிஐ பேங்க்: 7.50 சதவீதம் முதல் ஹோம் லோன் வழங்குகிறது.
ஆக்சிஸ் பேங்க்: 8 சதவீதம் முதல் 11.90 சதவீதம் வரை
HSBC பேங்க்: 7.45 சதவீதம் முதல் ஹோம் லோன் வழங்குகிறது.
சவுத் இந்தியன் பேங்க்: 7.20 சதவீதம் முதல் ஹோம் லோன் வழங்குகிறது.
கரூர் வைசியா பேங்க்: 8.50 சதவீதம் முதல் 10.65 சதவீதம் வரை

ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனங்கள்:

LIC ஹவுசிங் பைனான்ஸ்: 7.15 சதவீதம் முதல் லோன் வழங்குகிறது.
பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ்: 7.2 சதவீதத்திலிருந்து வழங்குகிறது.
டாட்டா கேப்பிட்டல்: 8 சதவீதம் முதல் ஹோம் லோன் வழங்குகிறது.
PNB ஹவுசிங் பைனான்ஸ்: 7.50 சதவீதம் முதல் கடன் வழங்குகிறது.
GIC ஹவுசிங் பைனான்ஸ்: 8.20 சதவீதத்திலிருந்து கடன் வழங்குகிறது

லோன் பெற நினைப்பவர்கள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் வங்கிகளை தேர்ந்தெடுப்பது நீண்ட கால நிதி நலனுக்கு ஏற்றது. ஒரு வேலை நீங்கள் ஏற்கனவே லோன் பெற்றிருந்தால் லோன் ட்ரான்ஸ்ஃபர் குறித்தும் பரிசீலனை செய்யலாம். லோன் ட்ரான்ஸ்ஃபர் என்பது வட்டி குறைவாக இருக்கும் பட்சத்தில் ஒரு வங்கியில் பெற்றிருக்கும் கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றுவது. நீங்கள் ஏற்கனவே கடன் பெற்ற வங்கியில் அதிக வட்டி செலுத்தி கொண்டிருந்தால் இந்த ஆப்ஷனைப் பயன்படுத்தி பலனடையலாம்.

லோன் ட்ரான்ஸ்பர் செய்யும் போது நீங்கள் ஏற்கனவே கடன் பெற்றிருக்கும் வங்கிக்கும் நீங்கள் புதியதாக கடன் பெற விண்ணப்பிக்கும் வங்கிக்கும் 0.5% முதல் 1 சதவீதம் வரை வட்டி வித்யாசம் இருக்கிறதா? என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை அப்படி இல்லை என்றால் ட்ரான்ஸ்ஃபர் கட்டணத்திற்கே அதிக செலவு செய்ய வேண்டி வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+