பெரும்பான்மை கமர்ஷியல் வங்கிகள் வீட்டுக் கடன்களுக்கு ஃப்ளோட்டிங் விகிதத்தை ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்துக்கு ஏற்றபடி வழங்குகின்றன. வயது, தகுதி, வருவாய், நிலைத்தன்மை, நீடிக்கும் வாய்ப்பு, வேலை, சொத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் கடன்கள் கிடைக்கும்.
கடன் தரும் வங்கியைப் பொறுத்து உங்களது வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் அமையும். வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து நடப்பில் இருக்கும் பெஞ்சுமார்க் ரேட்டைக் காட்டிலும் சிறிது அதிக ரிஸ்க் பிரீமியத்தை வசூலிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

உங்களது சிபில் ஸ்கோர் மற்றும் பிற விஷயங்களை வைத்து உங்களுக்கான ரிஸ்க் பிரீமியம் நிர்ணயிக்கப்படுகிறது. கடனை திரும்பச் செலுத்துவதற்கான மாதாந்திர இஎம்ஐயில் அசல் மட்டும் வட்டி சேர்ந்திருக்கும். முழு தொகையும் பெறப்பட்ட அடுத்த மாதத்திலிருந்து உங்களது மாதாந்திர இஎம்ஐ தொடங்கும்.
ஃப்ளோட்டிங் விகிதத்தின் படி மார்க்கெட் வட்டி விகிதம் மாற்றத்தின் கீழ் மாதாந்திர இஎம்ஐ மாறும். சந்தை நிலவரத்தின்படி நீங்கள் திரும்பச் செலுத்தும் தொகை அதிகரிக்கலாம். உங்களது நிலுவை தொகை வட்டிவிகிதம் அதிகரிக்கும்போது அதிகரிக்கும்.
வங்கிகள் மற்றும் கடன் தரும் அமைப்புகள் சில ஹோம் லோன்களுக்கு ஒருமுறை கட்டணம் வசூலிக்கும்.
இதை வாடிக்கையாளர்கள் தனியாகத்தான் செலுத்த வேண்டும். கடன் தொகையில் இதை கழிக்க மாட்டார்கள். லோன் பிராசஸ் செய்வதற்காக வங்கிகள் செய்யும் செலவை இந்தக் கட்டணத்தின் மூலம் ஈடுகட்டுவார்கள். சில சமயங்களில் வங்கிகள் இந்தக் கட்டணத்தை ரத்து செய்யும்.
பேங்க் ஆப் பரோடா வெப்சைட்டில் இருப்பது படி கீழ்க்கண்ட சில கட்டணங்கள் ப்ராஸசிங் தொகையாக செலுத்த வேண்டியிருக்கும்:
-டாக்குமெண்ட் சரிபார்த்தல்
-ப்ரி சாங்ஷன் இன்ஸ்பெக்ஷன்
-ஒருமுறை போஸ்ட் இன்ஸ்பெக்ஷன் சார்ஜ்
-சட்ட அறிவுரைக்கான வழக்குரைஞர் கட்டணம்
-மதிப்பீட்டாளர் கட்டணம்
-பியூரோ ரிப்போர்ட் கட்டணம்
-CERSAI கட்டணம்
-இன்கம்டாக்ஸ் ரிட்டர்ன் சரிபார்த்தல் கட்டணம்
ஹோம் லோன்கள் பற்றி ரிசர்வ் வங்கி கூறுகையில், பெரும்பாலான வங்கிகள் மொத்த தொகையை செலுத்துவதன் மூலம் கால அட்டவணைக்கு முன்னதாக கடனை திருப்பிச் செலுத்த அனுமதிக்கின்றன.
இருப்பினும், பல வங்கிகள் அசல் தொகையில் 2-3% வரை முன்கூட்டியே திருப்பிச் செலுத்துவதற்கான அபராதம் விதிக்கின்றன. முன்கூட்டியே செலுத்தும் அபராதம் காரணங்கள் மற்றும் நிதி ஆதாரங்களின்படி மாறுபடலாம் - முன்பணம் செலுத்துவதற்காக நீங்கள் வேறொரு வங்கியிலிருந்து கடனைப் பெற்றால், உங்கள் சொந்த ஆதாரங்களில் இருந்து செலுத்தும் கட்டணத்தை விட கட்டணம் பொதுவாக அதிகமாக இருக்கும்.
எனவே வீட்டுக் கடன்களை வாங்கும்போது பல்வேறு வங்கிகளின் வட்டிவிகிதங்களை சரிபார்த்து அதில் எது குறைவானதோ அங்கு வீட்டுக் கடன்களை வாடிக்கையாளர்கள் வாங்குவது புத்திசாலித்தனமான காரியமாகும்.
டாப் 10 வங்கிகள்
HDFC வங்கி - 8.50% முதல் 9.40% வரை
இந்தியன் வங்கி - 8.50% முதல் 9.90% வரை
பஞ்சாப் நேஷனல் வங்கி - 8.50% முதல் 10.10% வரை
இண்டஸ்இந்த் வங்கி - 8.50% முதல் 10.55% வரை
பேங்க் ஆஃப் இந்தியா - 8.50% முதல் 10.60% வரை
ஐடிபிஐ வங்கி - 8.55% முதல் 10.75% வரை
மகாராஷ்டிரா வங்கி - 8.60% முதல் 10.30% வரை
பேங்க் ஆஃப் பரோடா - 8.60% முதல் 10.50% வரை
எஸ்பிஐ டர்ம் கடன் - 8.70% முதல் 9.65% வரை
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா - 8.70% முதல் 10.8 வரை


Click it and Unblock the Notifications